Skip to main content

கடன் சுமை; வீட்டை விற்க முடிவு; லாட்டரி பரிசால் மீண்ட குடும்பம்; நடந்தது இதுதான்!

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது என்ற பாவா. நில புரோக்கர் வேலை செய்துவந்தார். முஹம்மதுவுக்கு மனைவி மற்றும் நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். புரோக்கர் தொழிலில் சுமார் 15 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா காரணமாக வருவாயும் குறைந்துள்ளது. ஏற்கெனவே மூத்த மகளுக்கு திருமணத்துக்காக கடன் வாங்கிய நிலையில் வீடு கட்டுவதற்கு என வங்கியில் 10 லட்சம் ரூபாய் கடன்பெற்றுள்ளார். லோன் தொகை வீடுவைக்க பற்றாமல் போனதால் உறவினர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். வீடு வேலை முடிந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது மகளுக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளார். இதனால் முஹம்மதுவுக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது.லாட்டரி வட்டியும், கடனும் கழுத்தை இறுக்கியது. புரோக்கர் தொழிலும் அடிவாங்கியதால் கடனை அடைக்க முடியாமல் திணறியுள்ளார். வேறு வழி இல்லாமல் ஆசையாய் கட்டிய தனது வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார் முஹம்மது. 2000 சதுர அடி உள்ள வீடும், நிலமும் 40 லட்சம் ரூபாய்க்கு வாங்குவதற்கு ஒருவர் முன்வந்துள்ளார். முஹம்மதுவும் வீட்டை விற்பனை செய்யத் தயாராகியுள்ளார். இதற்கிடையே கேரளா அரசின 50-50 (Fifty Fifty) லாட்டரியில் 50 ரூபாய் கொடுத்து கடந்த சனிக்கிழமை ஒரு லாட்டரி சீட்டு எடுத்துள்ளார். இதற்கிடையே வீட்டை விலை பேசிய நபர் டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து, விலையை உறுதி செய்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு வருவதாகக் கூறியிருக்கிறார். அன்றைய தினம் 50-50 லாட்டரி குலுக்கல் நடைபெற்றுள்ளது. மாலை 3 மணியளவில் முஹம்மது எடுத்த எஃப்.எஃப் 537904 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதனால் முஹம்மதுவும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்தனர். வீட்டை விலை பேசியவர்கள் அட்வான்ஸ் கொடுக்க முஹம்மதுவின் வீட்டுக்கு மாலை 5.30 மணியளவில் சென்றுள்ளனர். அவர்களிடம் லட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்ததைக் கூறியதுடன், வீட்டை விற்கவில்லை எனக்கூறி சந்தோஷமாக வழியனுப்பி வைத்துள்ளார் முஹம்மது. லாட்டரியில் ஒரு கோடிரூபாய் பரிசு விழுந்த முஹம்மது இதுபற்றி முஹம்மது கூறுகையில், "நான் தொடர்ந்து லாட்டரி எடுக்கும் பழக்கம் கொண்டவன் அல்ல. எப்போதாவது டிக்கெட் எடுப்பேன். எனக்கு சுமார் ஐம்பது லட்சம் ரூபாய் கடன் உள்ளது. கடனை அடைத்துபோக மீதி பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கத் தீர்மானித்திருக்கிறேன்" என்றார். கடன் சுமையால் வீட்டை விற்பனை செய்வதற்கு சில மணி நேரத்துக்கு முன் லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் விழுந்துள்ள சம்பவம் கேரளாவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
http://dlvr.it/SVkSqX

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...