Skip to main content

போலி ஆர்கஸத்தை விட, உண்மையை சொல்லிவிடுவது காமத்துக்கு நல்லது...! | ரொமான்ஸ் ரகசியங்கள் - 19

மயூரிக்கு அபிநவ் மீது அவ்வளவு காதல். ஆனால், இப்போதெல்லாம், அவளுக்கு விருப்பம் இருக்கிறதா, இல்லையா என்பதைக் கூட அறிந்துகொள்ளாமல் இரவு உணவுக்குப் பிறகு செக்ஸுக்காக மட்டுமே அழைக்கிற அபிநவ் மீது அவளுக்கு எந்த ஈர்ப்பும் வருவதே இல்லை. ஆனாலும், அவளுக்கு அபிநவ்வை பிடிக்கும். அவன் எப்போது அழைத்தாலும், முடியாது என்று சொல்லாமல் ஒப்புக்கொள்வதுதான் காதல் என்று நினைத்திருந்தாள்.

பணியிடத்தில் அபிநவ்வுக்கு ஆயிரதெட்டுப் பிரச்னைகள். வீட்டுக்கு வந்தால்அதையெல்லாம் மயூரியிடம் காட்டிக் கொள்வதில்லை. தான் எந்தப் பிரச்னையும் இல்லாதவனாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காகவே மயூரியுடன் தினமும் தாம்பத்யம் என்பதாய் இருக்கிறான் அபிநவ். டின்னருக்குப் பிறகு மாத்திரையை விழுங்கிவிட்டு உறங்குவது போல், தாம்பத்யமும் தினசரி நிகழ்வு என மனதுக்குள் அனிச்சையாய்ப் பொருத்திக் கொண்டு ஒரு சுழற்சியான வாழ்க்கைக்குப் பழகியிருந்தான் அபிநவ்.

ஒருவர் மீது ஒருவருக்கு காதல் இருந்தாலும், தாம்பத்ய நேரத்தை கடமையே என்று கடக்கும் விசித்திர பிரச்னைக்கு ஆளாகியிருந்தார்கள் இருவரும்.

Intimacy

அன்று கார்திகை தீபம் என்பதால் வீடெங்கும் கோலமிட்டு அகல் விளக்குகளை ஏற்றிக் கொண்டிருந்தாள் மயூரி. அவள் அணிந்திருந்த பூப்போட்ட மூக்குத்தி, விளக்கொளியில் பிரகாசமாக மின்னிக் கொண்டிருந்தது. பச்சை நிற ஜாக்கெட்டும் தங்க நிற பட்டுப் புடவையும் அணிந்திருந்தாள். அபிநவ் எப்போதும் போல் சோர்வாக வீட்டுக்கு வந்தான். முன்பெல்லாம், மயூரியை புடவையில் பார்த்தால் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொஞ்சிவிட்டுப் போவான். இப்போது, ஒரு சிறிய புன்னகையில் கடந்துவிட்டான். அபிநவ் ஏதோவொரு மன அழுத்தத்தில் இருப்பது மட்டும் மயூரிக்குப் புரிவதால், அவனாக எதுவும் சொல்லாதவரை மேற்கொண்டு அவனை தொந்தரவு செய்ய வேண்டாமென அமைதியாய் கடந்து கொண்டிருக்கிறாள்.

எப்போதும் போலவே இப்போதும் இரவு உணவு முடிந்ததும் மயூரியுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளத் தயாராகிறான் அபிநவ். அவன் கண்களில் ஒளியில்லை. குரலில் கவர்ச்சியில்லை. மயூரியின் கைகள் பிடித்திழுந்து மார்போடு சேர்த்தணைக்கிறான், மயூரியின் யோசனை வேறு எங்கெங்கோ போகிறது.

திருமணமான முதல் வாரம். மொட்டை மாடியில் நிலவொளியில் நின்றிருந்தாள் மயூரி. அவள் கட்டியிருந்த புடவை காற்றில் நழுவியதில், சுண்டக் காய்ச்சியப் பால்கோவா நிறத்திலிருந்த அவள் இடுப்பும், வானின் நிலவும் ஒரே நிறத்தில் தெரிந்தன. தூரத்தில் நின்றபடி நிலவையும் மயூரியையும் ஒருசேர ரசித்துக் கொண்டிருந்தான் அபிநவ்.

