Skip to main content

``இங்கிலாந்து - சீன உறவுகளின் பொற்காலம் முடிந்துவிட்டது" - பிரதமர் ரிஷி சுனக்

கடந்த சில வாரங்களாகவே சீனா முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேவருகிறது. இதனால், சீனாவின் பல மாகாணங்களில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த வாரம் வியாழக்கிழமை (நவ.24) அன்று, ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்கி பகுதியிலுள்ள உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. அந்தக் குடியிருப்பின் ஒரு பகுதி கொரோனா கட்டுப்பாடுகளுக்காகப் பூட்டப்பட்டிருந்தது. இதனால், மக்கள் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டதோடு, 10 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.சீனா போராட்டம் உரும்கி தீ விபத்து சம்பவம் குறித்த செய்திகள் சீனா முழுவதும் பரவ, அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என சீன மக்கள் போராடிவருகின்றனர். ஷாங்காய் நகரில் நடைபெற்ற போராட்ட நிகழ்ச்சியைப் படம் பிடிக்க பிரபல தனியார் செய்தி நிருபரான லாரன்ஸ் சென்றபோது, அவரை காவல்துறை கைதுசெய்து, அடித்து சித்திரவதை செய்து அதன் பிறகே விடுவித்திருக்கிறது. இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது வெளியுறவுக் கொள்கை குறித்த முதல் முக்கிய உரையில், "பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். முன்னாள் பிரதம மந்திரி டேவிட் கேமரூனால் ஏற்படுத்தப்பட்ட இங்கிலாந்து-சீனா உறவுகளின் பொற்காலம் முடிந்துவிட்டது. வணிகம் தானாகவே இரு நாடுகளுக்கிடையே சமூக, அரசியல் சீர்திருத்தத்துக்கு வழிவகுக்கும். எங்கள் மதிப்புகள், நலன்களுக்கு சீனா ஒரு சவாலை முன்வைத்திருக்கிறது.ரிஷி சுனக் உலகளாவிய பொருளாதார உறுதித்தன்மை, காலநிலை மாற்றம் போன்ற விவகாரங்களில் சீனாவின் முக்கியத்துவத்தை நாம் வெறுமனே புறக்கணிக்க முடியாது. ஆனால், இது இன்னும் பெரிய சர்வாதிகாரத்தை நோக்கி நகரும்போது இன்னும் தீவிரமாக வளரும். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பல நாடுகள் இதை புரிந்துகொண்டிருக்கின்றன. சீனா உள்நாட்டு மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கு நம்பர் ஒன் அச்சுறுத்தல்" எனத் தெரிவித்திருக்கிறார்.சீனா: சாலையில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்... முதன்முறையாகப் பெரும் போராட்டம் - பின்னணி என்ன?!
http://dlvr.it/SdbXWm

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...