கடந்த சில வாரங்களாகவே சீனா முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேவருகிறது. இதனால், சீனாவின் பல மாகாணங்களில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த வாரம் வியாழக்கிழமை (நவ.24) அன்று, ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்கி பகுதியிலுள்ள உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. அந்தக் குடியிருப்பின் ஒரு பகுதி கொரோனா கட்டுப்பாடுகளுக்காகப் பூட்டப்பட்டிருந்தது. இதனால், மக்கள் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டதோடு, 10 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.சீனா போராட்டம் உரும்கி தீ விபத்து சம்பவம் குறித்த செய்திகள் சீனா முழுவதும் பரவ, அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என சீன மக்கள் போராடிவருகின்றனர். ஷாங்காய் நகரில் நடைபெற்ற போராட்ட நிகழ்ச்சியைப் படம் பிடிக்க பிரபல தனியார் செய்தி நிருபரான லாரன்ஸ் சென்றபோது, அவரை காவல்துறை கைதுசெய்து, அடித்து சித்திரவதை செய்து அதன் பிறகே விடுவித்திருக்கிறது. இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது வெளியுறவுக் கொள்கை குறித்த முதல் முக்கிய உரையில், "பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்...