உத்தரப்பிரதேசத்தின் ஜலான் மாநிலத்தில், கைத்தேரி கிராமத்தில், 296 கிமீ நீளமுள்ள பந்தல்கண்ட் விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 16-ம் அன்று திறந்து வைத்தார். 296 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த 4 வழி நெடுஞ்சாலை அந்த மாநிலத்தில் உள்ள 7 மாவட்டங்களை கடந்து செல்கிறது. இந்த சாலைக்கு பந்தல்கண்ட் எக்ஸ்பிரஸ் சாலை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த ஒரு வாரத்தில், கனமழை காரணமாக, சாலையின் ஒரு பகுதியில் ஆழமான பள்ளங்கள் தோன்றியதாக தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சிமீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
ये तो गनीमत है कि पाबंदी के बावजूद हाथी जी सपा के बनाए मजबूत ‘आगरा-लखनऊ एक्सप्रेस-वे’ पर विचरण कर रहे हैं, कहीं ग़लती से ये बुंदेलखंड एक्सप्रेस-वे पर चले गये होते तो गुणवत्ता का मारा वो बेचारा इनका वज़न सह नहीं पाता… वो ख़ुद खंडित होता और ये चोटिल।
एक्सप्रेस-वे सुरक्षा कहाँ है? pic.twitter.com/pqc4H0z5SY— Akhilesh Yadav (@yadavakhilesh) July 29, 2022
இந்த நிலையில், இது தொடர்பாக, அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``சமாஜ்வாடி கட்சியால் வலிமையாக கட்டப்பட்ட ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ் வழியாக யானை நடந்து செல்கிறது. இதுவே யானை தவறுதலாக பந்தல்கண்ட் எக்ஸ்பிரஸ் சாலையில் (பாஜக ஆட்சியில் அமைக்கப்பட்டது) நடந்து சென்றிருந்தால் எடை தாங்காமல் சாலை இடிந்து விழுந்திருக்கும். யானைக்கும் காயம் ஏற்பட்டிருக்கும். எக்ஸ்பிரஸ் சாலைக்கான பாதுகாவலர்கள் எங்கே?'' என பதிவிட்டிருக்கிறார்.
பாஜக-வினர் அகிலேஷின் இந்த பதிவுக்கு எதிர்வினை ஆற்றி வருகிறார்கள். பிரதமர் மோடி திறந்து வைத்த சாலை: `ஒரே வாரத்தில் ஊழல் குழிகள் வெளிவந்துவிட்டது’ - அகிலேஷ் யாதவ் சாடல்
http://dlvr.it/SVmCSv
http://dlvr.it/SVmCSv
Comments
Post a Comment