Skip to main content

Posts

Showing posts from July, 2022

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``ஆபரேஷன் லோட்டஸ் அமபலமாகி விட்டது..!" - பாஜக-வைச் சாடிய காங்கிரஸ்

மேற்கு வங்க மாநில தேசிய நெடுஞ்சாலையில், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 3 பேர், நேற்றிரவு காரில் கட்டுக்கட்டாகப் பணத்துடன் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் சிக்கியுள்ள எம்.எல்.ஏ-க்கள் இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சாப் மற்றும் நமன் பிக்சல் கொங்கரி என தெரியவந்துள்ளது. மேற்கு வங்கத்தில், ஆசிரியர் நியமன முறைகேட்டில் அமைச்சர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதையடுத்து, குறிப்பிட்ட சிலரை மட்டுமே அமலாக்கத்துறை ஆய்வு செய்கிறதா என திரிணாமுல் கேள்வியெழுப்பியிருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.பறிமுதல் செய்யப்பட்ட பணம் நேற்றிரவு, மேற்கு வங்கத்தின் பஞ்ச்லா காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இவர்கள் மூவரும் சென்றுகொண்டிருந்த காரை போலீஸார் மறித்திருக்கின்றனர். அப்போது காரை சோதனை செய்ததில், பெரிய தொகையிலான பணம் இருப்பது தெரியவந்திருக்கிறது. எஸ்.பி ஸ்வாதி பங்காலியா இது குறித்து ரூரல் ஹவுரா எஸ்.பி ஸ்வாதி பங்காலியா, ``ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ-க்கள் காரில் இருந்தனர். அதோடு நிறைய பணமும் இருந்தது. பெரிய தொகையாக இருக்கு...

புதுக்கோட்டை: தேர் கவிழ்ந்து விபத்து... 9 பேர் காயம் - ஆட்சியர், எஸ்.பி நேரில் ஆய்வு

புதுக்கோட்டை அருகே திருக்கோகரணம் அருள்மிகு ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்னேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. மிகவும் பழமையான இந்த குடைவரைக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடித் திருவிழா 10 நாள்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு, கோயிலின் ஆடித் திருவிழா கடந்த 23-ம் தேதி காப்புக் கட்டுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சுவாமிக்குச் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று, காலை ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அருள்மிகு ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை திருக்கோணேஸ்வரர் தேரில் எழுந்தருள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலான இங்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தேரோட்ட விழா நடைபெறாத நிலையில், இன்று நடைபெற்ற விழாவைக் காணப் புதுக்கோட்டை நகரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.தேர் அப்போது, அங்குக் குழுமியிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தபோது, எதிர்பாராத விதம...

``காம்ரேட் பினராயி விஜயனுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டமிருக்கிறது!"- நெகிழ்ந்த ஸ்டாலின்

கேரளாவில் மனோரமா நியூஸ் கான்க்ளோவ் 2022 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பேசினார். பின்னர் முதல்வர் ஸ்டாலினிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "எனக்கு கேரளாவில் ரசிகர்கள் இருப்பது போல, கேரள முதல்வர் காம்ரேட் பினராயி விஜயனுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர் முதலமைச்சராக செயல்பட்டுக்கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் வேறொரு கட்சி ஆட்சி இருந்தது. அப்போது கேரளா முதல்வர் பினராயியை போல தமிழ்நாட்டுக்கு ஒரு முதலமைச்சர் இல்லையே என்று தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் ஒரு ஏக்கத்தோடு சொல்லிக்கொண்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றம் நடந்த சமயத்தில் நான் என்னுடைய செயல்பாடுகளுக்கு முன்னுதாரணமாக உங்கள் முதலமைச்சர் பினராயி விஜயனுடைய செயல்பாடுகளைதான் கையில் எடுத்தேன். பினராயியின் வழிகாட்டுதல்படி பணியை நிறைவேற்றினேன் என்பதுதான் முக்கியம். இதுதான் எனக்கு பெரிய பெருமை.காணொளி காட்சி மூலம் பேசிய முதல்வர் ஸ்டாலின் ...

