Skip to main content

Posts

Showing posts from September, 2022

`புதுச்சேரியில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்குத் தடை!' - அரசு அறிவிப்பு

மத்திய அரசு, 1967 சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 (மத்திய சட்டம் 37) பிரிவு 3(1) மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (PFI) மற்றும் அதன் கூட்டு மற்றும் துணை அமைப்புகளை சட்ட விரோதமான அமைப்புகள் என அறிவித்தது. இந்த நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கூட்டு அமைப்புகள் சட்ட விரோதமான அமைப்புகள் என்று புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவைக் குறிவைக்கும் என்.ஐ.ஏ - பின்னணி என்ன? இது குறித்து புதுவை தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா வெளியிட்டிருக்கும் உத்தரவில், ``புதுவை மாநிலத்திலும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் தொடர்புடைய ரிஹேப் இந்தியா பவுண்டேஷன், கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, அனைத்திந்திய இமாம்கள் கவுன்சில், மனித உரிமைகள் அமைப்பின் தேசியக் கூட்டமைப்பு ,நேஷனல் பெண்கள் ஃப்ரன்ட், ஜூனியர் ஃப்ரன்ட் , எம்பவர் இந்தியா பவுண்டேஷன் மற்றும் ரீயேப் பவுண்டேஷன் கேரளா ஆகிய அமைப்புகளை மத்திய அரசின் உத்தரவுகளை ...

Doctor Vikatan: படுக்கும்போது மூச்சு விடுவதில் சிரமம்... காரணமென்ன?

Doctor Vikatan: படுக்கும்போது ஒரு மாதமாக எனக்கு மூக்கடைப்பு ஏற்பட்டு மூச்சு விட சிரமமாகிறது. சளி, இருமல் இல்லை. எனக்கு புகைப்பழக்கமும் இல்லை. அப்படியானால் இந்தப் பிரச்னைக்கு காரணம் என்ன? தொற்றா... ஒவ்வாமையா... அல்லது வேறு ஏதும் கோளாறாக இருக்குமா? - Silveraj பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி. பூங்குழலி மூச்சு விடுதலில் சிரமங்கள் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். உங்களுடைய நாசித் துவாரங்களில் அடைப்பு இருந்தாலும் இப்படி இருக்கலாம். `டீவியேட்டடு நேசல் செப்டம்' ( deviated nasal septum) எனும் பாதிப்பும் இதற்கொரு காரணமாக இருக்கலாம். அதாவது மூக்கின் நாசிக்குழியை பாதியாகப் பிரிக்கும் எலும்பு மற்றும் குருத்தெலும்பானது வளைந்து, சுவாசத்தைக் கடினமாக்கும் ஒரு நிலை இது. 'டீவியேட்டடு நேசல் செப்டம்' ( deviated nasal septum) எனும் பாதிப்பும் இதற்கொரு காரணமாக இருக்கலாம். அதாவது மூக்கின் நாசிக்குழியை பாதியாகப் பிரிக்கும் எலும்பு மற்றும் குருத்தெலும்பானது வளைந்து, சுவாசத்தைக் கடினமாக்கும் ஒரு நிலை. உங்களுடைய வயதைக் குறிப்பிடவில்லை. இதற்க...

``காந்தி குடும்பம் இல்லாமல் காங்கிரஸுக்கு எந்த அடையாளமும் இருக்காது!" - மூத்த தலைவர் திக்விஜய சிங்

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கு அடுத்தமாதம் 17-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. முதலில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக வேண்டும் எனக் கூறிவர, ராகுல் காந்தியும் தொடர்ச்சியாக அதனை மறுத்துவந்தார். அதையடுத்து, காங்கிரஸ் எம்.பி சசி தரூர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் போட்டியிடுவதாகப் பேச்சுக்கள் அடிபட்டன. சசி தரூர் - அசோக் கெலாட் பின்னர், ராஜஸ்தான் அரசியலில் சில நெருக்கடிகள் எழ, அசோக் கெலாட் உடனடியாக இன்று டெல்லிக்கு விரைந்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்தார். அதன்பிறகு, தலைவர் பதவிக்கான தேர்தலில் தான் போட்டியிடவில்லை என செய்தியாளர்களிடம் அசோக் கெலாட் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தற்போது, தேர்தலில் வேட்புமனு செய்வதற்குக் கடைசி நாளான இன்று, சசி தரூர் மற்றும் மூத்த தலைவர் திக்விஜய சிங் வேட்புமனு தாக்கல் செய்யவிருப்பது உறுதியாகியுள்ளது. திக்விஜய சிங் இந்த நிலையில் தனியார் ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த திக்விஜய சிங், ``இப்போதுவரை, அசோக் கெலாட்தான் எங்களின் அதிகாரபூர்வ வேட்பாளராக இருக்கலாம் என்று கருதப்பட்டது...

