தைவான் அதிபர் சான்-இங் வென் உள்ளாட்சித் தேர்தலில் தனது கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இத்தாலியத் தீவான இஷியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்து, சுமார் 10 பேர் விபத்தில் சிக்கித் தேடப்பட்டு வருகின்றனர்.
சீனாவின் `ஐபோன்' சிட்டியான ஹெனான் மாகாணத்தின் தலைநகரிலிருந்து 870 தொழிலாளர்கள் முறையான அறிவிப்பின்றி இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
China's iPhone City relocated 870 workers without notice in the capital of Henan province.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளை தலிபன்கள் நடத்தும்விதம், மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களைத் தூண்டும் என்று ஐ.நா தெரிவித்திருக்கிறது.
ரஷ்யாவின் வாக்னர் குழு ஒரு வயலின் பெட்டியில் ரத்தம் தோய்ந்த ஒரு சுத்தியலை ஐரோப்பியப் யூனியனுக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
எகிப்து அதிபர் அப்தெல் பத்தாஹ் எல்-சிசி அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
64 வயதான பெலாரஸ் வெளியுறவு அமைச்சர் விளாடிமர் மேக்கி காலமானார்.
2022 ஃபிஃபா உலகக் கோப்பையை நடத்தும் கத்தார், கால்பந்து போட்டியில் முதல் நாடாக வெளியேற்றப்பட்டது.
பிரபல பிளாஷ் டான்ஸ் பாடகியான ஐரீன் காரா தனது 63-ம் வயதில் காலமானார்.
இரண்டாம் எலிசபெத் ராணி தனது கடைசிக் காலத்தில் எலும்பு புற்றுநோயை எதிர்த்துப் போராடியதாகத் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.
Comments
Post a Comment