Skip to main content

Apollo: அப்போலோ கேன்சர் சென்டர்ஸில் ரோபோட்டிக் ஸ்டீரியோடாக்டி கதிரியக்க அறுவைச் சிகிச்சை திட்டம்!

அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACC), கதிரியக்க சிகிச்சை சாதனங்களை வழங்கும் ஒரு உலகளாவிய நிறுவனமான அக்யூரே – ன் ஒத்துழைப்போடு, ரோபோட்டிக்  & சீரியோடாட்டிக் அறுவைசிகிச்சை செயல்திட்டத்திற்காக இந்திய துணைக்கண்டத்தில் முதல் 'ரோபோட்டிக் மற்றும் சீரியோடாட்டிக் சிகிச்சை கல்வி மையம்' தொடங்கப்படுவதை இன்று பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது.  சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் இயங்கி வரும் அப்போலோ கேன்சர் சென்டர் வளாகங்களில் இக்கல்வி மையங்கள் நிறுவப்படும். மருத்துவமனைகள், புற்றுநோய் சிகிச்சை மையங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை மருத்துவர்கள், இயற்பியலாளர்கள், கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு மேம்பட்ட கதிரியக்க அறுவைசிகிச்சை கல்வி சார்ந்த பயிற்சியினை இம்மையங்கள் வழங்கும். 

Apollo Cancer Centre

ரோபோட்டிக் மற்றும் ஸ்டீரியோடாட்டிக் கதிரியக்க அறுவைசிகிச்சை மீது சிறப்பு கவனம் செலுத்தும் இக்கல்வித்திட்டத்தில் விரிவான விவாதங்கள், கலந்துரையாடல்கள், செய்முறை விளக்கங்கள் மற்றும் நேரடி பயிற்சி ஆகியவை உள்ளடங்கும்.  உலகத்தரம் வாய்ந்த பயிற்சியானது, உள்நாட்டிலேயே கிடைப்பதை உறுதிசெய்வதால், இந்தியாவின் மருத்துவக் கல்வி சேர்வதற்கு இந்த முன்னெடுப்பு நடவடிக்கையானது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையாக கருதப்படுகிறது.  வலுவான மற்றும் நடைமுறை யதார்த்தம் சார்ந்த கற்றல் அனுபவம், பயிற்சி திட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஆழமான விவாதங்களிலும் மற்றும் செய்முறை பயிற்சிகளிலும் இதன் பங்கேற்பாளர்கள் ஈடுபடுவார்கள்.

புற்றுநோயியலுக்கான கதிரியக்க சிகிச்சை துறையின் முதுநிலை மருத்துவர் சங்கர் வங்கிபுரம் இது தொடர்பாக கூறியதாவது: “அப்போலோ கேன்சர் சென்டரின் சைபர்நைஃப் அகாடமியா தொடங்கப்பட்டிருப்பது, ரோபோட்டிக் மற்றும் சீரியோடாட்டிக் கதிரியக்க அறுவைசிகிச்சையில் மருத்துவப் பணியாளர்களின் திறன்களையும், அறிவையும் மேம்படுத்துவதற்கு ஒரு மிகச்சிறப்பான வாய்ப்பாகும்.  இந்தியாவில் சைபர்நைஃப் ரோபோட்டிக் அறுவைசிகிசிச்சை அமைப்பை முன்னோடித்துவமாக அறிமுகம் செய்து செயல்படுத்தி வருவதன் மூலம் நமது நாட்டில் புற்றுநோய் சிகிச்சை என்பது, மறுவரையறை செய்யப்பட்டிருக்கிறது; எண்ணற்ற நோயாளிகளின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வ மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  எனவே, இந்த பயிற்சி செயல்திட்டத்தின்போது மதிப்புமிக்க நிபுணத்துவ திறனையும், உள்நோக்குகளையும் பங்கேற்பாளர்களோடு பகிர்ந்துகொள்ளும் நிகழ்வை நாங்கள் ஆவலோடு எதிர்நோக்குகிறோம்; எமது நோயாளிகளுக்கு இன்னும் சிறப்பாக நாங்கள் சேவையாற்றவும் மற்றும் புற்றுநோய் சிகிச்சையில் புதிய உலகளாவிய தரநிலைகளை நிறுவவும் இது எங்களை ஏதுவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” 

