அமெரிக்க ராப் பாடகரும், ஆடை வடிவமைப்பாளருமான கென்யே வெஸ்ட், 2024 அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறியிருக்கிறார். டொனால்ட் ட்ரம்ப் தனக்குத் துணையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
மத்திய அமெரிக்க நாடான ஹாண்டுராஸ் நாட்டில் வன்முறைக் குழுக்கள் நடத்தும் தாக்குதலைத் தடுக்க அந்த நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி சியோமாரா காஸ்ட்ரோ தெரிவித்திருக்கிறார்.
உக்ரைன் - ரஷ்யப் போரால் ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்துவருவதாக உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.
கால்பந்து உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்து, அமெரிக்கா இடையிலான பரபரப்பான ஆட்டம் சமனில் முடிந்தது.
பனாமாவில் நடந்த வனவிலங்குகள் பாதுகாப்பு உச்சிமாநாட்டில், சுறாக்கள், ஊர்வனங்கள், ஆமைகள் உட்பட நூற்றுக்கணக்கான அழிந்துவரும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அடுத்த வாரம் சந்திக்கவிருக்கும் நிலையில், இருவரும் தொழிற்சாலை மானியம் உட்பட பொருளாதார நலன்கள் குறித்துப் பேசவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
1961-ல் சிறந்த நடிகைக்கான விருதை வென்ற எலிசபெத் டெய்லர் அணிந்திருந்த ஆடை, அடுத்த மாதம் ஏலத்தில் விற்கப்படவிருக்கிறது.
கனடாவைச் சேர்ந்த பாப் இசைக் கலைஞரான க்ரிஸ் வு , பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதால், அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது பீஜிங் நீதிமன்றம்.
முதன்முதலில், தென் கொரிய தலைநகரில் சுய ஓட்டுநர் பேருந்து பரிசோதனை (Self-Driving Bus Experiment) தொடங்குகிறது. பேருந்தில் விலையுயர்ந்த சென்சார்களுக்கு பதிலாக கேமராக்கள், ரேடார்கள் பயன்படுத்தப்படுகின்றன.
உக்ரைனில் மருத்துவமனை ஒன்றில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்தபோது, மின்சாரம் தடைப்பட்டதால் மருத்துவர்கள் தங்களிடமிருந்த பேட்டரி டார்ச், பவர் ஜெனரேட்டரின் உதவியுடன் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
http://dlvr.it/SdR6HG
http://dlvr.it/SdR6HG
Comments
Post a Comment