Skip to main content

Heat: துண்டான தலை... சுட்டெரிக்கும் வெப்பத்தால் உருகிய ஆபிரகாம் லிங்கன் மெழுகுச் சிலை!

வழக்கத்திற்கு மாறான வெப்பம் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. இந்தப் பிரச்னையை கருத்தில் கொள்ளவில்லையெனில் ஆபத்துகள் அதிகமாகலாம் என்பது போன்று பல சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.

அந்தவகையில் வாஷிங்டனில் உள்ள கேரிசன் தொடக்கப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனின் மெழுகுச்சிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரித்த வெப்பத்தினால் உருகியுள்ளது. இந்தச் சிலை உள்நாட்டு போரின் விளைவுகளை குறிக்கும் விதமாக சாண்டி வில்லியம்ஸ் IV-ன் கலைநயத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. 

ஆபிரகாம் லிங்கன் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருப்பது போல் இருக்கும் ஆறடி உயரமுள்ள இந்தச் சிலையின் தலை, சுட்டெரித்த வெப்பத்தினால் உருகி, தொங்கத் தொடங்கியது. படிப்படியாக கால்கள் மற்றும் உடலும், நாற்காலியும் உருகியுள்ளன. 

தற்போது லிங்கனின் தலை தனியாக வந்துவிட்டதால் அதனை சரிசெய்யும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தலையில்லாமல் ஒரு கம்பி மட்டும் மெழுகுச்சிலையில் இருக்கிறது.

இது போன்று சிலை உருகுவது முதல்முறையல்ல என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே 2023-ல் செய்யப்பட்ட மெழுகுச் சிலையில் நூறு திரிகள் (wicks) இருந்தன. அது மக்கள் ஏற்றுவதற்காக வைக்கப்படவில்லை.

ஆனால், அதனை கண்ட மக்கள் அனைத்து திரிகளையும் மொத்தமாகப் பற்ற வைத்துள்ளனர். இதனால் சிலை முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. அதனால் இரண்டாவது முறையாக 2024 பிப்ரவரியில் பத்து திரிகளை மட்டும் வைத்து சிலை உருவாக்கப்பட்டது. தற்போது வெப்பத்தினால் உருகிய மெழுகுச் சிலையின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.திரி ஏற்றி சேதமடைந்த மெழுகு சிலைHow to: உடல் சூட்டை குறைப்பது எப்படி? I How To Reduce Body Heat?

இது குறித்து சாண்டி வில்லியம்ஸ் கூறுகையில், ``ஒருவேளை நாம் வாழும் இடத்தில் தட்பவெப்பநிலை மோசமாகிவிட்டால், மெழுகுச் சிலைகள் உருகும். அப்போது இந்த வேலை சுற்றுச்சூழலின் கலைப் படைப்பாக இருக்கும் என்று ஒரு முறை கிண்டல் செய்திருந்தேன். அது இந்தக் கோடையில் நடக்கும் என்று எனக்குத் தெரியாது’’ என்று கூறியுள்ளார். 


http://dlvr.it/T8nTpL

Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...