Apollo Cancer Centre

புற்றுநோயியலுக்கான கதிரியக்க சிகிச்சை துறையின் முதுநிலை மருத்துவர் மகாதேவ் போத்தராஜு இது தொடர்பாக பேசுகையில், “இந்த மிக நவீன கல்வி மையத்தை நிறுவி தொடங்குவது, உலகத்தரத்தில் மிக உயர்ந்த புற்றுநோய் சிகிச்சை பராமரிப்பை வழங்குவதற்கான எமது குறிக்கோளோடும், செயல்திட்டத்தோடும் மிக நேர்த்தியாகப் பொருந்துகிறது.  எமது புற்றுநோயியல் மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்களின் நிபுணத்துவத்தையும் மற்றும் செயல்திறன்களையும் இந்த சைபர்நைஃப் பயிற்சி இன்னும் சிறப்பாக மேம்படுத்தும்; இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைக்கான நமது அணுகுமுறையிலேயே விரிவான மாற்றத்தை கொண்டு வரும்.” என்று குறிப்பிட்டார். 

அப்போலோ ஆஸ்பிட்டல் எண்டர்பிரைசஸ் லிமிடெட் – ன் குழும புற்றுநோயியல் இன்டர்நேஷனல் துறையின் பிரசிடென்ட் திரு. தினேஷ் மாதவன் பேசுகையில், “புற்றுநோய் சிகிச்சை காலத்தில் புதிதாக வந்திருக்கும் புரட்சிகர தொழில்நுட்பங்கள் மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட, பிரத்யேகமான மற்றும் பயனளிக்கும் சிகிச்சைக்கு வழிவகுத்திருக்கிறது.  அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அக்யூரே ஆகியவை இணைந்து தொடங்கியிருக்கும் ரோபோட்டிக் மற்றும் ஸ்டீரியேடேட்டிக் கதிரியக்க சிகிச்சை செயல்திட்டம், ஏஷியன் பிராந்தியத்தில் இது தொடர்பான பயிற்சி வசதிகளை பெரிய அளவில் முன்னேற்றும்.  சைபர்நைஃப் தொழில்நுட்பத்தில் சமீபத்திய முன்னேற்றங்களை அறிந்து பயன்படுத்துவதற்கு தேவைப்படும் இன்றியமையாத அறிவு மற்றும் திறன்களை புற்றுநோயியல் மருத்துவர்களும், இயற்பியலாளர்களும் மற்றும் சிகிச்சை வழங்கும் தொழில்நுட்ப பணியாளர்களும்  பெற்று பயனடைவதற்கு இது உதவும்.” என்று கூறினார். 

Apollo Cancer Centre

அக்யூரே நிறுவனத்தின் பிரசிடென்ட் மற்றும் தலைமை செயல் அலுவலர் Ms. சூஸன் வின்டர் கூறியதாவது: “சைபர்நைஃப்® S7™  சிஸ்டம், சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள அப்போலோ கேன்சர் சென்டர்களில் விரிவாக்கம் செய்யப்படுவதை அக்யூரே மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறது.  இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த மருத்துவமனைகளுடன் நாங்கள் மேற்கொள்ளும் உறுதியான ஒத்துழைப்பு நடவடிக்கைக்கு இது எடுத்துக்காட்டாக திகழ்கிறது.  இதன் நிகரற்ற துல்லியத்தினால் சிகிச்சை தரநிலைகளை சைபர்நைஃப் S7 சிஸ்டம் மறுவரையறை செய்கிறது; சிகிச்சையின் விளைவுகளை மிகச் சிறப்பானதாக ஆக்குவதற்கு மருத்துவர்களுக்கு திறனதிகாரத்தை வழங்குகிறது.  கூடுதலாக, புற்றுநோய் சிகிச்சையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்ற நடவடிக்கையாக வழக்கமாக 1 முதல் 5 அமர்வுகளில் வேகமான மற்றும் பயனளிக்கும் சிகிச்சைகளுக்காக அதிக உயர் அளவிலான கதிர்வீச்சு வழங்கப்படுவதை இது ஏதுவாக்குகிறது.” 