மாதவிடாய் விடுப்பு வழங்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை - அமைச்சர் ஸ்மிருதி இரானி

மாதவிடாய்க்கு விடுமுறை அளிக்க வேண்டும் என எந்த அரசு விதிகளிலும் கூறப்படவில்லை. ஆகவே, அது குறித்த எந்தத் திட்டமும் இல்லை என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்திருக்கிறார். ஸ்மிருதி இரானிமாதவிடாய் விடுமுறை... அது நம் உரிமை! மாதவிடாய் நாள்களில் பெண் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்த நிலையில், மாதவிடாய்க் காலத்தில் விடுப்பு வழங்குவதற்கான திட்டம் மத்திய அரசுக்கு உள்ளதா என, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கேள்வியெழுப்பினார். இக்கேள்விக்கு பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி... ``1972-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மத்திய குடிமைப் பணியாளர்களுக்கான விடுப்பு விதிகளே மத்திய அரசு ஊழியர்களுக்குப் பொருந்தும். அந்த விதியின்படி மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு விடுப்பு வழங்குவதற்கான எந்த விதிமுறையும் இல்லை. மத்திய அரசு ஊழியர்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் விடுப்பு வழங்குவது பற்றி இதுவரை ஆலோசிக்கப்படவில்லை. இந்த விதிகளின்படி அரசு, பெண் ஊழியர்களுக்கு அவர்கள் ஈட்டிய ...

உங்க `பணம்' உண்மையாவே வங்கில பாதுகாப்பா இருக்கா? இதைப் படிச்சிட்டு சொல்லுங்க!

பணம்... உங்களுக்கும், எனக்கும், பணத்தின் மீது ஆசையே இல்லாதவருக்கும் கூட பணம் வேண்டும். உலகத்தில் வாழ அடிப்படை பணம். அதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி. பணம் என்றால் என்ன? Money பதில்... ஒரு பொருளை நான் உங்களுக்குக் கொடுத்தால் அதற்கு ஈடாக மற்றொரு பொருளைத் தருவீர்கள். உங்களுக்கு நான் ஒரு உதவி செய்தால், அதற்கு ஈடாக மற்றொரு உதவியைச் செய்வீர்கள். இதற்கு நடுவில் பணம் ஏன் வந்தது? ஒரு பொருளையும் சேவையையும் நீங்கள் வழங்கும்போது, அதற்கு ஈடாக வேறு பொருளும் உதவியும் எப்படி, எப்போது கிடைக்கும் என்று நிச்சயித்துக் கூறமுடியாது. நீங்கள் புஷ்டியான பூசணிக்காய் ஒன்றை வளர்த்து எதிர்வீட்டாரிடம் தருகிறீர்கள்; அதற்கு ஈடாய் சூம்பிய 4 கேரட்டை அவர்கள் தந்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? (ஏற்றுக்கொள்வேன் என்று நீங்கள் கூறினால் நான் எதுவும் சொல்வதற்கில்லை!) இப்படிப்பட்ட தருணங்களில்தான் பணம் நமக்கு கைக்கொடுக்கிறது. அனைத்து பொருள்களுக்கும் சேவைகளுக்கும் ஒரு மதிப்பை நிர்ணயித்து, அந்த மதிப்புக்கு ஈடாக பணத்தை அச்சிட்டுக்கொள்ளலாம். மதுரையில் ஒரு பொருளை விற்று, அதற்கான காசை எடுத்துப்போய் மயிலாப்பூரில் வேறொரு பொர...

8 ஆண்டுகளில் இரண்டரை மடங்கு வளர்ச்சி - மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்து பிரதமர் பெருமிதம்!

குஜராத்தில் உள்ள காந்தி நகரில், ஜூலை 21 அன்று, நாட்டின் முதலாவது கோல்ட் புல்லியன் எக்சேஞ்சை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நமது நாடு தங்கத்தைப் பயன்படுத்துவதில் உலகில் முதன்மையான நாடாக உள்ளது. குண்டுமணி அளவாவது தங்கத்தைச் சேர்ப்பதற்கு இந்தியர்கள் ஒவ்வொருவரும் விரும்புவதே தங்க பயன்பாடு அதிகமாக இருப்பதற்கு காரணமாகும். என்றாலும், தங்கத்தை நேரடியாக பங்குச் சந்தை போன்று வாங்கும் வசதி இல்லை. இந்தக் குறையைப் போக்கும் விதத்தில் குஜராத்தில் அமைந்திருக்கும் கிஃப்ட் சிட்டியில் நமது நாட்டின் முதல் தங்கத்துக்கான புல்லியன் எக்ஸ்சேஞ்சை பிரதமர் தொடங்கி வைத்தார். Mutual fund (Representational Image) பங்கு, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், ரியல் எஸ்டேட்... பிரித்து முதலீடு செய்தால் லாபம்..! 8 ஆண்டுகளில் 250 சதவிகித வளர்ச்சி அப்போது அங்கு குழுமியிருந்த முதலீட்டாளர்களிடம் நமது பிரதமர் உரையாடினார். மியூச்சுவல் ஃபண்ட் சந்தை நமது நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் 250 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளதாக, அப்போது குறிப்பிட்டுள்ளார். 2014-ம் ஆண்டு 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாக முதலீட்டை நிர்வகித்து வந்த...

