Skip to main content

``அதிகாரிகள் கேட்ட லஞ்சத்தை நானே மொத்தமா தர்றேன்" - சிவகாசி மாநகராட்சிக் கூட்டத்தில் பரபரப்பு வாதம்

சிவகாசி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. ஆரம்ப முதலே காரசாரமான விவாதங்களுடன் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் மாநகராட்சியின் பல பகுதிகளிலும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது, டெண்டர் தொடர்பான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. அப்போது எழுந்து பேசிய மாநகராட்சியின் 5-வது வார்டு திமுக உறுப்பினர் இந்திராதேவி, ``வீட்டுத்தீர்வை பெயர் மாற்றம் செய்வதற்கு எனது வார்டைச் சேர்ந்தப்பகுதி மக்கள் 11 பேர் மாநகராட்சியில் மனு அளித்துள்ளார்கள். ஆனால் அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் எனது வார்டு மக்கள் கேட்டப்போது, `ஒரு மனுவை நிறைவேற்றுவதற்கு 10ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர்.

மாமன்ற கூட்டம்

மக்கள் சேவை செய்வதற்கு எதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். ஒருவேளை லஞ்சம் கொடுத்தால் தான்‌ மாநகராட்சிப் பணி நடக்கும் என்றால், அந்த லஞ்சப் பணம் மொத்தம் 1 லட்சத்து 10ஆயிரம் நானே கொடுத்து விடுகிறேன்” என்று கூறினார். அதோடு மட்டுமில்லாமல், தனது பையிலிருந்து 500 ரூபாய்கட்டாக ஒருலட்சத்து 10 ஆயிரம் பணத்தை எடுத்து மேசை மீது வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து, அதை கையிலெடுத்து வந்த மாமன்ற உறுப்பினர் இந்திராதேவி, ``இந்த பணத்தை யாரிடம் நான் கொடுக்க என்று சொன்னாலும் கொடுத்துவிடுகிறேன்” என மேயர் சங்கீதா அருகில் நின்ற வருவாய் ஆய்வாளர் கருப்பசாமி என்பவரை பார்த்து கேள்வியை முன்வைத்ததால் மாமன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, பொதுமக்களின் கோரிக்கை மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மாமன்ற உறுப்பினர் இந்திராதேவி வாதத்தை கைவிட்டு அமர்ந்தார்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...