Skip to main content

Doctor Vikatan: எவ்வளவு சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாகவே இருப்பது ஏன்?

Doctor Vikatan: சிலருக்கு வழக்கத்தைவிட சற்று அதிகம் சாப்பிட்டாலே உடல் எடை ஏறிவிடுகிறது. இன்னும் சிலருக்கோ என்ன சாப்பிட்டாலும் எடை ஏறாமல், ஒல்லியாகவே இருப்பதைப் பார்க்கிறோம். அவர்களுக்கு மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது...  இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.  

ஷைனி சுரேந்திரன்

உங்களுக்குத் தெரிந்தவர்களில் சிலர்  ஓரிடத்தில் நிற்காமல், உட்காராமல் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இவர்களின் இந்தச் செயலை   'நான் -ஆக்டிவிட்டி எக்சர்சைஸ் தெர்மோஜெனசிஸ் ' (non activity exercise thermogenesis ) என்று சொல்கிறோம். இவர்களுக்கு வளர்சிதை மாற்றம் அதிகமாகவே இருக்கும். இவர்கள்  ஒல்லியாகவே  இருப்பார்கள்.

அடுத்து மரபியல் ரீதியாகவும் சிலர் ஒல்லியான உடல்வாகுடன் இருப்பார்கள். குடும்பத்தில்  அத்தனை பேரும் ஒல்லியாகவே இருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு  தசைகளின் அடர்த்தி ( Muscle mass) அதிகமிருக்கும். தசை என்பது உடல் முழுக்க இருக்கும். அது சும்மாவே இருக்காது. எந்த நேரமும் எனர்ஜி கேட்டுக்கொண்டே இருக்கும்.  ஒருவரது உடலில் தசை அடர்த்தி அதிகமாக, ஆக, கொழுப்பின் அளவு குறையும். உடலளவில் பலமாகவும் உணர்வோம். எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். இப்படிப்பட்டவர்களின் நடையும், தோரணையும் கம்பீரமாகவே இருக்கும். தசை அடர்த்தி அதிகமிருப்பவர்கள், எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருப்பார்கள். அவர்களுக்கு கொழுப்பும் கம்மியாகவே இருக்கும். 

muscle mass

தைராய்டு ஹார்மோன்  அதிகம் சுரக்கும் ஹைப்பர் தைராய்டிசம் பாதிப்புள்ளவர்களும் ஒல்லியாக இருப்பார்கள்.  இன்னும் ஒரு பிரிவினர், என்னதான் விருப்பமான உணவு கொடுத்தாலும் அளவோடுதான் சாப்பிடுவார்கள்.  அதனாலேயே ஒல்லியாக இருப்பார்கள்.  ஒல்லியாக இருப்பவர்கள் எல்லோரும் ஆரோக்கியமானவர்கள் என்று அர்த்தமில்லை. ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தால் அவர்களுக்கு இருக்கும் பிரச்னைகள் தெரியவரலாம். 'ஃபங்ஷனல் ஃபிட்னெஸ்' (Functional fitness) என்று ஒரு விஷயம் உண்டு. அதாவது கனமான ஒரு பொருளைத் தூக்க முடிகிறதா, முதுகுவலியின்றி மாடிப்படிகளில் ஏறி, இறங்க முடிகிறதா என்றெல்லாம் பார்ப்பது ஃபங்ஷனல் ஃபிட்னெஸ்ஸின் அளவுகோல்.

சிலருக்கு தினமும் இரவில் குறிப்பிட்ட மணிக்கு தூங்கியே ஆக வேண்டும். என்ன வேலை இருந்தாலும், யார் உடனிருந்தாலும் கவலைப்பட மாட்டார்கள். எனக்கு என் தூக்கம் முக்கியம் என தூங்கிவிடுவார்கள். அவர்களுக்கு ஹார்மோன் பிரச்னைகள் வராது. உடலில் கொழுப்பு சேராது. அதனால் அவர்களும் ஒல்லியாக இருப்பார்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...