Skip to main content

Malaria: ``பருவம் தவறிய மழையால் மலேரியா பரவலாம்... தடுக்க இதையெல்லாம் பண்ணுங்க!''

பருவமழை காலங்களில் கொசு உற்பத்தி அதிகரித்து டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவுவது இயல்பு. பருவமழை பொழியும் மாதங்களாக செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களைக் குறிப்பிடுவோம். அந்தக் காலகட்டங்களில் சுகாதாரத்துறையும் விழித்துக்கொண்டு பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பது, கொசு உற்பத்தியைத் தடுப்பது என தனது பணிகளைச் செய்யத் தொடங்கும்.

பொதுநல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா

ஆனால், தற்போது காலம் தவறிப் பெய்யும் மழை அதிகமாகிவிட்டது. அதனால் இந்தக் காலத்திலும் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். நாடு முழுவதும் வெப்ப அலை வீசிய போதிலும் உத்தரப்பிரதேசத்தின் சோன்பந்த்ரா மாவட்டத்தின் கிராம மக்கள் பலரும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தமிழ்நாட்டிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறார் பொது நல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா.

"மலேரியா நோய் என்பது அனோஃபிலஸ் எனும் கொசு இனம் கடிப்பதால் ஏற்படக்கூடிய நோய்.

ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

  • கொசு கடிக்காமல் இருக்க கொசு வலை பயன்படுத்தலாம்.

  • குழந்தைகளுக்கு கையுறை, காலுறை என உடல் முழுவதும் மூடும் உடைகளை அணிவிக்க வேண்டும்.

  • வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமலும், கொசு உற்பத்தி ஆகாமலும் தவிர்க்க வேண்டும்.

  • கொசு விரட்டி, கொசு எதிர்க்கும் களிம்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

  • மலேரியா பரவல் அதிகமாக இருக்கும் இடங்களுக்குச் செல்லும்போது ப்ளாஸ்மோடியம் கிருமிக் கொல்லிகள் மாத்திரைகளை உட்கொள்ளலாம். ஆனால், இதை மருத்துவர்களது பரிந்துரையின் பேரில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Malaria: அறிகுறிகள் என்னென்ன?

அறிகுறிகள் என்னென்ன?

  • குளிர் காய்ச்சல்,

  • தலைவலி,

  • உடல்வலி,

  • அதிகமான வியர்வை

சில நேரங்களில் இந்த அறிகுறிகள் ஏற்படும்போது, மக்கள் சாதாரண காய்ச்சல் என்று எடுத்துக்கொண்டு கவனிக்காமல் விட்டுவிடுவர். இது முற்றிலும் தவறு. என்னவாக இருந்தாலும் மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.

முக்கியமாக, ஓரிரு நாள்கள் காய்ச்சல் இருந்தால் உடனே ரத்தப் பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும்.

ஒருவேளை பாதிக்கப்பட்டால்...

மலேரியா உறுதி செய்யப்பட்டால் அதற்கான ப்ளாஸ்மோடியம் கொல்லி சிறப்பு மருந்துகளை எடுத்துக் கொண்டாலே போதுமானது. மலேரியா நோய்க்கான சிகிச்சை மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவே கிடைக்கின்றன.

நாம் கண்டு கொள்ளாமல் இருந்தால் மூளையை பாதிக்கக் கூடிய செரிப்ரெல் மலேரியா வகையாகவும் மாற்றமடையும். இது முக்கிய‌ உள்ளுறுப்புகளை பாதித்து உயிரைப் பறிக்கும் ஆபத்தையும் ஏற்படுத்தலாம்.

சரியான நேரத்தில் சரியான சிகிச்சையை எடுத்துக் கொள்வதன்‌‌ மூலம் உயிரிழப்பு ஏற்படாமல் காக்க முடியும்‌. மேலும், மலேரியாவுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படும் தடுப்பூசியைக் கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என்பது குறிப்பிடதக்கது" என்று விளக்கினார்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...