``பாஜக அமைத்த சாலையில் இந்த யானை சென்றிருந்தால்...” - வீடியோ வெளியிட்டு கிண்டல் செய்த அகிலேஷ் யாதவ்

உத்தரப்பிரதேசத்தின் ஜலான் மாநிலத்தில், கைத்தேரி கிராமத்தில், 296 கிமீ நீளமுள்ள பந்தல்கண்ட் விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 16-ம் அன்று திறந்து வைத்தார். 296 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த 4 வழி நெடுஞ்சாலை அந்த மாநிலத்தில் உள்ள 7 மாவட்டங்களை கடந்து செல்கிறது. இந்த சாலைக்கு பந்தல்கண்ட் எக்ஸ்பிரஸ் சாலை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த ஒரு வாரத்தில், கனமழை காரணமாக, சாலையின் ஒரு பகுதியில் ஆழமான பள்ளங்கள் தோன்றியதாக தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சிமீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. ये तो गनीमत है कि पाबंदी के बावजूद हाथी जी सपा के बनाए मजबूत ‘आगरा-लखनऊ एक्सप्रेस-वे’ पर विचरण कर रहे हैं, कहीं ग़लती से ये बुंदेलखंड एक्सप्रेस-वे पर चले गये होते तो गुणवत्ता का मारा वो बेचारा इनका वज़न सह नहीं पाता… वो ख़ुद खंडित होता और ये चोटिल। एक्सप्रेस-वे सुरक्षा कहाँ है? pic.twitter.com/pqc4H0z5SY— Akhilesh Yadav (@yadavakhilesh) July 29, 2022 இந்த நிலையில், இது தொடர்பாக, அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவ...

அவர் சூரரைப் போற்று சூர்யா மாதிரி... யார் அந்த பிசினஸ் கில்லாடி? #திருப்புமுனை - 22

அதிர்ஷ்டம் தைரியசாலிகளைத்தான் தேடிவரும் (Fortune follows the brave). அதாவது, துணிச்சலான முடிவு எடுப்பவர்களுக்குதான் அதிர்ஷடம் கிடைக்கும். சூரரைப் போற்று படத்தில் வரும் சூர்யா மாதிரி, பல வகையிலும் துணிச்சலான முடிவுகளை எடுத்தவர் பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் கிரண் மஜூம்தார் ஷா. பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் கிரண் மஜூம்தார் ஷா இட்லி, தோசை மாவு விற்பனையில் ரூ.700 கோடி... எப்படி ஜெயித்தது இந்த நிறுவனம்? #திருப்புமுனை - 21 பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருப்பவர். அரசாங்கத்துக்கு எதிராக துணிச்சலாகக் கருத்துகளை சொல்லக்கூடியவர். சில மாதங்களுக்கு முன் கர்நாடகாவில் நடந்த கலவரத்தின்போது மதரீதியாக மக்களைப் பிரிப்பது ஆபத்தானது எனக் குறிப்பிட்டிருந்தார். நடுத்தர வர்க்கத்து குடும்பத்தில் பிறந்த கிரண், சொந்தமாக உழைத்து பெரும் பணம் சம்பாதித்தவர். சிலர் தொழிலுக்கு வந்த பிறகு, திருப்புமுனையை உருவாக்கி இருப்பார்கள். ஆனால், கிரண் மஜூம்தார் தொழிலுக்கு வந்ததே திருப்புமுனையால் தான். கலைந்துபோன மருத்துவக் கனவு... இவருடைய அப்பா யுனைடெட் புரூவெரிஸ் நிறுவனத்தின் brew master. brew என்றால், மதுபானத்தை ...