Sex I Representational Image

`தொட முடியாத தூரத்தில் வான் நிலா. தொடுகிற தூரத்தில் தன் பெண் நிலா’ என்றெல்லாம் மனதுக்குள் கவிதை வடித்தபடி ஒரு பூனைக்குட்டியைப் போல் மயூரியின் பின்னால் மெதுவாக நடந்து சென்றான். காற்றில் சரிந்துவிழுந்த கூந்தலை அவள் மெதுவாக சரிசெய்து கொண்டிருந்த நேரம் பார்த்து, பின்னால் இருந்தபடி அவள் இடுப்பில் இதழ் பதித்து சில்லென முத்தமிடுகிறான். இதைக் கொஞ்சமும் எதிர்பாராதவள் அலறியபடி துள்ளி ஓடி திரும்பிப் பார்க்கிறாள். நிலவைத் தொட்டு முத்தமிட்ட குதூகலத்தில் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தான் அபிநவ். அவனை செல்லமாகத் துரத்திக் கொண்டு ஓடினாள் மயூரி. மொட்டைமாடியெங்கும் மாறி மாறி துரத்திக் கொண்டு ஓடினார்கள். செல்லக்கடி, சின்னச் சிணுங்கல்கள், கொஞ்சல்கள், தாபங்கள் என எல்லாம் சேர்ந்த கலவையாய் இதயம் இடம் மாறி, இருவரும் முழுவதுமாய் தங்களை இடம்மாற்றிக் கொண்டிருந்தார்கள்.

சர்ப்பங்கள் இரண்டும் பின்னிப் பிணைவது கண்டு வெட்கத்தால் மேகம் கொண்டு முகம் மறைத்துக் கொண்டது நிலவு. அந்த இரவில் நிலவின் பால்மழையில் மெதுவாய் நனைந்து, மெதுவாய் கரைந்து, காமத்தீதனில் மெதுவாய் எரிந்து , பின் மெதுமெதுவாய் உயிர்த்தெழுந்து இன்னொரு முறையாய் மீண்டும் பிறந்ததுபோல் உயிர்ப்பித்து எழுந்தார்கள்.

காதலுடன் இணைகிற காமம் ஒன்றுதான் வாழுங்காலத்தில் கிடைக்கிற நிஜ சொர்க்கம். இதை உச்சத்தின் முடிவில் இருவருமே தங்களின் கண்களின் வழி உணர்ந்தார்கள்.

இனிக்க இனிக்க காதல் நிரம்பிய தாம்பத்யக் காலங்களின் சுவையை இப்போது நினைத்துப் பார்க்கிறாள் மயூரி. இப்போதும் அபிநவ் மீது அவளுக்கு ஈர்ப்புக் குறையில்லை. அவனை கட்டியணைத்து முத்தமிட்டு ஒரு காமப் பார்வையை வீசிவிட்டு தாம்பத்யத்தை தொடர முயன்றாலும், அவன் எதையோ யோசித்தபடிதான் அந்த நேரத்தில் நடந்து கொள்கிறான்.

``மயூ… உனக்கு ஓகேவா சொல்லு. உன் கண்ணப் பாத்தா உனக்கு இன்னும் வேணும்னு தோணுதுடி. மயூ உனக்கு ஆர்காஸம் கிடைச்சதா? ஆர் யூ சேட்டிஸ்ஃபைடு மயூ?’’

ஒவ்வொரு முறை தாம்பத்யத்துக்குப் பிறகும் மயூரியின் திருப்தியைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அபிநவ் உறங்கப் போவதில்லை. இப்போது வரை கடமையே என்று அது நடந்தாலும், அபிநவ்வின் தாம்பத்ய நேரத்துக்குக் கேள்விகள் மட்டும் அப்படியே தொடர்கின்றன. ஏதோவொரு திடீர் குழப்பத்தில் கவனம் சிதறியிருக்கும் அபிநவ்வை காயப்படுத்தக் கூடாது என்பதால், தான் அடையாத ஆர்கஸத்தை `அடையவில்லை’ என்று உண்மையைச் சொல்லி இரு உடல்களுக்கும் போலியான துன்பத்தை ஏற்படுத்த விரும்பாமல், பலமுறை யோசித்துப் பார்த்த மயூரி, இப்போதெல்லாம் தாம்பத்யத்திலிருந்து சீக்கிரம் விடுபட வேண்டும் என்பதற்காகவே ஆர்கஸம் அடைந்துவிட்டதைப் போல் போலியாக நடித்துக் கொண்டிருக்கிறாள். இதை நிஜமென நம்பிய அபிநவ், தான் மன அழுத்தத்தில் இருந்தாலும் மயூரியை நன்றாகப் பார்த்துக் கொள்வதாக நினைத்துக் கொண்டு, கடமைக்கென்று நடத்துகிற இந்த தாம்பத்யத்துக்குப் பழகிவிட்டான் .

