Skip to main content

``பாஜக என்னை பயங்கரவாதி என்று UAPA சட்டத்தின் கீழ் கைது செய்ய காத்திருக்கிறேன்" - ஆதிர் ரஞ்சன்

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, `ராஷ்டிரபத்னி' என காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கூறிய சம்பவம் நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ், பா.ஜ.க-விடையே பெரும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதினார். அதில்,"நான் பேசியது தெரியாமல் வாய்தவறி வந்த வார்த்தை. அதற்காக வருந்துகிறேன். மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். திரௌபதி முர்மு ஆனாலும், தொடர்ந்து பா.ஜ.க தலைவர்கள் அவரை விமர்சித்துவருகின்றனர். மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களை சந்தித்த போது, "அது வாய்தவறி வந்த வார்த்தையல்ல. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெளிவாக இரண்டாவது முறை 'ராஷ்டிரபத்னி' என்று தன்னைத் திருத்திக் கொள்கிறார். இது போன்ற விஷயங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர் தேசவிரோதி, பழங்குடியினருக்கு எதிரானவர்.மேலும் குடியரசுத் தலைவரிடம் சென்று மன்னிப்பு கேட்டுவிட்டாரே என்று இந்த விவகாரத்தை எப்படி சிறுமைப்படுத்துவது?, இது அவ்வளவு எளிதானதா?, கண்டிக்கத்தக்கது" எனத் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பா.ஜ.க-வின் இந்த விமர்சனத்துக்கு பதிலளிக்கும் விதமாக, காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "பா.ஜ.க என்னை பயங்கரவாதி என்று UAPA சட்டத்தின் கீழ் கைது செய்ய காத்திருக்கிறேன். நான் யாருக்கும் பயப்படவில்லை. அவர்கள் பழங்குடியினரின் பாதுகாவலர்களாக மாற விரும்புகிறார்கள், ஆனால் பழங்குடி மக்களின் கொலைகள் எப்படி நடக்கின்றன என்பதை மறைக்க விரும்புகிறார்கள். சோனியா காந்தியின் கீழ் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் மாற்றப்படுகின்றன, அவர்கள் பழங்குடிகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள்" எனக் கூறியுள்ளார்.நாடு முழுவதும் பசுவதை தடைக்கு சாத்தியம் இல்லை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
http://dlvr.it/SVlb6L

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...