ஆண்மையின்மையை மறைத்து திருமணம்... தெரிய வந்ததும் விவாகரத்து - நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

ஆண்மையின்மையை மறைத்து திருமணம் செய்தவர் மீது மோசடிப்பிரிவில் வழக்குப்பதிவு செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை உயர் நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து விசாரித்தபோது, மதுரையைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஏகப்பட்ட நகை, சீர்வரிசை பொருள்கள் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட நிலையில், கணவர் மனைவியோடு சேர்ந்து வாழவில்லை. புகுந்த வீட்டிலுள்ளவர்கள் பல கொடுமைகளைச் செய்துள்ளனர். இதனால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார் கணவர். அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மனைவி, மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மோசடி செய்து திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டி அப்பெண், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ``கடந்த ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. கணவருடன் சென்னையில் வசித்து வந்தேன். என் கணவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. என்னுடன் குடும்பம் நடத்துவதில் அவ...

``பாஜக என்னை பயங்கரவாதி என்று UAPA சட்டத்தின் கீழ் கைது செய்ய காத்திருக்கிறேன்" - ஆதிர் ரஞ்சன்

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, `ராஷ்டிரபத்னி' என காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கூறிய சம்பவம் நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ், பா.ஜ.க-விடையே பெரும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதினார். அதில்,"நான் பேசியது தெரியாமல் வாய்தவறி வந்த வார்த்தை. அதற்காக வருந்துகிறேன். மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். திரௌபதி முர்மு ஆனாலும், தொடர்ந்து பா.ஜ.க தலைவர்கள் அவரை விமர்சித்துவருகின்றனர். மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களை சந்தித்த போது, "அது வாய்தவறி வந்த வார்த்தையல்ல. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெளிவாக இரண்டாவது முறை 'ராஷ்டிரபத்னி' என்று தன்னைத் திருத்திக் கொள்கிறார். இது போன்ற விஷயங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர் தேசவிரோதி, பழங்குடியினருக்கு எதிரானவர்.மேலும் குடியரசுத் தலைவரிடம் சென்று மன்னிப்பு கேட்டுவிட்டாரே என்று இந்த விவகாரத்தை எப்படி சிறுமைப்படுத்துவது?, இது அவ்வளவு எளிதானதா?, கண்டிக்கத்தக்கது...

கடத்தல்காரர்களா... போலீஸா... கால்நடை கடத்தல்காரர்களோடு போலீஸின் பரபரப்பான சேஸிங் | Viral Video

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் பசுமாடு கடத்தப்பட்டுக் கொண்டு செல்லப்படுவதாக, ஹரியானா மாநில காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து, காவல்துறை குழு மற்றும் உள்ளூர் பசு பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகாலை 4 மணியளவில், குண்ட்லி-மனேசர்-பல்வால் (கேஎம்பி) விரைவுச் சாலையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மாடு கடத்தல்காரர்கள் லாரியில் அதிவேகமாக மாடுகளைக் கடத்திச் சென்றுகொண்டிருந்தனர். அவர்களைக் கண்ட காவல்துறை வாகனத்தை நிறுத்துமாறு சமிக்ஞை செய்ததாகக் கூறப்படுகிறது. கடத்தல் காரர்களை துரத்தும் காவல்துறை ஆனால் கடத்தல்காரர்கள் காவலர்களைக் கண்டதும் இன்னும் வேகமாகச் சென்றனர். அதைத் தொடர்ந்து, காவலர்களும் விடாமல், அவர்களை 4-5 கிமீ துரத்திச் சென்று மாடு கடத்தல்காரர்களைக் கைது செய்ததாக ஹரியான காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. காவல்துறை கடத்தல் காரர்களைத் துரத்திச் செல்லும் வீடியோ OTV News தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இரண்டு வாகனங்களில் மொத்தம் 26 பசுமாடுகள் மீட்கப்பட்டுப் பசு காப்பகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. மேலும், இந்த கடத்தல் தொடர்பாக 4 பேர...

கடன் சுமை; வீட்டை விற்க முடிவு; லாட்டரி பரிசால் மீண்ட குடும்பம்; நடந்தது இதுதான்!

