Skip to main content

‘‘உன்னாலதான் சாகிறேன்; சந்தோஷமா இருங்க மாமா!’’ - காதலனுக்கு வீடியோ அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மனோன்மணி. கணவனை இழந்த இவருக்கு 2 மகள்கள் இருந்தனர். மூத்த மகள் திருமணமாகி, கணவருடன் வசித்துவருகிறார். 23 வயதாகும் இளைய மகள் சரண்யா, தனியார் கல்லூரி ஒன்றில் எம்.ஏ முதலாம் ஆண்டு படித்துவந்தார். இதனிடையே, சரண்யாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்துவந்திருக்கிறார்கள். தற்கொலை அருண், ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்சமயம், பணி நிமித்தமாக அருண் குஜராத்தில் உள்ளார். வெகுதூரத்தில் இருந்தாலும் போன் மூலம் இருவரும் பேசிவந்தனர். இந்த நிலையில், சமீப நாள்களாக சரண்யாவிடம் திடீரென கோபம் காட்டத் தொடங்கியிருக்கிறார் அருண். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சரண்யா குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து, அதனை குடித்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். தற்கொலைக்கு முன்பு எலி பேஸ்ட் கலந்த குளிர்பானத்தை குடித்தபடியே செல்போனில் வீடியோ எடுத்து, தனது காதலன் அருணுக்கு பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில், ‘‘சாரி மாமா. நான் உன்னை ரொம்பவும் கஷ்டப்படுத்திட்டேன். நான் உன் லைஃப்ல கண்டிப்பாக திரும்ப வரமாட்டேன். அவ்வளவுதான். போய் சேர்ந்துடுவேன். இனிமேல் நீ சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கலாம். என் அம்மாவை மட்டும் பார்த்துக்கொள். சரண்யா உன்னை எவ்வளவு லவ் பண்ணேன் என்பதை புரிஞ்சிக்காமல் உன்பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கிற. நான் சாகிறேன். பாவம் என் அக்கா. எனக்காக எவ்வளவோ பண்ணா. ஆனால், இன்றைக்கு உன்னாலதான் சாகிறேன். லவ் யூ மாமா, பாய்..’’ என்று முடிகிறது அந்தக் காணொளி. இதுபற்றி நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சரண்யாவின் தற்கொலைக்குக் காரணமான அவரது காதலனிடம் விசாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
http://dlvr.it/SdTMQX

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...