``இதுதான் அதிமுக-வின் திராவிட மாடல்!" - சிவகாசி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பரபர பேச்சு

விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, முன்னாள்‌ பால்வளத்துறை அமைச்சரும், அ.தி.மு.க.மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமைத் தாங்கினார். இதில் முன்னாள் முதல் அமைச்சரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாடு வியக்கும் அளவுக்கு எழுச்சி மிகுந்த கண்டன பொதுக்கூட்டம் இங்கு நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டம் என்றைக்குமே அ.தி.மு.க கோட்டை என்பதை இங்கு கூடி இருப்பவர்களின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. இந்த மாநாட்டின் நாயகன், சோதனைகளை சாதனைகளாக்கிய கே.டி.ராஜேந்திர பாலாஜிதான். தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்பதற்கு இந்த கூட்டமே சாட்சி. எடப்பாடி பழனிசாமி இந்தியாவிலேயே தமிழகம் இன்று முன்னணி மாநிலமாக திகழ்கிறதென்றால் இந்த 32 ஆண்டுக்கால ஆட்சியில் அ.தி.மு.க அமைத்த அடித்தளமே காரணம். இந்த அடித்தளமே திராவிட மாடல். முதல்வர் மு.க.ஸ்டாலின...

ஊழியர்களுக்கு முதல் மரியாதை... - #மாத்தி யோசி கதைகள் - 3

இன்று திங்கட்கிழமைதானே.... காலையில் என் வண்டி ஆட்டோ-பைலட்டில் போட்டது போல் சந்துருவின் கடைக்குத் தானாகவே போகும். அவர் ஒரு வல்கனைஸிங் கடை வைத்திருந்தார். பழைய டயர்களுக்கு retread செய்து தருவார். பிரைடல் மேக்கப் போட்ட பெண் போல் ஜொலிக்கும். பிராண்டிற்கு ஒன்றிரண்டு என்று புதிய டயர்களும் இருக்கும். அந்த விற்பனையிலும் வருமானம் உண்டு. இரண்டு சக்கரங்களிலும் காற்றை நிரப்பிய பின் புதுத் தெம்போடு நிமிர்ந்து நிற்கும் என் வண்டி. பின்னர் என் வழக்கமான பணிக்காக பல இடங்களுக்கும் போவேன். வாரம் ஒரு முறை நடக்கும் இந்த வைபவம். சைக்கிள் பல்கலைக்கழகத்தில் சம்பளம் போட பணமில்லை..! `மாத்தி யோசி' பிசினஸ் கதைகள் - 2 அன்றைக்குப் போனபோது கடையில் சந்துரு இல்லை. ஒரு பையன்தான் காற்றை நிரப்பினான். புதியதாக வேலைக்குச் சேர்ந்தவன் போலிருக்கிறது. பணத்தைக் கொடுத்தேன். வாங்கி, தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். சந்துருவின் நிதி ஆலோசகன் நான், கணக்கு வழக்குகளையும் பார்த்து வருகிறேன். அதனால் பணத்தைக் கல்லாவில் போடவில்லை என்பதைக் கவனித்தேன். சில நாட்களுக்கும் பிறகு கடைக் கணக்கைச் சரி பார்க்கச் சென்ற போது இந்த நிகழ்...

