Skip to main content

Biden Vs Trump: `ட்ரம்ப் குற்றவாளி’ ; `உங்கள் மகன் தான் குற்றவாளி’ - 90 நிமிடங்கள் அனல்பறந்த விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கும் நிலையில், CNN செய்தி நிறுவனம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-க்கும் இடையே நேரடி விவாதம் நடக்க ஏற்பாடு செய்திருந்தது. அதன் அடிப்படையில், பார்வையாளர்கள் இல்லாத அரங்கில், இரு தலைவர்கள் மட்டுமே சில அடிகள் தூரத்தில் நிறுத்தப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது. சுமார் 90 நிமிடங்கள் நடந்த இந்த விவாதத்தில் ஒருவர் பேசும்போது மற்றவருடைய மைக் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. வாய்ப்பு வரும்போதுதான் பேச முடியும் என்ற சூழல் உருவாக்கப்பட்டிருந்தது.டொனால்ட் ட்ரம்ப் - ஜோ பைடன்

மேலும், இந்த விவாதம் அமெரிக்கா முழுவதும் உள்ள அனைத்து தளத்திலும் ஒளிபரப்பப்பட்டது. இரு தலைவர்களும் பொருளாதார பிரச்னைகள், வெளியுறவுக் கொள்கை, சர்வதேச நெருக்கடிகள், நாட்டின் குடியேற்ற நெருக்கடி, அமெரிக்க ஜனநாயகத்தின் நிலை என மாறி மாறி குற்றம்சாட்டிக் கொண்டனர். உலக நாடுகளே கூர்ந்து நோக்கிய அந்த விவாதத்தின் முக்கிய அம்சங்கள்...

ஜோ பைடன்: ``2021-ல் அதிபராக பதவியேற்றபோது, ​​பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியில் இருந்தது. அந்த குழப்பத்திலிருந்து பொருளாதாரத்தைக் காப்பாற்றி, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. மருந்து விலைகள் குறைக்கப்பட்டது. நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து வந்தேன்.”டொனால்ட் ட்ரம்ப் - ஜோ பைடன்

ட்ரம்ப்: ``என் ஆட்சி காலத்தில் பொருளாதார நிலை சீராகதான் இருந்தது. தற்போது ஏற்பட்டிருக்கும் விலை உயர்வுக்கு யார் காரணம்... பணவீக்கம் நம் நாட்டைக் கொன்று கொண்டிருக்கிறது. பைடன் ஆட்சியில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது உண்மை தான், ஆனால் அது முறைகேடாகக் குடியேறியவர்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டது. அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை.”

ஜோ பைடன்: ``கருக்கலைப்பு அணுகலைத் தடுப்பதில் ட்ரம்பின் பங்குதான் அதிகம்”

ட்ரம்ப்: ``கருக்கலைப்பு குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டேன். அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கருக்கலைப்பு மருந்து விநியோகங்களை தடுக்க மாட்டேன். பைடன் ஆப்கானிஸ்தானிலிருந்து நமது ராணுவ வீரர்களை திரும்பப் பெற்றது நமது நாட்டின் வரலாற்றில் மிகவும் சங்கடமான நாள். உறுதியான தலைவர் இருந்திருந்தால் உக்ரைன் போர் தொடங்கியிருக்காது.”டொனால்ட் ட்ரம்ப்

பைடன்: ``ட்ரம்ப் ஒரு குற்றவாளி அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதலை தடுக்க அவர் எதுவும் செய்யவில்லை. தலைநகரைத் தாக்கியவர்களைக் கண்டிப்பீர்களா?”

ட்ரம்ப்: ``உங்கள் மகனே ஒரு குற்றவாளி. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அது அனைத்தும் எனக்கு எதிராக மோசடியான அமைப்பால் செய்யப்பட்டது. நான் யாருக்கும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. என் மீதான வழக்குகள் மேல்முறையீடு செய்யப்படும். என் நற்பெயரை சேதப்படுத்துவதற்காக இதைச் செய்கிறார்கள். ஆனால் மக்கள் உண்மையைப் பார்க்கிறார்கள்.”

ஆப்கானிஸ்தான் , உக்ரைன், காசா போர் என இரு தரப்பும் மாறி மாறி காட்டமான விமர்சனங்களை முன்வைத்தனர். அதேநேரம் இந்த விவாதத்தில் ட்ரம்ப் ஆதிக்கம் செலுத்தியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மொத்தமாக விமர்சனங்களுக்குப் பதில் கொடுக்கும் பகுதியில் டிரம்ப் சுமார் 23 நிமிடங்கள் பேசினார். அதேநேரம் பைடன் 18 நிமிடங்கள் மட்டுமே பேசினார். பைடன் பேசும் போது பல இடங்களில் திக்கித் திணறினார். பலமுறை இருமிக் கொண்டே இருந்தார். அவரால் நீண்ட நேரம் தொடர்ச்சியாகப் பேச முடியவில்லை.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88Hunter Biden: `25 ஆண்டுகள் வரை சிறை'- பைடன் மகனைக் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம்! - பின்னணி என்ன?


http://dlvr.it/T8tN9X

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...