வடக்கு சோமாலியாவில் அமெரிக்க சிறப்பு நடவடிக்கைக் குழுவால் அந்த நாட்டின் முக்கிய இஸ்லாமிய அமைப்பு அதிகாரியும், 10 பயங்கரவாதச் செயற்பாட்டாளர்களும் கொல்லப்பட்டதாக பைடன் அரசு அறிவித்தது. கொல்லப்பட்ட அதிகாரி உலகளாவிய பயங்கரவாத அமைப்பின் முக்கிய நிதி உதவியாளர் பிலால் அல்-சூடானி என்று கூறப்படுகிறது.
டயர் நிக்கோல்ஸ் என்ற ஆப்ரிக்க அமெரிக்க வாகன ஓட்டிக்கும், போக்குவரத்து நிறுத்தத்தின்போது அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது காவலர்களால் அவர் அடித்துக்கொல்லப்பட்டார். இந்த நிலையில், ஐந்து காவல் அதிகாரிகளின்மீது கொலை வழக்கு பாய்ந்திருக்கிறது.
முஸ்லிம்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து கனடா, இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான தனது முதல் சிறப்புப் பிரதிநிதியை நியமித்திருக்கிறது. பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலர் அமிரா எல்கவாபி இஸ்லாமியத்துக்கு எதிரான வெறுப்பைத் தவிர்க்கும் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
கொடிய ஆயுதப் படைகளின் (CAF) பட்டியலிலிருந்து உக்ரைனுக்கு நான்கு போர் டாங்கிகளை வழங்குவதாக கனடா பாதுகாப்புத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் அறிவித்திருக்கிறார். இந்த டாங்குகளின் பயன்பாடு குறித்த பயிற்சியும் அளிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார்.
இந்திய-அமெரிக்க விண்வெளி வீரர் ராஜா சாரியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமானப்படை பிரிகேடியர் ஜெனரல் பதவிக்குப் பரிந்துரை செய்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது. ராஜா சாரி தற்போது க்ரூ-3 கமாண்டராக டெக்ஸாஸ் விண்வெளி மையத்தில் பணிபுரிந்துவருகிறார்.
சமீபத்தில் ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்திலுள்ள ஆர்வலர்களால் இஸ்லாத்தின் புனித நூலான குரான் அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து, பாகிஸ்தான், ஈராக் மற்றும் லெபனான் உட்பட பல இஸ்லாமிய நாடுகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகிறது.
ஜெருசலம் ஆலயத்துக்கு வெளியே ஒரு பாலஸ்தீன நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். சமீபத்தில் வெஸ்ட் பாங்கில் பாலஸ்தீனர்கள் ஒன்பது பேர் கொல்லப்பட்டதையடுத்து, 21 வயது நபர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகத் தகவல்
பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிக், ஆஸ்திரேலியா ஓபனில் தன் தந்தை, ரஷ்ய அதிபர் புதின் முகமுடைய கொடியைப் பிடித்து போஸ் கொடுக்கும் படங்கள் தவறாகச் சித்திரிக்கப்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தான் கராச்சியின் கெமாரி பகுதியில் மர்மமான நோயால் 18 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. இதில் 14 பேர் குழந்தைகளே. இறப்புக்கான காரணங்களை அந்நாட்டுச் சுகாதார அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர்.
http://dlvr.it/ShcBs6
http://dlvr.it/ShcBs6
Comments
Post a Comment