சைபர்நைஃப் சிஸ்டம் என்பது, ஊடுருவல் அல்லாத, ரோபோட்டிக் முறையிலான கதிர்வீச்சு சிகிச்சை சாதனமாகும்.  புற்றுக்கட்டியைச் சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல், உயர் துல்லியத்துடன் புற்றுக்கட்டிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  மிக சிக்கலான மற்றும் எட்டுவதற்கு கடினமான இடத்திலுள்ள புற்றுக்கட்டிகளுக்கு சிகிச்சையளிக்க இச்சாதனம் வகை செய்கிறது.  உயர் கூர்நோக்கத்துடன் கதிர்வீச்சு அலைக்கற்றைகளை வழங்குவதற்கு மேம்பட்ட இமேஜிங் மற்றும் கணினி மயமாக்கப்பட்ட ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பத்தை இது பயன்படுத்துகிறது.

Apollo Cancer Centre

உலகத்தரம் வாய்ந்த விரிவான பயிற்சியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டிருக்கும் இக்கல்வி செயல்திட்டம், இந்திய துணைக்கண்டத்தில் உள்ள நாடுகளைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்கள் சைபர்நைஃப் சிகிச்சை தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெறுவதற்கு இது பயனுள்ளதாக இருக்கும். 

இந்தியாவிற்கு சிறப்பு திறன் வாய்ந்த கல்வி முன்னெடுப்பு திட்டத்தை கொண்டு வந்திருப்பதன் வழியாக மருத்துவ புத்தாக்கத்தில் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் பிறருக்கு வழிகாட்டுவதில் தொடர்ந்து முன்னணி வகிக்கிறது.  உடல்நல பராமரிப்பு பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் நாடெங்கிலும் நோயாளிகளுக்கான சிகிச்சைப் பலன்களை முன்னேற்றம் காணச்செய்வது என்ற குறிக்கோளுடன் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் முனைப்புடன் செயலாற்றி வருகிறது.


Comments

Popular posts from this blog

Sundar Pichai: "அன்றிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது!"- கூகுளில் 20 வருடங்கள் கடந்த சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை, தமிழ்நாட்டில் சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இன்று கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றுபவர். சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகர் ஜவஹர் வித்யாலயாவிலும், மெட்ராஸ் ஐ.ஐ.டி-யின் வனவாணி பள்ளியிலும் படித்தார். பின், ஐ.ஐ.டி கரக்பூரில் இன்ஜினீயரிங் படித்தார். அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸும், வார்டன் ஸ்கூலில் எம்.பி.ஏ-வும் முடித்தவர், மெக்கன்சியில் புராடெக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் தனது காதலியும் மனைவியுமான அஞ்சலியின் மென்பொருள் நிறுவனமான Intuit-ல் வணிக இயக்க மேலாளராகத் தன் கரியரைத் தொடர்ந்தார். அதன்பின் Accenture நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 2004க்குப் பிறகுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஆரம்பமானது.சுந்தர் பிச்சை, அஞ்சலி 2004-ல் கூகுள் டூல் பார் (Tool bar) புராடெக்ட் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்தவர், தன்னுடைய திறமையால் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறினார். 2015-ல் கூகுளின் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். 2019-ல் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet ...

`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’

`Black Lives Matter' என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது.அமெரிக்கா - போராட்டம் இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் போலீஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி ஒஹாயோ மாகாணத்தில் மின்கம்பத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்குவந்த போலீஸ் அதிகாரிகளிடம், விபத்து ஏற்படுத்திய நபர் தப்பித்து பாருக்குள் (Bar) ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, பாருக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிராங்க் டைசன் எனும் 53 வயது ஆப்ரிக்க அமெரிக்க நபரை வலுக்கட்டாயமாக இழுத்து,...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...