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது என்ற பாவா. நில புரோக்கர் வேலை செய்துவந்தார். முஹம்மதுவுக்கு மனைவி மற்றும் நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். புரோக்கர் தொழிலில் சுமார் 15 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா காரணமாக வருவாயும் குறைந்துள்ளது. ஏற்கெனவே மூத்த மகளுக்கு திருமணத்துக்காக கடன் வாங்கிய நிலையில் வீடு கட்டுவதற்கு என வங்கியில் 10 லட்சம் ரூபாய் கடன்பெற்றுள்ளார். லோன் தொகை வீடுவைக்க பற்றாமல் போனதால் உறவினர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். வீடு வேலை முடிந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது மகளுக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளார். இதனால் முஹம்மதுவுக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது.லாட்டரி வட்டியும், கடனும் கழுத்தை இறுக்கியது. புரோக்கர் தொழிலும் அடிவாங்கியதால் கடனை அடைக்க முடியாமல் திணறியுள்ளார். வேறு வழி இல்லாமல் ஆசையாய் கட்டிய தனது வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார் முஹம்மது. 2000 சதுர அடி உள்ள வீடும், நிலமும் 40 லட்சம் ரூபாய்க்கு வாங்குவதற்கு ஒருவர் முன்வந்துள்ளார். முஹம்மதுவும் வீட்டை வி...

50 கோடி பணம்: ``எனது வீடு தான்... ஆனால் எனக்கே அனுமதி இல்லை” - மே.வங்க அமைச்சரின் உதவியாளர்

மேற்குவங்கத்தில் பள்ளி ஆசிரியர்கள் நியமன முறைகேடு தொடர்பாக திரிணாமுல் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவரின் உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோரை அமலாக்கத்துறை கைதுசெய்து விசாரித்து வருகிறது. இவர்கள் கைதுசெய்யப்படுவதற்கு முந்தைய நாள், அர்பிதா முகர்ஜியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 21 கோடி ரூபாய் ரொக்கமாக கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், `பார்த்தா சாட்டர்ஜி தனது வீட்டை ஒரு மினி வங்கியாகப் பயன்படுத்தினார்’ என அர்பிதா முகர்ஜி தெரிவித்திருந்தார்.அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது மேலும், கடந்த புதன்கிழமையன்று அர்பிதா முகர்ஜியின் மற்றொரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 29 கோடி ரூபாயை மீட்டனர். இந்தநிலையில், பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அறைக்கு செல்ல தனக்கே அனுமதியில்லை இல்லையென்று அர்பிதா முகர்ஜி கூறியதாக அமலாக்கத்துறை அதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அந்த அதிகாரி, ``அர்பிதா முகர்ஜி, பணம் பார்த்தா சாட்டர்ஜிக்கு சொந்தமானது என்றும், அவரும் அவரின் ஆட்களும் தனது வீடுகளுக்கு வந்து பணத்தை பதுக்...

ஆடி அமாவாசை வழிபாடு: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் குவிந்த பொதுமக்கள்!

http://dlvr.it/SVhTyV

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...

செஸ் விளம்பரம்: ``பிரதமர் புகைப்படம் இடம்பெறுவதை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும்!" - நீதிமன்றம்

சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவிருக்கிறது. இதற்கான தொடக்க விழா இன்று மாலை 6 மணிக்கு (ஜூலை 28) நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாகத் தொடங்கியது. இந்த விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த போட்டி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த செஸ் திருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடும் விதமாகத் தலைநகர் சென்னையிலும், வேறு சில மாவட்டங்களிலும் செஸ் வடிவிலான அலங்காரங்கள், விளம்பரங்கள், கலை நிகழ்ச்சிகளை தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது.செஸ் போட்டி தொடக்க விழாவில்... இந்த நிலையில், சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல்செய்தார். அதில், ``சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரத்தில் இந்தியப் பிரதமர், குடியரசுத் தலைவர் என யாருடைய புகைப்படத்தையும் பயன்படுத்தாமல் ஆளும் தி.மு.க அரசு தனக்கான அரசியல் ஆதாயத்தைத் தேடும் நிகழ்வாக பயன்படுத்திக்கொண்டுள்ளது. எனவே, இந்த போட்டிக்கான ...

வயது முரணான திருமணம் எனப் பெற்றோர் எதிர்ப்பு - கணவரை மீட்டுத்தரக்கோரி பெண் தீக்குளிக்க முயற்சி

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகாவில் உள்ள குராயூரை சேர்ந்தவர் லட்சுமி(31, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடைய கணவர், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே இவரை பிரிந்து சென்றுவிட்டார். தற்போது லட்சுமி தன்னுடைய இரண்டு பெண் பிள்ளைகளுடன், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தங்கியிருந்து சிறியதாக துணிக்கடை நடத்தி பிழைத்து வருகிறார். இந்நிலையில், அவருக்கும், தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் லாரி டிரைவராக வேலை பார்க்கும் பாலாஜி (21) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தீக்குளிக்க முயற்சி நாளடைவில், பாலாஜியும் லட்சுமியும் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பாலாஜியின் பெற்றோர், வயதுக்கு முரணான இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலாஜியை அடித்து இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரின் வீட்டுக்கு நியாயம் கேட்டுச் சென்ற லட்சுமியை, பாலாஜியின் உறவினர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரின் குழந்தைகளின் எதிர்காலத்தை குறிப்பிட்டும் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து வீட்டிலிருந்து மாயமான பாலாஜி, மதுரை தணிக்கன்குளத்தில் ...

``அமெரிக்காவுடனான எத்தகைய ராணுவ மோதலுக்கும் வடகொரியா தயார்" - அதிபர் கிம் ஜாங் உன் ஆவேசம்

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுதப்போரை தடுக்க வடகொரியா தயாராக இருப்பதாகவும், அதேசமயம் அமெரிக்காவுடனான எந்தவிதமான ராணுவ மோதலுக்கும் நாடு தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். வடகொரியாவில், கொரியப் போர் நிறுத்தத்தின் நினைவு தினமான நேற்று (ஜூலை 27) அதன் 69-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அமெரிக்கா - வடகொரியா அதில் கலந்துகொண்ட அதிபர் கிம் ஜாங் உன் , வடகொரியா மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகளைத் தாக்கி பேசியபோது, ``போருக்குப் பிறகான 70 ஆண்டுகளுக்குப் பிறகும் வட கொரியாவுக்கு எதிராக அமெரிக்கா, ஆபத்தான சட்டவிரோத விரோதச் செயல்களைத் தொடர்கிறது. மேலும், நாட்டை மூர்க்கத்தனமாகக் காட்டி, அமெரிக்கா அதன் நடத்தையை நியாயப்படுத்த முயல்கிறது. அமெரிக்காவின் இந்த இரட்டைச் செயல், நமது ஆயுதப் படைகளின் அனைத்து வழக்கமான நடவடிக்கைகளையும் ஆத்திரமூட்டல் என்று தவறாக வழிநடத்துகிறது. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இதனால் இருதரப்பு உறவுகளைத் திரும்பப் பெறுவதென்பது கடினமான ஒன்று. மேலும், இது மோதலின் நிலைக்குத் தான் தள்ளுகிறது. அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவுடனான எந்தவொரு ராணு...

Doctor Vikatan: ஒவ்வாமையை ஏற்படுத்துமா கோதுமை உணவுகள்?

என் வயது 38. இரவில் பல நாள்களுக்கு சப்பாத்தி அல்லது கோதுமை தோசைதான் சாப்பிடுகிறேன். இப்படிச் சாப்பிடும் நாள்களில் வயிற்று வலி, வயிற்று உப்புசம், அடுத்தநாள் மலச்சிக்கல் போன்றவை ஏற்படுகின்றன. மற்ற நாள்களில் இப்படி இருப்பதில்லை. இதை கோதுமை அலர்ஜி என எடுத்துக் கொள்ளலாமா? இரவு உணவுக்கு சப்பாத்தி, கோதுமை தோசை சாப்பிடுவது சரியானதா? ஸ்ரீமதி வெங்கட்ராமன் பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு க்ளூட்டன் அலர்ஜி என்கிற ஒவ்வாமை இருக்கலாம் என்று தெரிகிறது. க்ளூட்டன் என்பது ஒரு வகை புரதம். கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் இந்த க்ளூட்டன் அதிகம் காணப்படுகிறது. க்ளூட்டன் உள்ள உணவுப்பொருள்கள் ஒட்டும் தன்மை கொண்டவையாக இருக்கும். நெகிழ்வுத் தன்மையைக் கொடுப்பதால் பிரட், பிஸ்கட், ரஸ்க் உள்ளிட்ட பேக்கரி உணவு வகைகளில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. bread Doctor Vikatan: பலகாலமாகத் தொடரும் பல் கூச்சம்... சென்சிட்டிவிட்டிக்கான டூத் பேஸ்ட் தீர்வாகுமா? வய...

