புதுக்கோட்டை அருகே திருக்கோகரணம் அருள்மிகு ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்னேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. மிகவும் பழமையான இந்த குடைவரைக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடித் திருவிழா 10 நாள்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு, கோயிலின் ஆடித் திருவிழா கடந்த 23-ம் தேதி காப்புக் கட்டுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சுவாமிக்குச் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான இன்று, காலை ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அருள்மிகு ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை திருக்கோணேஸ்வரர் தேரில் எழுந்தருள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலான இங்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தேரோட்ட விழா நடைபெறாத நிலையில், இன்று நடைபெற்ற விழாவைக் காணப் புதுக்கோட்டை நகரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.தேர்
அப்போது, அங்குக் குழுமியிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தபோது, எதிர்பாராத விதமாகத் தேர் முன் பக்கமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தேர் கவிழ்ந்ததைச் சற்றும் எதிர்பார்க்காத பக்தர்கள் சிலர் தேரின் சக்கரத்திற்கு இடையே மாட்டிக்கொண்டனர். இதில், தேருக்கு அருகே இருந்த 10-க்கும் மேற்பட்டோரை அங்குப் பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் உதவியுடன் விழாக் குழுவினர் மீட்டனர். இதில், 5 பெண்கள் உட்பட 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்துத் தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, எஸ்.பி வந்திதா பாண்டே ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.தேர் விபத்து
சுமார் 30 அடி உயரம் கொண்ட இந்தத் தேர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. அப்போது, ஒருமுறை வெள்ளோட்டம் பார்க்கப்பட்டிருக்கிறது. அதன்பின்பு, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்றுப் பரவலால் தேர்த் திருவிழா தடைப்பட்டிருந்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெறவிருந்த நிலையில், எதிர்பாராத விதமாகத் தேரின் சக்கரங்களை இணைக்கும் பக்கவாட்டு கம்பி நழுவி இந்த தேர் விபத்தானது ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அதோடு அதிகம் பேர், ஒரு சேர இழுத்ததும் தேர்க் கவிழ முக்கிய காரணமாக அமைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, விபத்துக்கான காரணம் குறித்து திருக்கோகர்ணம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். தண்டவாளத்தில் விரிசல்; வேகமாக வந்த ரயில்! - சாதுர்யமாகச் செயல்பட்ட கீமேனால் தவிர்க்கப்பட்ட விபத்து
http://dlvr.it/SVpS0S
http://dlvr.it/SVpS0S
Comments
Post a Comment