Skip to main content

ஆண்மையின்மையை மறைத்து திருமணம்... தெரிய வந்ததும் விவாகரத்து - நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

ஆண்மையின்மையை மறைத்து திருமணம் செய்தவர் மீது மோசடிப்பிரிவில் வழக்குப்பதிவு செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை உயர் நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து விசாரித்தபோது, மதுரையைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஏகப்பட்ட நகை, சீர்வரிசை பொருள்கள் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட நிலையில், கணவர் மனைவியோடு சேர்ந்து வாழவில்லை. புகுந்த வீட்டிலுள்ளவர்கள் பல கொடுமைகளைச் செய்துள்ளனர். இதனால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார் கணவர். அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மனைவி, மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மோசடி செய்து திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டி அப்பெண், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ``கடந்த ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. கணவருடன் சென்னையில் வசித்து வந்தேன். என் கணவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. என்னுடன் குடும்பம் நடத்துவதில் அவருக்கு ஆர்வம் இல்லை.திருமண மோசடிவிவாகரத்து செய்த கணவரை விருந்தினரைப்போல் நடத்த வேண்டும் - உயர் நீதிமன்றத் தீர்ப்பும் விவாதங்களும்... அவருக்கு ஆண்மைக்குறைவால் முதல் திருமணம் தோல்வியில் முடிந்துள்ளது. அதை மறைத்து உண்மையைக் கூறாமல் கணவரும் அவர் குடும்பத்தினரும் என்னை மணம் முடித்தனர். இதைத் தெரிந்துகொண்டதால், என்னை தலாக் மூலம் விவகாரத்து செய்துவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்தவர் மீது நான் கொடுத்த புகார், சாதாரண வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஏமாற்றி மோசடி செய்தல் போன்ற பிரிவுகளைச் சேர்க்க வேண்டும்" எனக் கோரியிருந்தார். அரசுத்தரப்பில், ``இந்த புகார் முதற்கட்ட விசாரணைக்காக சமூக நலத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை கிடைத்ததும் எப்.ஐ.ஆரில் மாற்றம் செய்வது குறித்து காவல்துறையினர் பரிசீலிப்பார்கள்" என்று தெரிவிக்கப்பட்டது.மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!வழுக்கைத் தலையை மறைத்து திருமணம் செய்ய முயற்சி! - உண்மை தெரிந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் திருமணத்துக்கு பின்பு இந்த விஷயம் தெரியவந்த நிலையில் தலாக் முறையில் விவாகரத்து கூறிவிட்டு கணவர் வெளிநாடு சென்றுவிட்டார். ஆகவே, மனுதாரர் கொடுத்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 417, 420 ஆகிய பிரிவுகளை வழக்கில் சேர்க்க வேண்டும். 4 மாதங்களில் விசாரணை நடதி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். கல்வி, வேலை, உடல்நலத் தகுதியை மறைத்து மோசடியாக திருமணம் செய்பவர்களுக்கு இந்த வழக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்கிறார்கள் சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள்.
http://dlvr.it/SVltf1

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...