மொட்டை மாடியில் மிதமான அளவில் காற்று வீசிக் கொண்டிருந்தது. வானொலியின் பண்பலை அலைவரிசையில் தம்பதிகளுக்கான நிகழ்ச்சி ஒலிப்பரப்பாகிக் கொண்டிருந்தது.

``மேடம்... என் புருஷன் தெனம் குடிச்சிட்டு வந்து அடிக்கிறாரு மேடம். வூட்ட வுட்டு போயிடலாம்னு கூட தோணும். ஆனா, எங்க ஊரு சுத்துனாலும் என் முந்தானையில தூங்குனா தான் அந்தாளுக்கு தூக்கமே வரும். அடிக்கிறான்னு நெனைச்சு சாவறதா… இல்ல அணைக்கிறானேனு நினைச்சு வாழறதானே தெரில மேடம். அந்தாளுக்கு என்னை புடிச்சி இருக்கா... இல்ல என் உடம்பை புடிச்சிருக்கானே தெரில மேடம்… நீங்க தான் ஒரு வழி சொல்லணும்’’

- நேயர் ஒருவர் கேட்டுக் கொண்டிருந்த கேள்விக்கு நிகழ்ச்சித் தொகுப்பாளர் பதிலளித்துக் கொண்டிருந்தார், 

காற்றில் கசிந்து காதில் விழுந்த ஒவ்வொரு வார்த்தையும் அபிநவ்வுக்கு சுருக்கென குத்துவது போல் இருந்தது. மயூரியை அழைத்தான். 

``உன்கிட்ட ஒண்ணு கேப்பேன்… உண்மையை சொல்வியா மயூரி?’

உருக்கமாகக் கேட்டான்.

தலையாட்டினாள்.

``நான் கொஞ்ச நாளா சில பிரச்னைகள்ல இருக்கேன். என் மனசு முழுக்க அதையே தான் சுத்தி சுத்தி வந்துட்டு இருக்கு. சீக்கிரம் அதையெல்லாம் சரி பண்ணிடுவேன். அதுவரைக்கும் அதையெல்லாம் உன்கிட்ட சொல்லி உன்னை கஷ்டப்படுத்த வேணாம்னு தான் அமைதியா இருக்கேன். நீ என்னை தப்பா நினைக்கிறீயா?’

Making Love

அபிநவ் அவள் கைகள் பற்றி கேட்டான்.

``உங்களுக்கு பிரச்னை ஏதோ இருக்குன்னு உணர முடிஞ்சது. அதை நீங்க சீக்கிரம் முடிப்பீங்கன்னும் தெரியும். அதை ஏன் கேட்டு உங்களை கஷ்டப்படுத்தணும்னு தான் நானும் கேட்கல. இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு?’’

``அது இல்ல மயூரி… வெறும் உடம்புக்காக மட்டும் தான் உன் கூடனு….’’ - பாதியில் நிறுத்தினான் அபிநவ்.

இதை மயூரி எதிர்பார்க்கவில்லை. அபிநவ் எப்போது கேட்டாலும் `சேட்டிஸ்ஃபைடு’ என்று சொல்லிவிட்டு அவன் நெற்றியில் முத்தம் வைத்து முடித்துவிட்டு, இப்போது `இல்லை’ என்று அவனிடம் எப்படி மறுப்பது. எதுவும் சொல்ல முடியாமல் சில நிமிடங்கள் மௌனமாய் நின்றாள்.

அபிநவ் அவள் பதிலுக்காகக் காத்திருந்தான்.

