Skip to main content

Doctor Vikatan: தினமும் சாக்லேட் சாப்பிடலாமா... டார்க் சாக்லேட் ஆரோக்கியமானதா?

Doctor Vikatan:என் வயது 30. எனக்கு சிறு வயதிலிருந்தே தினமும் சாக்லேட் சாப்பிடும் வழக்கம் உண்டு. தவிர, எப்போதெல்லாம் ஸ்ட்ரெஸ்ஸாக உணர்கிறேனோ, அப்போதும் சாக்லேட் சாப்பிடுவேன். இப்படி தினமும் சாக்லேட் சாப்பிடுவது ஆரோக்கியத்தை பாதிக்குமா...? டார்க் சாக்லேட் சாப்பிடுவது ஆரோக்கியமானது என்கிறார்களே... அது உண்மையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் 

மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்

''என்னால சாக்லேட் சாப்பிடாம இருக்கவே முடியாது'' என சொல்லும் நபர்கள் நம்மில் ஏராளமான பேர் இருக்கிறார்கள். இப்படிச் சொல்பவர்கள் சாக்லேட் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். 

சாக்லேட் தயாரிப்பில் கோகோ பீன் (Cocoa bean) பிரதான இடம் வகிக்கிறது. கோகோ பீன்ஸில்  கோகோ பட்டர் மற்றும் கோகோ சாலிட்ஸ் ஆகிய இரண்டும் இருக்கும். இவற்றில் கோகோ பட்டரிலிருந்து மட்டும் தயாரிப்பது வொயிட் சாக்லேட். இதில் கலோரிகளும் அதிகம்... சர்க்கரை சேர்ப்பதால் ஆரோக்கியத்துக்கும் நல்லதல்ல.  வழக்கமான சாக்லேட்டுகளில் கோகோ பட்டர், கோகோ சாலிட்ஸ் மற்றும் சர்க்கரை எல்லாமே கலக்கப்படும். மூன்றாவது வகை, டார்க் சாக்லேட். இது கசப்புச் சுவையில் இருக்கும் என்பதால் பெரும்பாலான மக்களுக்கும் பிடிப்பதில்லை. 

இன்னும் சிலர் சாதாரண சாக்லேட் ஆரோக்கியமற்றது என்றும் டார்க் சாக்லேட் நல்லது என்றும் அதை அதிகம் எடுத்துக்கொள்வார்கள். 75 முதல் 80 சதவிகிதம் கோகோ சாலிட்ஸ் இருந்தால் மட்டுமே அது டார்க் சாக்லேட் என்று அர்த்தம். அதில்தான் ஃப்ளேவனாயிட்ஸ் அல்லது ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமிருக்கும். அதனால் அது ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.  

சாக்லேட்

ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கும்போது சாக்லேட் சாப்பிடும் வழக்கம் பலரிடம் இருப்பதைப் பார்க்கலாம். சாக்லேட் சாப்பிடுவதால் உடனடியாக எனர்ஜி அதிகரிக்கும். ஆக்டிவ்வாக இருப்போம். மனநிலை சட்டென மாறும். டிப்ரெஷனில் இருப்போருக்கு இது உதவியாக இருக்கும். டார்க் சாக்லேட் சாப்பிட்டால் இதயத்துக்கு நல்லதா என்ற கேள்வி பல காலமாக இருக்கிறது. 2017-ல் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. பாதாம் மற்றும் டார்க் சாக்லேட் இரண்டையும் சாப்பிட்டவர்களுக்கு எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பு குறைவதாகத் தெரிந்தது. அதில் பாதாமை நீக்கிவிட்டுச் செய்த ஆய்வில், ஆரோக்கிய பலன்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் டார்க் சாக்லேட் சாப்பிடுவது ஆரோக்கியமானதா என்பது குறித்து இன்னோர் ஆய்வு நடந்துகொண்டிருக்கிறது. முடிவுகள் வரும்வரை காத்திருப்போம்.

அளவாக சாக்லேட் சாப்பிடுவதில் தவறில்லை. அதையும் டார்க் சாக்லேட்டாக பார்த்துச் சாப்பிடுங்கள். சாக்லேட் சாப்பிடும்போது வாய் சுகாதாரம் பேணுவதையும் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். பல் சொத்தை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...