பாஜக, இந்து அமைப்பு நிர்வாகிகள் இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு - கவனிக்கப்படும் அண்ணாமலை ‘மூவ்’

தொடர்க் குண்டு வீச்சு : கோவை, திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், திண்டுக்கல், செங்கல்பட்டு, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளால் உள்ள பாஜக, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்படும் சம்பவமும், அவர்களின் வாகனங்களை தீ வைத்து எரிக்கும் சம்பவமும் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பெட்ரோல் குண்டு வீச்சு கோவையில் அதிகப்படியான இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நடந்ததையடுத்து, அங்கு காவல்துறையினர் பெருமளவு குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். தலைமைச் செயலர் இறையன்பு, சட்டம் - ஒழுங்கு நிலவரம் தொடர்பாக, காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். பாஜக மனு: இந்நிலையில், பாஜக அலுவலகம், அந்தக் கட்சியின் பிரமுகர்களின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்படும் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமல...

ஓய்வுக் காலத்தை மகிழ்ச்சியாய் கழிக்க எவ்வளவு பணம் தேவை? வழிகாட்டும் நாணயம் விகடன் நிகழ்ச்சி!

ஓய்வுக்காலம் என்பது எல்லோருக்குமே மிக முக்கியமான காலம். 60 வயது வரை ஓடி ஓடி உழைத்து களைத்து போன நிலையில் கொஞ்சமேனும் இந்த வாழ்க்கையை ரசித்து வாழலாம் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும். பிடித்த இடங்களுக்கு சுற்றுலா செல்வது, பிடித்தமான விஷயங்களைச் செய்வது என எல்லோருக்குமே ஓய்வுக்காலத்தை கழிப்பதற்கு ஒரு திட்டம் இருக்கும். மியூச்சுவல் ஃபண்ட் நாணயம் விகடன் வெபினார்: ஆயத்த ஆடை ஃப்ரான்சைஸ் வாய்ப்புகள் பற்றி இலவசமாக தெரிந்து கொள்ள வேண்டுமா? ஆனால் அதற்கு கணிசமான வருமானம் என்பது கட்டாயம் தேவை. எல்லோருக்கும் கடைசி வரை வருமானம் வரும் என்று சொல்ல முடியாது. எனவே ஓய்வுக்காலத்திலும் பண நெருக்கடி இல்லாமல் வாழ்வதற்குத்தான் ஓய்வுக்கால நிதியைத் தயார் செய்துகொள்வது அவசியம் என நிதி ஆலோசகர்கள் கூறுகிறார்கள். அதேசமயம் எப்படி ஓய்வுக்காலத்துக்கான நிதியைத் தயார் செய்வது, எதில் சேமித்தால் எவ்வளவு கிடைக்கும். ஓய்வுக்காலத்தில் நம்முடைய நிதி தேவை எப்படி இருக்கும் என்பதையெல்லாம் பொருத்துதான் நம்முடைய முதலீட்டையும் திட்டமிட வேண்டும். அந்த வகையில் ஓய்வுக்காலத்துக்கான நிதியை சேர்ப்பதற்கு மியூச்சுவல் ஃபண்ட் ஒரு சிறந...

INDvSA: அற்புதம் நிகழ்த்திய அர்ஷ்தீப்; திணறிப்போன தென்னாப்பிரிக்கா; முதல் போட்டியை வென்றது இந்தியா!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்திய அணி இந்தப் போட்டியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. சிறப்பாக பந்துவீசி ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார். திருவனந்தபுரத்தின் க்ரீன்ஃபீல்ட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றிருந்தது. பெயருக்கேற்றவாறே பிட்ச்சிலும் வழக்கத்தைவிட அதிக புற்கள் நிரம்பியே காணப்பட்டது. பிட்ச் ரிப்போர்ட்டைக் கொடுத்த அஜித் அகர்கரும் எம்பாங்வாவும் நியூ பாலில் பௌலர்களுக்கு உதவக்கூடிய பிட்ச்சாக இருக்கும் என உத்தரவாதம் கொடுத்தனர். அதேபோன்றுதான் நடக்கவும் செய்தது. டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். டாஸின் போது ரவிசாஸ்திரி ரோஹித் சர்மாவிடம் Rohit |INDvSA 'ரசிகர்களின் ஆராவாரத்தை பார்த்தீர்களா? இந்த சத்தத்தில் அவுட் ஃபீல்டில் நிற்கும் வீரர்களிடம் எப்படி தகவல்களை பரிமாறிக்கொள்ளப் போகிறீர்கள்?' ரவிசாஸ்திரி நகைச்சுவையாகத்தான் இந்த கேள்வியை கேட்டார். ஆனால், ரோஹித் & கோ இதை படு சீரியசாக எடுத்துக் கொண்ட...

