மேற்கு வங்க மாநில தேசிய நெடுஞ்சாலையில், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 3 பேர், நேற்றிரவு காரில் கட்டுக்கட்டாகப் பணத்துடன் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் சிக்கியுள்ள எம்.எல்.ஏ-க்கள் இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சாப் மற்றும் நமன் பிக்சல் கொங்கரி என தெரியவந்துள்ளது. மேற்கு வங்கத்தில், ஆசிரியர் நியமன முறைகேட்டில் அமைச்சர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதையடுத்து, குறிப்பிட்ட சிலரை மட்டுமே அமலாக்கத்துறை ஆய்வு செய்கிறதா என திரிணாமுல் கேள்வியெழுப்பியிருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.பறிமுதல் செய்யப்பட்ட பணம்
நேற்றிரவு, மேற்கு வங்கத்தின் பஞ்ச்லா காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இவர்கள் மூவரும் சென்றுகொண்டிருந்த காரை போலீஸார் மறித்திருக்கின்றனர். அப்போது காரை சோதனை செய்ததில், பெரிய தொகையிலான பணம் இருப்பது தெரியவந்திருக்கிறது. எஸ்.பி ஸ்வாதி பங்காலியா
இது குறித்து ரூரல் ஹவுரா எஸ்.பி ஸ்வாதி பங்காலியா, ``ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ-க்கள் காரில் இருந்தனர். அதோடு நிறைய பணமும் இருந்தது. பெரிய தொகையாக இருக்கும் என்பதால், பணம் எண்ணும் இயந்திரத்தை நாங்கள் கேட்க வேண்டியிருந்தது. மேலும், முழு எண்ணிக்கை முடிந்த பிறகே எவ்வளவு பணம் மீட்கப்பட்டது என்பது தெரியவரும்" என ஊடகத்திடம் கூறினார்.
மேலும் ஒரு போலீஸ் அதிகாரியொருவர், எம்.எல்.ஏ-க்களுடன் மேலும் இருவர் இருந்ததாகவும், காரில் காங்கிரஸின் தேர்தல் சின்னத்துடன் எம்.எல்.ஏ ஜம்தாரா ஜார்கண்ட் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ்
இந்தச் சம்பவத்தையடுத்து, பா.ஜ.க-வும் காங்கிரஸும் ஒன்றையொன்று சாடிவருகின்றன. இது குறித்து காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், ``பா.ஜ.க-வின் `ஆபரேஷன் லோட்டஸ்’ இன்றிரவு ஹவுராவில் அம்பலமானது" என என நேற்று ட்வீட் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஜார்கண்ட் மாநில பா.ஜ.க பொதுச்செயலாளர் ஆதித்யா சாஹு, ``ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஊழல் நடந்ததற்கு இந்தப் பணமே ஆதாரம். அவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஊழல் அதிகரித்து வருகிறது" எனச் சாடியிருந்தார்.
இந்த சம்பவம் காரணமாக, சம்பத்தப்பட்ட 3 எம்.எல்.ஏ-க்களையும் காங்கிரஸ் இடைநீக்கம் செய்திருக்கிறது.50 கோடி பணம்: ``என் வீடுதான்... ஆனால் எனக்கே அனுமதி இல்லை” - மே.வங்க அமைச்சரின் உதவியாளர்
http://dlvr.it/SVpS3v
http://dlvr.it/SVpS3v
Comments
Post a Comment