Skip to main content

Posts

Showing posts from February, 2023

காதலர்களுக்கு குட் நியூஸ்; ரியல் முத்தத்தை உணர்த்தும் Kissing Device - சீனாவில் கண்டுபிடிப்பு!

சீனாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று தொலைதூர காதலர்களுக்கான `முத்த சாதனம்’ (kissing device) ஒன்றை உருவாக்கியுள்ளது. இது மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும், மறுபுறம் சலசலப்பையும் உண்டாக்கி  இருக்கிறது. `நீ கொடுக்கும் முத்தங்கள் அனைத்தையும், போனே வாங்கிக் கொள்கிறது. அந்த முத்தத்தை என்னால் முழுமையாக உணர முடியவில்லை’ எனத் தொலைதூர காதலர்கள் வருத்தம் கொள்வதுண்டு. இவர்களுக்கு உதவும் வகையில், சீன பல்கலைக்கழகம் `Kissing Device’ ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்தச் சாதனம் சிலிக்கான் உதடுகள், பிரஷர் சென்சார் மற்றும் ஆக்சுவேட்டர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.  தொலைதூரக் காதலர்கள், இதற்கான செயலியை தங்களது மொபைலில் முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். செல்போனில் இந்தச் சாதனத்தைப் பொருத்திய பின், பார்ட்னரை ஆப்பில் இணைக்க வேண்டும்.  அதன்பின் சிலிக்கான் உதடுகளில் முத்தமிட்டால், முத்தமிடுபவர் களின் அழுத்தம், வெப்பம் என உண்மையான முத்த உணர்வை, மறுபுறத்தில் இருப்பவரால் உணர முடியும். இதுமட்டுமல்லாமல் இந்தச் சாதனத்தை உபயோகிப்பவர் எழுப்பும் ஒலியையும் மற்றவருக்கு அனுப்ப முடியும் எனக் கூறுகின்றனர்.இசைஞானி என் ...

சைலன்ட்டான சென்னை சென்ட்ரல் - குரல் அறிவிப்புகள் இல்லாததால் மாற்றுத்திறனாளிகளுக்குச் சிக்கலா?

சென்னையின் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், “பயணிகளின் கனிவான கவனத்திற்கு” என்று தொடங்கி ரயில் வண்டியின் விவரங்களைச் சொல்லும் அறிவிப்பு குரல்கள் இனி ஒலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்புகள் மட்டுமின்றி, விளம்பர ஒலிபரப்புகளையும் நிறுத்துவதாகத் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. பிப்ரவரி 26, ஞாயிற்றுக்கிழமை முதல் இத்திட்டம் சோதனை முறையில் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒலி அறிவிப்புகளுக்குப் பதிலாக, வழிகாட்டு உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பயணிகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும், விமான நிலையங்களில் இருப்பது போல, பெரிய திரையில் அறிவிப்புகளைக் காட்சி வாயிலாக ஒளிபரப்பவும் தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. Why, why, why, why why @DrmChennai @Ananth_IRAS ? Why make life more difficult for disabled - What's a blind passenger to do? Have you implemented the suggested online display board a la Madras High Court in the interim? Was PWD user committee informed? https://t.co/FMkZf...

``சித்த மருத்துவத்தை தமிழ் ஆயுர்வேதம் என்று கூறும்போது வேதனையாக உள்ளது!" - மருத்துவர் கு.சிவராமன்

