கணவர்கள் எப்படி நடந்துகொண்டால் மனைவிகளுக்கு மிகவும் பிடிக்கும்..? கணவர்கள் தங்களை எப்படி நடத்தினால் பெண்களுக்குப் பிடிக்கும்..? தாம்பத்திய உறவில் எப்படிப்பட்ட ஆண்களை பெண்கள் விரும்புகிறார்கள்..? இந்த மூன்று கேள்விகளுக்குமான பதில்களை, காமசூத்ரா மற்றும் சில ஆய்வுகளின் அடிப்படையில் 10 பாயின்ட்டுகளாக பாலியல் மருத்துவர் காமராஜ் இங்கே பகிர்ந்து கொள்கிறார். 1. தாம்பத்திய உறவில் நிதானமாகச் செயல்படுகிற கணவனை, மனைவிக்கு ரொம்பவே பிடிக்கும். ஏனென்றால், ஆணின் தாம்பத்திய ஈடுபாடு என்பது பல்ப் போல... ஸ்விட்ச் போடவும் எரிவதுபோல உணர்வு, உறவு, உடனடியாக தூக்கம் என்று இருப்பார்கள். ஆனால், பெண்கள் அயர்ன் பாக்ஸ்போல... உணர்வு, உறவு இரண்டுமே மெதுவாகத்தான் சூடு பிடிக்க ஆரம்பிக்கும். தவிர, ஸ்விட்ச்சை ஆஃப் செய்த பிறகும் அயர்ன் பாக்ஸ் சிறிது நேரம் சூடாக இருப்பதுபோல உறவுக்குப் பிறகும் கணவரின் அருகாமையை விரும்புவார்கள். அதனால்தான், தாம்பத்திய உறவில் நிதானமாக, ஜென்டிலாக ஈடுபடுகிற கணவனை, மனைவிக்கு மிகவும் பிடிக்கும். 2. உறவின்போது ஆண்கள் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். ஆனால், பெண்கள் அந்த நேரத்தில் கணவன் தன் உடலை ப...