Doctor Vikatan: என் அம்மாவுக்கு 65 வயதாகிறது. அடிக்கடி கை, கால்களில் வலிப்பதாகச் சொல்வார். வெந்நீர் ஒத்தடம் கொடுக்கச் சொல்வார். கை, கால்களை அமுக்கிவிடச் சொல்வார். ஒத்தடம் கொடுக்க வெந்நீர், ஐஸ் இரண்டில் எது சிறந்தது... வலிக்கும் பகுதியை அமுக்கிவிடுவது சரியானதா? பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ். நித்யா மனோஜ் Doctor Vikatan: பெரியவர்கள் baby soap, baby shampoo உபயோகிப்பது சரியா? ஒத்தடம் என்பதை மருத்துவ சிகிச்சைகளில் காலங்காலமாகப் பயன்படுத்தி வருகிறோம். அதில் நிறைய பலன்கள் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், எப்போது ஒத்தடம் கொடுக்கலாம், எப்போது கொடுக்கக்கூடாது என்பதற்கு சில வரையறைகள் உண்டு. குறிப்பாக, வெந்நீர் ஒத்தடம் கொடுக்கும்போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும். சருமத்தில் ஏதேனும் வெட்டுக்காயங்கள் இருந்தாலோ, புண்கள் திறந்தநிலையில் இருந்தாலோ ஒத்தடம் கொடுக்கவே கூடாது. அடிபட்ட இடத்தில் உணர்ச்சி நரம்புகள் பாதிக்கப்பட்ட நிலையில், உணர்திறன் குறைவாக இருந்தாலும் கட்டுப்பா...