பல நூற்றாண்டுகளைக் கடந்து சித்த மருத்துவம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்குக் காரணம் அது தமிழர்களின் வாழ்வியலோடு கலந்திருப்பதுதான். சித்த மருத்துவத்தின் பயனை கொரோனா காலத்தில் மக்கள் உணர்ந்தார்கள். உலக அளவில் கபசுரக்குடிநீரின் அருமை தெரியவந்தது. மருத்துவர் கு.சிவராமன் சித்த மருத்துவத்தின் நன்மைகளை இன்னும் உலகம் முழுவதும் பரப்புவதற்கு அதன் தேவைகளையும், தேடல்களையும் பற்றி சித்த மருத்துவர்கள் தெளிவான புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு சித்த மருத்துவர்களை ஒரே சமூகமாக கொண்டுவர மதுரை 'மடீட்சியா' (Madurai District Tiny and Small Scale Industries Association) தளம் அமைத்துக் கொடுதது. சமீபத்தில் மதுரையில் மடீட்சியா நடத்திய 'தற்கால சித்த மருத்துவ ஆய்வுப்பாதை' எனும் நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. `மடீட்சியா’ தலைவர் எம்.எஸ்.சம்பத் தொடக்க உரையாற்றினார். மருத்துவர் கு.சிவராமன் பேசும்போது, ``கொரோனா காலத்தில் சித்த மருத்துவர்களின் செயல்பாடு சிறப்பாக அமைந்தது. கபசுரக்குடிநீரின் முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறி அதை பயன்படுத்த வலியுறுத்தியதால் பலரு...

``சித்த மருத்துவத்தை தமிழ் ஆயுர்வேதம் என்று கூறும்போது வேதனையாக உள்ளது!" - மருத்துவர் கு.சிவராமன்

பல நூற்றாண்டுகளைக் கடந்து சித்த மருத்துவம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்குக் காரணம் அது தமிழர்களின் வாழ்வியலோடு கலந்திருப்பதுதான். சித்த மருத்துவத்தின் பயனை கொரோனா காலத்தில் மக்கள் உணர்ந்தார்கள். உலக அளவில் கபசுரக்குடிநீரின் அருமை தெரியவந்தது. மருத்துவர் கு.சிவராமன் சித்த மருத்துவத்தின் நன்மைகளை இன்னும் உலகம் முழுவதும் பரப்புவதற்கு அதன் தேவைகளையும், தேடல்களையும் பற்றி சித்த மருத்துவர்கள் தெளிவான புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு சித்த மருத்துவர்களை ஒரே சமூகமாக கொண்டுவர மதுரை 'மடீட்சியா' (Madurai District Tiny and Small Scale Industries Association) தளம் அமைத்துக் கொடுதது. சமீபத்தில் மதுரையில் மடீட்சியா நடத்திய 'தற்கால சித்த மருத்துவ ஆய்வுப்பாதை' எனும் நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. `மடீட்சியா’ தலைவர் எம்.எஸ்.சம்பத் தொடக்க உரையாற்றினார். மருத்துவர் கு.சிவராமன் பேசும்போது, ``கொரோனா காலத்தில் சித்த மருத்துவர்களின் செயல்பாடு சிறப்பாக அமைந்தது. கபசுரக்குடிநீரின் முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறி அதை பயன்படுத்த வலியுறுத்தியதால் பலரு...

ஈரோடு கிழக்கு: முதல் வாக்காளர்கள்(?) ; இரவு வரை நீடித்த வாக்குப்பதிவு - முழு தொகுதி ரவுண்ட்அப்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தொகுதியில் மொத்தமுள்ள 238 வாக்குச்சாவடிகளிலும் காலையில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். - ஈரோடு சம்பத் நகரில் உள்ள அம்மன் மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, தனது மனைவி பிரசிதாவுடன் காலை 7.15 மணிக்கே வந்து வரிசையில் நின்று வாக்கு செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``வாக்குப்பதிவு அமைதியான முறையில் தொடங்கியுள்ளது, 5 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சிறிய அளவில் பிரச்னை ஏற்பட்டதால், உடனடியாக வேறு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தொய்வின்றி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். - மொத்தம் 33 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டதால் அந்த வாக்குச்சாவடிகளுக்கு முன் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். பல இடங்களில் போலீஸார் அதிக கெடுபிடிகளை காட்டியதாக வாக்காளர்கள் சிலர் வேதனை தெரிவித்தார்கள். கலைம...

Doctor Vikatan: காலை சிற்றுண்டிக்கு ஏற்றவையா திரவ உணவுகள்?

Doctor Vikatan: தினமும் காலை உணவுக்கு சத்துமாவுக் கஞ்சியோ, கோதுமை ரவைக் கஞ்சியோ குடிக்கலாமா? தின உணவுதான் சாப்பிட வேண்டும் என ஏதேனும் விதி உள்ளதா? -asw, விகடன் இணையத்திலிருந்து... பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஸ்ரீமதி வெங்கட்ராமன் இதற்கு பதில் தெரிந்துகொள்ள முதலில் நீங்கள் உடலைப் புரிந்து கொள்ள வேண்டும். சிலர் காலையில் திட உணவு சாப்பிட்டால், ரொம்பவும் ஹெவியாக உணர்வார்கள். பல மணி நேரத்துக்கு மந்தமாக உணர்வார்கள். வேறு சிலரோ காலையில் அப்படிச் சாப்பிட்டால் நாள் முழுவதும் எனர்ஜியோடு இருப்பதாக உணர்வார்கள். சிலர் இட்லி, தோசை. சப்பாத்தி என வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டுப் போவார்கள். உங்களுக்கு எது ஏற்றுக் கொள்ளும் என்பதை நீங்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும். எனவே திட உணவுதான் சாப்பிட வேண்டும் என அவசியமில்லை. அந்த வகையில் உங்களுக்கு கஞ்சி குடிப்பது ஏற்றுக்கொள்வதாக நினைத்தால் தாராளமாகக் குடிக்கலாம். அது ஹெவியாகவும் தோன்றாது. எளிதில் செரிமானமாவிவிடும். அது பல மணி நேரத்துக்கு உங்களுக்கான ஆற்றலையும் தரும். அடுத...

சிவகாசி: அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாக பெண் திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசனை!

சிவகாசி மாநகராட்சியில் கடந்த 2022 நவம்பர் 29-ந் தேதி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிவகாசி மாநகராட்சி 5-வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் இந்திராதேவி, ``மாநகராட்சி வருவாய்பிரிவு அதிகாரிகள் சொத்துவரி தீர்வை மாற்றத்திற்கு லஞ்சம்கேட்டு எனது வார்டை சேர்ந்த பொதுமக்கள் அளித்த முறையீட்டு மனுவை பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளனர். மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக பொதுமக்களிடம், அதிகாரிகள் கேட்ட லஞ்சப்பணத்தை மொத்தமாக நானே தந்துவிடுகிறேன்” எனக்கூறி தான் வைத்திருந்த பையிலிருந்து ரூ.1 லட்சத்து 10ஆயிரத்தை எடுத்து அதிகாரிகளை நோக்கி நீட்டினார். இந்திராதேவி இந்தச்சம்பவம் குறித்து 43-வது வார்டை சேர்ந்த காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் ரவிசங்கர், நகராட்சிகள் நிர்வாக இயக்குனர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர், தலைமை செயலர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உள்ளிட்ட 7 அரசு உயர் அமைப்புகளுக்கு புகார் மனு அளித்துள்ளார். அந்தப்புகாரில், " மாநகராட்சி கூட்டத்தில் 5வது வார்டு கவுன்சிலர் இந்திராதேவி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது, பதவி பிரமா...

Doctor Vikatan: காலை சிற்றுண்டிக்கு ஏற்றவையா திரவ உணவுகள்?

Doctor Vikatan: தினமும் காலை உணவுக்கு சத்துமாவுக் கஞ்சியோ, கோதுமை ரவைக் கஞ்சியோ குடிக்கலாமா? தின உணவுதான் சாப்பிட வேண்டும் என ஏதேனும் விதி உள்ளதா? -asw, விகடன் இணையத்திலிருந்து... பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஸ்ரீமதி வெங்கட்ராமன் இதற்கு பதில் தெரிந்துகொள்ள முதலில் நீங்கள் உடலைப் புரிந்து கொள்ள வேண்டும். சிலர் காலையில் திட உணவு சாப்பிட்டால், ரொம்பவும் ஹெவியாக உணர்வார்கள். பல மணி நேரத்துக்கு மந்தமாக உணர்வார்கள். வேறு சிலரோ காலையில் அப்படிச் சாப்பிட்டால் நாள் முழுவதும் எனர்ஜியோடு இருப்பதாக உணர்வார்கள். சிலர் இட்லி, தோசை. சப்பாத்தி என வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டுப் போவார்கள். உங்களுக்கு எது ஏற்றுக் கொள்ளும் என்பதை நீங்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும். எனவே திட உணவுதான் சாப்பிட வேண்டும் என அவசியமில்லை. அந்த வகையில் உங்களுக்கு கஞ்சி குடிப்பது ஏற்றுக்கொள்வதாக நினைத்தால் தாராளமாகக் குடிக்கலாம். அது ஹெவியாகவும் தோன்றாது. எளிதில் செரிமானமாவிவிடும். அது பல மணி நேரத்துக்கு உங்களுக்கான ஆற்றலையும் தரும். அடுத...

அமெரிக்காவில் குடியேற ஆசை; குடும்பத்துடன் சென்று, `ட்ரம்ப்' சுவரிலிருந்து விழுந்து பலியான நபர்!

குஜராத் மாநிலம், காந்தி நகர் மாவட்டம் கலோஸ் பகுதியில் வசித்துவந்தவர் பிரிஜி குமார் யாதவ். இவருக்கு பூஜா என்ற மனைவியும், தன்மென் என்ற மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில், பிரிஜி குமார் யாதவ் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேற நினைத்திருக்கிறார். இதற்காக கடந்த ஆண்டு அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேற ஏற்பாடு செய்யும், தரகர் குழுவையும் அணுகியிருக்கிறார். அந்தத் தரகர் குழு வழங்கிய ஆலோசனைப்படி, கடந்த ஆண்டு நவம்பர் 11-ம் தேதி பிரிஜி குமார் யாதவ் தன்னுடைய மனைவி பூஜா, மகன் தன்மென்னுடன் மும்பை வழியாக துருக்கிக்குச் சென்று, துருக்கியிலிருந்து பின்னர் மெக்ஸிகோ சென்றிருக்கிறார். மெக்ஸிகோ அமெரிக்கா எல்லையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆட்சியின்போது கட்டப்பட்ட `ட்ரம்ப் வால்' எனும் சுவர் அமைக்கப்பட்டிருந்தது. மெக்ஸிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் செல்ல முயன்ற பிரிஜி குமார் யாதவ் பூஜா தம்பதி, தங்கள் மகனுடன் அந்தச் சுவரின்மீது ஏறியிருக்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுவரின் உச்சியிலிருந்து மூன்று பேரும் கீழே விழுந்திருக்கின்றனர். அதில் பிரிஜி குமார் யாதவ், சம்பவ இ...

திருவாரூர்: நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் பாட்டில் வீசிய திமுக-வினர்?! - போலீஸ் விசாரணை

திருவாரூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகள், தி.மு.க ஆட்சி குறித்து விமர்சனம் செய்து பேசியதால் தி.மு.க.வினர் மேடையை நோக்கி காலி மதுப்பாட்டில்களை வீசியதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதனால் இருக்கட்சியினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தி.மு.கவினர் போராட்டம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடலில் பேனா சிலை வைப்பது குறித்தும், தி.மு.க ஆட்சியையும் விமர்சனம் செய்தும் பேசி வருகிறார். இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.கவினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தற்போது திருவாரூரிலும் இருக்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து தி.மு.கவை சேர்ந்த இரண்டு பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் கட்சியின் மகளிர் பாசறை ச...

``20 நாள்கள்தான் டைம்; அதற்குள் நிறுத்தவில்லை என்றால்..!" - தமிழக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில், கனிம வளக் கொள்ளையைக் கண்டித்து, பா.ஜ.க சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``சூரியன் அஸ்தமனம் ஆகிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் துருக்கி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம், கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இங்கு நிலநடுக்கம் வராது என்று இல்லை... எங்கு வேண்டுமானாலும் வரலாம். கடந்த 70 ஆண்டுகளில், இந்தப் பகுதிகளிலுள்ள குவாரிகளில், 75 அடி வரை தோண்டப்பட்டிருக்கிறது. தி.மு.க ஆட்சி அமைந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், இந்தப் பகுதியில் இருக்கும் குவாரிகளில், 220 அடிவரை தோண்டப்பட்டு கனிம வளங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதன் விளைவு தற்போது தெரியாது, 20 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் தெரியும். தமிழக அரசின் ஆண்டு வருமானம் 1,80,000 கோடி ரூபாய். ஆனால் கனிம வளத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் 900 கோடிதான் என்று கூறியது தமிழக அரசு. சில தனியார் நிறுவனங்கள், அரசால் வழங்கப்பட வேண்டிய ட்ரிப் ஷீட்டை தானாகவே அச்சடித்துக் கொள்கின்றன. இந்தப் பகுதியிலிருந்து மட்டும், 12,000 யூனிட் ...

கார்ட்டூன்

கார்ட்டூன்

`பிரச்சனன்னா அம்மாக்கிட்ட சொல்லு; டெல்லியே ஆனாலும் பார்த்துடலாம்' நெகிழ வைத்த போட்டோவும் பின்னணியும்

பல ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச அளவிலான கால்பந்துத் தொடர் ஒன்று கடந்த வாரம் நேரு மைதானத்தில் நடந்தது. இந்திய பெண்கள் அணியும் நேபாள பெண்கள் அணியும் மோதிய இந்த நட்பு ரீதியிலான தொடரின் இரண்டு போட்டிகளுமே சமனில் முடிந்திருந்தது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், நேபாளுக்கு எதிராக ஆடிய இந்திய அணியில் மொத்தம் நான்கு தமிழ் வீராங்கனைகளும் ஆடியிருந்தனர். இந்திய அணியின் கேப்டனே இந்துமதி என்கிற தமிழ்ப் பெண்தான். முதல் போட்டியில் இந்துமதியே ஒரு கோலையும் அடித்திருந்தார். இரண்டு போட்டிகளுமே சுவாரஸ்யமாக நடந்து முடிந்திருந்தது. இந்தத் தொடரில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவமும் நடந்திருந்தது. இந்திய அணியில் ஆடிய இன்னொரு தமிழ்ப் பெண்ணான சந்தியா தனது தாயை இரண்டாவது போட்டியை பார்வையிட அழைத்து வந்திருந்தார். போட்டி முடிந்த பிறகு சந்தியா தனது தாயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலானது. அந்தப் புகைப்படம் குறித்து 'எனக்கான மிகப்பெரிய ஆதரவே என்னுடைய அம்மாதான். ஒற்றை ஆளாக பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் எங்களுக்கான சிறப்பான வாழ்வை உறுதி செய்தார். முதல் முறையாக என்னுடைய ஆட்டத்தைப் பார்க...

``சிவில் நீதிமன்றத்தின் உத்தரவுதான் முக்கியமானது; அதிமுக பாதுகாப்பான கரங்களில் இல்லை!" - சசிகலா

உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை உறுதி செய்தது. அதனால், அதிமுக முழுவதுமாக எடப்பாடி பழனிசாமி வசம் சென்றிருக்கிறது. இந்த நிலையில், சசிகலா `இந்தியா டுடே' செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்து, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். அதில் பேசிய சசிகலா, ``மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை கொண்டாடும் இந்த வேளையில், அவர் உயிரோடு இல்லை என தோன்றவில்லை. எப்போதும் என்னுடன் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும், தமிழக மக்களுடன், அ.தி.மு.க தொண்டர்களுடன் இருக்கிறார். எப்போதும் என்னுடன் இருப்பது போல்தான் உணர்கிறேன். ஜெயலலிதா, சசிகலா உச்ச நீதிமன்ற உத்தரவை பொறுத்தவரையில், அது இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவருக்கும் இடையிலான பூசல்கள் பற்றியது. சிவில் நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்திருக்கும் மனுவுக்கும் அவர்களின் வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னைப் பொறுத்தவரையில் சிவில் நீதிமன்றத்தின் உத்தரவுதான் முக்கியமானது. அதற்கான நடவடிக்கைகளை விரிவுபடுத்த முயற்சி செய்வோம். செப்டம்பர் 2022-ம் ஆண்டு சென்னை உயர் நீ...

பைடன் விசிட்... புதின் அதிரடி - ஓராண்டைக் கடந்தும் ஓயாத போர் - பின்னணி என்ன?!

ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு, பிப்ரவரி 24 அன்று தொடங்கிய இந்தப் போர் விரைவில் முடிவடைய வேண்டும் என்பதுதான் உலக மக்களின் வேண்டுகோளாக இருந்துவருகிறது. ஆனால், போர் முடிவடைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்பதே உண்மை. என்ன நடக்கிறது உக்ரைன் - ரஷ்யா போரில்? உக்ரைன் சென்ற பைடன்! கடந்த பிப்ரவரி 20-ம் தேதி அன்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால், திடீரென உக்ரைனுக்குச் சென்று அதிர்ச்சி கொடுத்தார் பைடன். போலந்து தலைநகர் வார்சாவுக்குச் சென்ற அவர், அங்கிருந்து ரயில் மூலம் 10 மணி நேரம் பயணம் மேற்கொண்டு உக்ரைன் தலைநகர் கீவுக்குச் சென்றார். ஜோ பைடன் - ஜெலன்ஸ்கி``சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டிருக்கிறேன்" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ``ஒரு மாதமாகவே இது தொடர்பான திட்டமிடல் இருந்தாலும், மூன்று நாள்களுக்கு முன்புதான் பைடனின் உக்ரைன் பயணம் உறுதிசெய்யப்பட்டது. இந்தத் தகவல் வெளியே கசிந்துவிடாமல் ரகசியமாக வைத்திருந்தோம். பைடனுடன் சில பாதுகாப்பு அதிகாரிகள், மருத்துவர்கள் மட்டுமே உக்ரைனுக...

'சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவி' - சத்திய மூர்த்தி பவனில் தொடங்கியதா வார்?

கடந்த 4-ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா மரணமடைந்தார். இதையடுத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளைய தினம் பிப்.27 வாக்குப்பதிவும், மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகின்றன. தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அதன் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிறுத்தப்பட்டிருக்கிறார். அங்கு காங்கிரஸுக்கும், அ.தி.மு.க-வுக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிடிப்பதற்கான வார் தொடங்கியிருக்கிறது. எனவே என்னதான் நடக்கிறது என சத்திய மூர்த்தி பவன் வட்டாரத்தில் விசாரித்தோம். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இது குறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், ``சட்டமன்றத்தில் தி.மு.க, காங்கிரஸைத் தாண்டி செல்வப்பெருந்தகை செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ஆளுநர் விவகாரத்தில் தனித் தீர்மானம் கொண்டுவந்தது பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. குறிப்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்குப் பிடிக்கவில்லை. இப்படியான சூழ்நிலையில்தான் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனா...

Doctor Vikatan: பக்கவாதம் ஏற்படக் காரணமாகுமா ஸ்ட்ரெஸ்?

Doctor Vikatan: என்னுடைய நண்பர் எப்போதும் வேலை, வேலை என ஓடிக்கொண்டே இருப்பார். 24 மணி நேரமும் ஸ்ட்ரெஸ்ஸில் இருப்பதாகச் சொல்வார். திடீரென அவருக்கு பக்கவாதம் பாதித்து, பெரும் போராட்டத்துக்குப் பிறகு அதிலிருந்து மீண்டார். அவருக்கு ஸ்ட்ரோக் வந்ததற்கு ஸ்ட்ரெஸ்தான் காரணமா அல்லது வேறு காரணங்கள் இருக்குமா? உண்மையிலேயே ஸ்ட்ரெஸ்ஸுக்கும் ஸ்ட்ரோக்குக்கும் தொடர்புண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம். நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் ஸ்ட்ரெஸ் என்பது எப்படிப் பல பிரச்னைகளுக்கும் காரணமாகிறதோ, பக்கவாத பாதிப்பிலும் அது முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிகளவு ஸ்ட்ரெஸ் உள்ளவர்களுக்கு பக்கவாதம் பாதிக்கும் அபாயம் அதிகம்தான். ஸ்ட்ரெஸ் இருக்கும்போது நாம் எப்படி நடந்து கொள்வோம் என்பதை வைத்தே இதைப் புரிந்துகொள்ள முடியும். அதாவது அதீத ஸ்ட்ரெஸ்ஸில் உள்ள நபரின் மூளை அமைதியாக வேலை செய்யாது. சரியாகத் தூங்க மாட்டார். அதனால் அவரது மூளைக்கு ஓய்வு கிடைத்திருக்காது. அவரது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் கார்ட்டிசால் ஹார்மோன் அளவு உடலில் அதிகரிக்கும்....

Doctor Vikatan: பக்கவாதம் ஏற்படக் காரணமாகுமா ஸ்ட்ரெஸ்?

Doctor Vikatan: என்னுடைய நண்பர் எப்போதும் வேலை, வேலை என ஓடிக்கொண்டே இருப்பார். 24 மணி நேரமும் ஸ்ட்ரெஸ்ஸில் இருப்பதாகச் சொல்வார். திடீரென அவருக்கு பக்கவாதம் பாதித்து, பெரும் போராட்டத்துக்குப் பிறகு அதிலிருந்து மீண்டார். அவருக்கு ஸ்ட்ரோக் வந்ததற்கு ஸ்ட்ரெஸ்தான் காரணமா அல்லது வேறு காரணங்கள் இருக்குமா? உண்மையிலேயே ஸ்ட்ரெஸ்ஸுக்கும் ஸ்ட்ரோக்குக்கும் தொடர்புண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம். நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் ஸ்ட்ரெஸ் என்பது எப்படிப் பல பிரச்னைகளுக்கும் காரணமாகிறதோ, பக்கவாத பாதிப்பிலும் அது முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிகளவு ஸ்ட்ரெஸ் உள்ளவர்களுக்கு பக்கவாதம் பாதிக்கும் அபாயம் அதிகம்தான். ஸ்ட்ரெஸ் இருக்கும்போது நாம் எப்படி நடந்து கொள்வோம் என்பதை வைத்தே இதைப் புரிந்துகொள்ள முடியும். அதாவது அதீத ஸ்ட்ரெஸ்ஸில் உள்ள நபரின் மூளை அமைதியாக வேலை செய்யாது. சரியாகத் தூங்க மாட்டார். அதனால் அவரது மூளைக்கு ஓய்வு கிடைத்திருக்காது. அவரது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் கார்ட்டிசால் ஹார்மோன் அளவு உடலில் அதிகரிக்கும்....

`கொடநாடு பெயரைச் சொல்லி பூச்சாண்டி காட்டுவது இனி செல்லாது!' - ஈரோட்டில் கொதித்த எடப்பாடி பழனிசாமி

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து நேற்றைய தினம் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருங்கல்பாளையத்தில் பேசுகையில் , ``அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்காேவன் ஏற்கெனவே மத்திய அமைச்சராக இருந்து, இந்த ஈரோடு கிழக்குத் தாெகுதிக்கு என்ன செய்தார். அவர் வெற்றி பெற்றால் அவரை இங்கு காணமுடியாது. தி.மு.க ஆட்சிக்கு வந்து 22 மாதங்களாகியும் இந்தத் தொகுதிக்கு எதையும் செய்யவில்லை. இதைக் கேட்டால் கொடநாடு பிரச்னையை கையில் எடுக்கிறார்கள். கொடநாடுக்கும், ஈரோடுக்கும் என்ன சம்பந்தம். கொடநாட்டில் நடைபெற்ற திருட்டில் சம்பந்தப்பட்டவர்களை நாங்கள் கைதுசெய்தோம். ஆனால் அந்தக் கொலையாளிகளுக்கு ஜாமீன் பெற்றுத் தந்தவர்கள் தி.மு.க-வினர். கேரளாவில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கடத்தல் என கடும் குற்றங்கள் புரிந்த அவர்களுக்கு ஆதரவாக வாதாடுபவர் தி.மு.க-வின் எம்.பி என்றால் அதற்கு என்ன காரணம்? பிரசாரம் கொடநாடு பெயரைச் சொல்லி சும்மா பூச்சாண்டி ...

Doubt of Common Man: பத்ம விருதுகள் யாருக்கு வழங்கப்படுகின்றன? அதற்கு விண்ணப்பிப்பது எப்படி?

விகடனின் Doubt of Common man பக்கத்தில் பத்ம விருதுகள் யாருக்கு வழங்கப்படுகின்றன? அதற்கு விண்ணப்பிப்பது எப்படி? என வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். இதுகுறித்து கல்வியாளர் தேனி மு.சுப்பிரமணி விளக்கமளித்திருக்கிறார். இந்தியாவின் உயரிய குடியியல் விருதுகளாக பத்ம விருதுகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாளை முன்னிட்டு, இந்திய அரசால் அறிவிக்கப்படும் இவ்விருதுகள் பத்ம விபூசன், பத்ம பூசன், பத்மஸ்ரீ என்று மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. பத்ம விருதுகள் இந்திய அரசு 1954 ஆம் ஆண்டில் பாரத ரத்னா மற்றும் பத்ம விபூசன் என்று இரு உயரிய குடியியல் விருதுகளை நிறுவியது. பத்ம விபூசன் விருதானது, முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என்று மூன்று பிரிவுகளாக வழங்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் நாளில் குடியரசுத் தலைவர் அறிவிப்பின்படி, முதல் வகுப்பு விருது பத்ம விபூசன் என்றும், இரண்டாம் வகுப்பு விருது பத்ம பூசன் என்றும், மூன்றாம் வகுப்பு விருது பத்மஸ்ரீ என்றும் பெயரிடப்பட்டது. பாரத ரத்னா விருது முதன்மை விருதாகவும், விதிவிலக்கான விருதாகவும் இருந்து வருவதால், 2023 ஆம் ஆண்டு வரை 45 விர...

``சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டிருக்கிறேன்" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ல் உக்ரைன் மீது தொடுக்கப்பட்ட ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் தொடங்கி ஓராண்டு முடிந்துவிட்டது. உக்ரைன், நேட்டோவில் சேர முடிவெடுத்தால் வந்த போரால், அமெரிக்கா இன்றும் தனது நிலையான ஆதரவை உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. கடந்த வாரம், உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் பைடன், 500 மில்லியன் டாலர் அளவிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கவிருப்பதாகத் தெரிவித்திருந்தார். அதற்கடுத்த நாளே, ``உக்ரைனில் நடக்கும் அனைத்துக்கும் மேற்கத்திய நாடுகளே பொறுப்பு, சரியான வழியில் பதிலளிப்போம்" என புதின் கூறியிருந்தார்.ஜெலன்ஸ்கி - பைடன் - புதின் அதேசமயம், ரஷ்யாவுக்குச் சீனா தனது உச்சக்கட்ட ஆதரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, நேட்டோ கூறியிருந்தது. ஆனால் சீனாவோ, ``எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ரஷ்யாவும், உக்ரைனும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும். இந்தப் பேச்சுவார்த்தைக்கு அனைத்து நாடுகளும் ஆதரவளிக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், சீன அதிபரைச் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார். போரின் ஓராண்டு நி...