Skip to main content

தூத்துக்குடி: மழைக்காக கொடும்பாவி எரித்து… ஒப்பாரி வைத்த கிராம மக்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, கயத்தார், எட்டயபுரம், விளாத்திகுளம் ஆகிய தாலுகாக்களில் சுமார் 1,70,000 ஹெக்டேர் பரப்பளவிலான மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. உளுந்து, கம்பு, பாசி, வரகு, கேழ்வரகு, மக்காச்சோளம்,  பருத்தி, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கொடும்பாவியை அடித்தல்குளிர்பான மது, இன்ஸ்டா சாட்டிங்; இளம்பெண்கள், இளைஞர்களை குறிவைத்து பணம் பறிக்கும் கும்பல்! இந்தாண்டு சரியாக மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.  ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குட்பட்ட செக்காரக்குடி கிராமத்தில் கொடும்பாவியை தெருத்தெருவாக இழுத்துச் சென்று செருப்பு, துடைப்பத்தால் அடித்தும், ஒப்பாரிப் பாடல் பாடியும் எரித்தனர். இந்த சடங்கு செய்தால் மழை பெய்யும் விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் இப்படி செய்துள்ளனர். செக்காரக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் ராமலெட்சுமியிடம் பேசினோம், “தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் இறவைப் பாசன விவசாயத்தைவிட மானாவாரி விவசாயமே அதிக பரப்பளவில் நடக்கிறது. சிறுதானியங்கள், பருத்தி, மிளகாய்தான் இங்கு பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. சித்திரை மாதமே கோடை உழவு ஓட்டி மழைக்காகக் காத்திருந்தோம்.  ஒப்பாரி`என் ஹீரோவை பார்க்கணும்!’ - மெஸ்ஸியின் ஆட்டம் காண காரிலேயே கத்தார்; அசரவைத்த கேரள அம்மா ஆவணி மாதத்தில் ஒரு மழையும், புரட்டாசியில் ஒரு மழையும் மட்டுமே பெய்தது. ஆவணியில் பெய்த மழையை நம்பி சில பகுதிகளில் விதைத்தோம். முளைத்தும் முளைக்காமல் இருந்தது. இதுபோல பருவமழை பெய்யத் தாமதமானால் கிராமங்களில் கொடும்பாவி எரித்து ஒப்பாரி வைத்தல், மழைக்கஞ்சி வழிபாடு, தவளை கல்யாணம், கழுதை கல்யாணம் போன்ற மழைச்சடங்குகளை நடத்துவார்கள். எங்க கிராமத்தில் கொடும்பாவி எரிப்பதுதான் வழக்கம். போன வாரம் ஊர் கூட்டம் போட்டு மழைக்காக கொடும்பாவி எரிப்பது என முடிவெடுத்தோம். ஊருக்கு நடுவில் கொடும்பாவி உருவத்தை தயார் செய்தோம். கரகாட்ட கலைஞர்கள் ஒப்பாரிப் பாடல்களைப் பாடிக்கொண்டே நெஞ்சில் அடித்து அழுவார்கள். அப்படியே கொடும்பாவி உருவத்தை கயிறால் கட்டி ஊரிலுள்ள எல்லா தெருக்கள் வழியாக இழுத்துச் சென்றோம்.கிராம மக்கள் வழி நெடுகிலும் ஒவ்வொரு வீட்டு முன்பு நிற்பவர்கள் செருப்பாலும், துடைப்பத்தாலும் அடித்தார்கள். ஊருக்கு வெளியே கொடும்பாவி உருவத்தை எடுத்துச் சென்று தீயிட்டு கொளுத்தினோம். இதனால், ஒன்றிரண்டு நாளில் மழை வரும் என்பது எங்களின் நம்பிக்கை” என்றார்.    
http://dlvr.it/SdTMhn

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...