Skip to main content

Doctor Vikatan: வெந்நீர் ஒத்தடம், ஐஸ் ஒத்தடம்... உடல்வலிக்கு எது சிறந்தது?

Doctor Vikatan: என் அம்மாவுக்கு 65 வயதாகிறது. அடிக்கடி கை, கால்களில் வலிப்பதாகச் சொல்வார். வெந்நீர் ஒத்தடம் கொடுக்கச் சொல்வார். கை, கால்களை அமுக்கிவிடச் சொல்வார்.  ஒத்தடம் கொடுக்க வெந்நீர், ஐஸ் இரண்டில் எது சிறந்தது... வலிக்கும் பகுதியை அமுக்கிவிடுவது சரியானதா?

பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.

நித்யா மனோஜ்

ஒத்தடம் என்பதை மருத்துவ சிகிச்சைகளில் காலங்காலமாகப் பயன்படுத்தி வருகிறோம். அதில் நிறைய பலன்கள் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், எப்போது ஒத்தடம் கொடுக்கலாம், எப்போது கொடுக்கக்கூடாது என்பதற்கு சில  வரையறைகள் உண்டு. குறிப்பாக, வெந்நீர் ஒத்தடம் கொடுக்கும்போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.

சருமத்தில் ஏதேனும் வெட்டுக்காயங்கள் இருந்தாலோ, புண்கள் திறந்தநிலையில் இருந்தாலோ ஒத்தடம் கொடுக்கவே கூடாது. அடிபட்ட இடத்தில் உணர்ச்சி நரம்புகள் பாதிக்கப்பட்ட நிலையில், உணர்திறன் குறைவாக இருந்தாலும் கட்டுப்பாடற்ற நீரிழிவு  இருந்தாலும் ஒத்தடம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு சருமத்தில் உணர்திறன் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைச் சொல்லத் தெரியாது. அந்நிலையில் ஒத்தடம் கொடுத்தால் கொப்புளங்கள் வர வாய்ப்புகள் அதிகம். 

சிலருக்கு கீழே விழுந்து ஊமைக்காயம் ஏற்பட்டிருக்கும். ரத்தக்கட்டு இருப்பதை உறுதிசெய்தால், அந்த ரத்தக்கட்டைக் குறைப்பதற்கு ஒத்தடம் கொடுக்கலாம். 

மசாஜ்

எங்கெல்லாம் ரத்த ஓட்டம் குறைய வேண்டும் என நினைக்கிறோமோ, அங்கெல்லாம் ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.  எங்கெல்லாம் ரத்த ஓட்டம் அதிகரிக்க வேண்டும் என நினைக்கிறோமோ, அங்கெல்லாம் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். அடிபட்ட உடனே நாம் கொடுக்க வேண்டியது ஐஸ் ஒத்தடம்.  நாள்பட்ட வலிகளுக்குக் கொடுக்க வேண்டியது வெந்நீர் ஒத்தடம்.

வெந்நீர் ஒத்தடமோ, ஐஸ் ஒத்தடமோ எதைக் கொடுக்கும்போதும் அந்தப் பகுதியில் மெல்லிய துணியைப் போட்டுவிட்டு பிறகு அதன் மேல் ஒத்தடம் கொடுப்பது பாதுகாப்பானது. எந்த ஒத்தடமானாலும் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுச் செய்யும்போது கைவைத்தியம்கூட பாதுகாப்பானதாக இருக்கும்.

உடல் வலி ஏற்படும்போது மசாஜ் செய்வது போல உடலை அமுக்கிவிடுவது சரியா என்ற கேள்வியும் சிலருக்கு உண்டு. அப்படி யாரேனும் அமுக்கி விடும்போது இதமாக உணர்வோம்.  ஆனால், அமுக்கிவிடும்போது வலி அதிகமானால், உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். அமுக்கிவிடும்போது வலியை உணர்ந்தால், அது உள்ளுக்குள் ரத்தம் உறைந்திருப்பதன் அறிகுறியாகவோ, எலும்புகள் உடைந்துபோயிருப்பதன் அறிகுறியாகவோ, தசைநார் கிழிந்துபோயிருப்பதன் அறிகுறியாகவோ இருக்கக்கூடும். எச்சரிக்கையாகச் செயல்படவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...