Skip to main content

Doctor Vikatan: எதைச் சாப்பிட்டாலும் வயிற்றுப்பொருமல்... அவதியிலிருந்து விடுபட தீர்வு என்ன?

Doctor Vikatan: எனக்கு சமீபகாலமாக எதைச் சாப்பிட்டாலும் வயிற்றில் ஒருவித உறுமல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அது வெளியே கேட்கும் அளவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. நான் கிழங்கு, கொண்டைக்கடலை போன்ற வாயு ஏற்படுத்தும் உணவுகளை உண்பதில்லை. ஆனாலும் இந்த வயிற்றுப் பொருமல் ஏன் வருகிறது... இதற்கு உடனடி நிவாரணம் என்ன?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

அம்பிகா சேகர்

நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த வயிற்றுப் பொருமல் பிரச்னைக்கு அசிடிட்டி பாதிப்பு தான் காரணமாக இருக்கும். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி சிறிது சிறிதாக ஏதேனும் சாப்பிட வேண்டும். தண்ணீர்  நிறைய குடிக்க வேண்டும். 

உருளைக்கிழங்கு, மொச்சைக்கொட்டை, கொண்டைக்கடலை, முட்டை போன்றவற்றைத் தவிர்ப்பது சிறந்தது. தவிர்க்க முடியாத போது, இவற்றில் நிறைய இஞ்சி-பூண்டு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிட்டால் இந்தப் பிரச்னை ஓரளவு கட்டுப்படும்.

அதேபோல நீங்கள் காரம் அதிகமான உணவுகளையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும். காரமான உணவுகள் இந்தப் பிரச்னையைத் தீவிரமாக்கும். வயிற்றில் பொருமல் சத்தம் வந்து தர்மசங்கடப்படுத்தும்.

அல்சர்

நீண்ட நேரம் சாப்பிடாமலேயே இருந்துவிட்டு, திடீரென சாப்பிடும்போதும் இந்தப் பிரச்னை  வரும். உதாரணத்துக்கு காலை உணவைத் தவிர்த்து விட்டு, மதியம் தாமதமாக உணவு சாப்பிடுவது போன்ற வழக்கங்கள் இந்தப் பிரச்னையைத் தீவிரமாக்கும்.எனவே, இரண்டு மணி நேரத்துக்கொரு முறை, 2 பிஸ்கட், ஒரு பழம், நீர்மோர், தண்ணீர் என ஏதேனும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை எல்லாவற்றையும் செய்த பிறகும் இந்தப் பிரச்னை தொடர்ந்தால், மருத்துவ ஆலோசனை அவசியம். ஏனெனில், இந்த அசிடிட்டி பிரச்னைக்கு அல்சர் கூட காரணமாக இருக்கலாம். அப்படி இருந்தால், மிதமான சிகிச்சை தேவைப்படும். அதன் பிறகு உணவுப்பழக்கம், வாழ்வியல் முறை மாற்றங்களின் மூலம் இதை சரிசெய்யலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...