நடிகை வீட்டிலிருந்து மேலும் ரூ.29 கோடி பணம், தங்கம் பறிமுதல் - மே.வங்க அமைச்சருக்கு கடும் நெருக்கடி

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக அம்மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவருக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜி ஆகியோர் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்படுவதற்கு முன்பு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டின் போது அர்பிதாவின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அர்பிதா தற்போது அமலாக்கப்பிரிவின் விசாரணையில் இருக்கிறார். அவரிடம் விசாரணை நடத்திய பிறகு அவரின் மற்றொரு வீட்டில் சோதனையிடப்பட்டது. இதில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த மேலும் 29 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் 10 லாரிகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. அவற்றை எண்ணி முடிக்கவே பல மணி நேரம் எடுத்துக்கொண்டது. அதோடு வீட்டில் இருந்து 5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தின் மதிப்பு ரூ.4 கோடியாகும். பறிமுதல் செய்யப்பட்டுள்ள மொத்த பணம் 50 கோடியும் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டதில் நடந்த ஊழலில் கிடைத்த பணம் என்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ள...

தடை செய்யப்பட்ட 14,000 கத்திகள்; சீனாவிலிருந்து இறக்குமதி - பிரபல நிறுவனத்துக்கு நோட்டீஸ்!

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட 14,000 கத்திகளை டெல்லி போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். மேலும் இது சம்பந்தமாக 5 பேரை போலீஸார் கைதும் செய்து இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தடை செய்யப்பட்ட கத்திகளை தங்கள் இணையதளங்களில் விற்பனை செய்ததற்காக, ஈ-காமர்ஸ் தளங்களான ஃபிளிப்கார்ட், மீஷோ நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பாகாகவும் போலீஸ் தெரிவித்திருக்கிறது. போலீஸ் கைது இந்த சம்பவம் குறித்து பேசிய டெல்லியின் தெற்கு மாவட்ட போலீஸ் அதிகாரி பெனிடா மேரி ஜெய்கர், ``சி.ஆர் பூங்காவில் உரிமை கோரப்படாத ஒரு பார்சலிலிருந்து, ராம்புரி கத்திகள் எனப்படும் 50 தடைசெய்யப்பட்ட, பட்டன்-ஆசிட்டிவேடட் கத்திகள் மீட்கப்பட்டன. பார்சலிலிருந்த பெயர் மற்றும் முகவரியை வைத்து, மாளவியா நகரில் முகமது சாஹல் என்பவருக்குச் சொந்தமான துணிக்கடைக்கு வந்த போலீஸார் 500க்கும் மேற்பட்ட சட்டவிரோத கத்திகளை கண்டெடுத்தனர். அதைத்தொடர்ந்து முகமது சாஹல், அவரின் ஊழியர் வாசிம் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அதன்பின்னர் முகமது சாஹல் கொடுத்த தகவலின்படி முகமது யூசுப் என்பவருடன், சீனாவுக்கு கத்திகளுக்கு ஆர்டர் கொட...

சிவகாசி: 4,000 ரூபாயால் ஏற்பட்ட முன்பகை; வாலிபர் வெட்டிக்கொலை - 5 பேர் கைது

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வைரமுத்து. இவரின் மகன் முத்துக்குமார். அந்த பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கூலித்தொழிலாளியாக பணி செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தனது மகனைக் காணவில்லை, அவனை யாராவது கடத்திச் சென்றிருப்பார்கள் என சந்தேகப்படுவதாக சிவகாசி நகர் காவல் நிலையத்தில் வைரமுத்து புகார் அளித்தார். முத்துக்குமார் இந்தப் புகாரின் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை தேடி வந்தனர். இந்தநிலையில் சிவகாசி அருகே உள்ள தெற்கு ஆனைகூட்டம் காட்டுப்பகுதியில் வாலிபர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீஸார், சடலமாக கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் , காட்டுப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இறந்துக்கிடந்த நபர் காணாமல் போன முத்துக்குமார் தான் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, இந்தக் கொலை தொடர்பாக சிவகாசி நகர் காவல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத...