2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் தோல்வியடைந்தார். அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றார். ட்ரம்ப் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து, ட்ரம்ப் சமூக வலைதளங்கள் மூலம் வெறுப்பை விதைப்பதாகக் கூறி, அவரின் சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டன. மேலும், 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்காக டொனால்டு ட்ரம்ப் தயாராகிவருகிறார். அமெரிக்காவின், கொலம்பியாவில் நடைபெற்ற பேரணி ஒன்றில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், உக்ரைன் - ரஷ்யா போரை 24 மணி நேரத்தில் நிறுத்தியிருப்பேன். சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் போர் நடக்காமல் செய்திருப்பேன்.ரஷ்யா - உக்ரைன் போர் தற்போதும் பேச்சுவார்த்தையின் மூலம் போரை நிறுத்த முடியும். ஆனால், இங்கு அதைச் செய்ய யாரும் இல்லை. தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பலவீனத்தாலும், திறனற்ற ஆட்சியாலும் நாம் மூன்றாம் உலகப் போரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம...