சீனாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று தொலைதூர காதலர்களுக்கான `முத்த சாதனம்’ (kissing device) ஒன்றை உருவாக்கியுள்ளது. இது மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும், மறுபுறம் சலசலப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
`நீ கொடுக்கும் முத்தங்கள் அனைத்தையும், போனே வாங்கிக் கொள்கிறது. அந்த முத்தத்தை என்னால் முழுமையாக உணர முடியவில்லை’ எனத் தொலைதூர காதலர்கள் வருத்தம் கொள்வதுண்டு. இவர்களுக்கு உதவும் வகையில், சீன பல்கலைக்கழகம் `Kissing Device’ ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்தச் சாதனம் சிலிக்கான் உதடுகள், பிரஷர் சென்சார் மற்றும் ஆக்சுவேட்டர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
தொலைதூரக் காதலர்கள், இதற்கான செயலியை தங்களது மொபைலில் முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். செல்போனில் இந்தச் சாதனத்தைப் பொருத்திய பின், பார்ட்னரை ஆப்பில் இணைக்க வேண்டும்.
அதன்பின் சிலிக்கான் உதடுகளில் முத்தமிட்டால், முத்தமிடுபவர் களின் அழுத்தம், வெப்பம் என உண்மையான முத்த உணர்வை, மறுபுறத்தில் இருப்பவரால் உணர முடியும். இதுமட்டுமல்லாமல் இந்தச் சாதனத்தை உபயோகிப்பவர் எழுப்பும் ஒலியையும் மற்றவருக்கு அனுப்ப முடியும் எனக் கூறுகின்றனர்.இசைஞானி என் ஜீவன்! - இசையின் காதலி பகிரும் பாடல் பட்டியல் | My Vikatan
இந்தச் சாதனத்தின் முன்னணி கண்டுபிடிப்பாளரான ஜியாங் ஜாங்லி கூறுகையில், ``எனது பல்கலைக்கழகத்தில் நான் என் காதலியுடன் தொலைதூர உறவில் இருந்தேன், எனவே நாங்கள் ஒருவருக்கொருவர் தொலைபேசி மூலம் மட்டுமே தொடர்பு கொண்டோம். இந்தச் சாதனத்தைக் கண்டுபிடிக்கும் உத்வேகம் இங்குதான் உருவானது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி வைரலான நிலையில், இதெல்லாம் இப்ப தேவையா என, சிங்கிள்ஸ் ஆதங்கத்துடன் கமென்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
http://dlvr.it/Sk6W1P
http://dlvr.it/Sk6W1P
Comments
Post a Comment