``நானும் உண்மையை சொல்லிடுறேங்க. எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்… அவ்ளோ லவ் பண்றேன். நீங்களும் அப்படித்தான். ஆனா, கொஞ்ச நாளா உங்ககிட்ட காதல் இருக்கிற அளவுக்கு காமத்துல பெருசா ஈர்ப்பு இல்லாத மாதிரி தோணுது. அதுக்குக் காரணம் ஏதோ ஒரு சின்ன பிரச்னை தான். அதை நீங்க சரி பண்ணிடுவீங்கன்னு எனக்குத் தெரியும். அதுக்காக உங்களை விட்டுக் கொடுக்க முடியாதுல்ல...’’

``அப்போ நீ சேட்டிஸ்ஃபைடு இல்லையா?’’ - அதிர்ச்சியாகக் கேட்டான் அபிநவ்.

``ச்சே... ச்சே… அப்படியெல்லாம் இல்ல. நான் சேட்டிஸ்ஃபைடுதான். ஆனா பாருங்க. `மோர் சேட்டிஸ்ஃபைடு’னு சொல்லணும்னு ஆசையா இருக்கும்ல’’ - சொல்லிவிட்டு நிலவைப் பார்த்தபடி நின்றாள் மயூரி. 

இருவருக்குள்ளும் எந்த பிரச்சனைகளும் இல்லை. ஆனாலும் இருவரும் ஒருவருக்கொருவர் காயப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே முழுமையாய் கிடைக்க வேண்டிய ஒரு நல்ல தாம்பத்யத்தை சில நாள்களாக அரைகுறையாய் அனுபவித்திருக்கிறார்கள். இப்போது ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசியப் பிறகு, வெளியில் எந்தப் பிரச்னை வந்தாலும் அதை இணைந்த கைகளாய் உடைத்தெறியலாம் என்கிற உண்மையை உணர்ந்து கொண்டார்கள்.

``வாழ்க்கைல பிரச்னைகள் இன்னைக்கு வரும் நாளைக்குப் போகும். அதுக்காக உன்னை முழுசா கொஞ்சாம விட முடியுமா? ‘’ - அவள் இடுப்பில் முத்தமிட்டு ஆரம்பித்தான் அபிநவ்.

மயூரியின் முனகலில் `மோர் சேட்டிஸ்ஃபைடு’ என்கிற வாக்கியம் முடிந்திருந்தது.


Comments

Popular posts from this blog

Sundar Pichai: "அன்றிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது!"- கூகுளில் 20 வருடங்கள் கடந்த சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை, தமிழ்நாட்டில் சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இன்று கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றுபவர். சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகர் ஜவஹர் வித்யாலயாவிலும், மெட்ராஸ் ஐ.ஐ.டி-யின் வனவாணி பள்ளியிலும் படித்தார். பின், ஐ.ஐ.டி கரக்பூரில் இன்ஜினீயரிங் படித்தார். அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸும், வார்டன் ஸ்கூலில் எம்.பி.ஏ-வும் முடித்தவர், மெக்கன்சியில் புராடெக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் தனது காதலியும் மனைவியுமான அஞ்சலியின் மென்பொருள் நிறுவனமான Intuit-ல் வணிக இயக்க மேலாளராகத் தன் கரியரைத் தொடர்ந்தார். அதன்பின் Accenture நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 2004க்குப் பிறகுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஆரம்பமானது.சுந்தர் பிச்சை, அஞ்சலி 2004-ல் கூகுள் டூல் பார் (Tool bar) புராடெக்ட் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்தவர், தன்னுடைய திறமையால் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறினார். 2015-ல் கூகுளின் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். 2019-ல் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet ...

`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’

`Black Lives Matter' என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது.அமெரிக்கா - போராட்டம் இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் போலீஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி ஒஹாயோ மாகாணத்தில் மின்கம்பத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்குவந்த போலீஸ் அதிகாரிகளிடம், விபத்து ஏற்படுத்திய நபர் தப்பித்து பாருக்குள் (Bar) ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, பாருக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிராங்க் டைசன் எனும் 53 வயது ஆப்ரிக்க அமெரிக்க நபரை வலுக்கட்டாயமாக இழுத்து,...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...