அதிமுக: புதிய பொறுப்பு... உடனடி நீக்கம் - பண்ருட்டி ராமச்சந்திரனை முன்வைத்து நடக்கும் அரசியல் என்ன?

``அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்'' என ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட, ``கட்டுப்பாடுகளை மீறி கட்சியின் பெயருக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதால் பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார்'' என அடுத்த சில நிமிடங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதிரடி காட்டினார் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. மூத்த அரசியல் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனை முன்வைத்து அதிமுகவில் நடக்கும் அரசியல் என்ன? எம்.ஜி.ஆருடன் பண்ருட்டி ராமச்சந்திரன் பண்ருட்டி ராமச்சந்திரன் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக என பல்வேறு கட்சிகளில் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தவர். ஆனால், அவர் பயணித்த அனைத்துக் கட்சிகளும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக விளங்கியவர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைச்சரவையிலும், அதன்பிறகு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அமைச்சரவையிலும் மின்சாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். பாமகவின் முதல் சட்டமன்ற உறுப்பினரே பண்ருட்டி ராமச்சந...

Doctor Vikatan: 40 வயதைக் கடந்த எல்லோருக்கும் இசிஜியும் டிரெட்மில் டெஸ்ட்டும் அவசியமா?

Doctor Vikatan: 40 வயது தாண்டியவர்கள் எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை ECG செய்வது நல்லது? டிரெட்மில் டெஸ்ட் யாருக்குச் செய்ய வேண்டும்? இந்த இரண்டிலும் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பார்கள்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்... மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் இதயத்தின் எலக்ட்ரிகல் ஆக்டிவிட்டியை பார்க்கப் பயன்படுத்துவதே இசிஜி. ஹார்ட் அட்டாக் ஏற்படும்போது இந்த இசிஜியில் மாற்றங்கள் இருக்கும். ஏற்கெனவே ஹார்ட் அட்டாக் வந்திருக்கிறதா, வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்பதையெல்லாம்கூட இசிஜியில் கண்டுபிடிக்க முடியும். மேற்கத்திய மருத்துவ கைடுலைன்படி. முறையாக டிரெட்மில் செய்யச் சொல்லி அறிவுறுத்தப்படுவதில்லை. ஆனால் இந்தியர்களிடையே மாரடைப்பு விகிதம் அதிகம் என்பதால் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, மருத்துவரிடம் பேசி, இசிஜி மற்றும் டிரெட்மில் டெஸ்ட் செய்து பார்ப்பதில் தவறு ஏதும் இல்லை. 30-35 வயதிலேயே இன்று பலரும் உடலியக்கங்களைக் குறைத்துக் கொள்கிறார்கள். 50 வயதில் அடியெடுத்து வைக்கும்போதே தனக்கு வயதாகிவிட்டது, இனிமேல் உடல்ரீதியாக ...

``ஓ.பி.எஸ் பாவம்; கலங்கிப்போய் ஏதேதோ பினாத்திக் கொண்டிருக்கிறார்’’ - கலாய்த்த துரைமுருகன்

வே லூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குஉட்பட்ட பொன்னையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணியை, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நட்டு தொடங்கி வைத்தார். அப்போது பேசிய துரைமுருகன், ‘‘எங்கள் ஆட்சியில் யார் யாருக்கு எவ்வளவு செய்ய வேண்டுமோ, அதைச் செய்கின்றோம். ஹை-ஸ்கூலில் படிச்சிக்கிட்டிருக்கிற பெண், காலேஜ் போனால் அவருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம். செலவுக்கு அவர் பெற்றோரிடம் கேட்கத் தேவையில்லை. பெண் பிள்ளைகளின் அம்மாக்களுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுப்போம். அதற்காகத்தான் சில்லரை மாத்திக்கிட்டு இருக்கிறோம். கவலைப்படாதீங்க. சொன்னபடி கொடுத்துவிடுவோம். அம்மாவுக்கு ஆயிரம்; பொண்ணுக்கும் ஆயிரம்; இப்படி ரெண்டாயிரம் ரூபாய் கொடுக்கிற ஒரே ஆட்சி எங்க ஆட்சிதான்’’ என்றார். துரைமுருகன் அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகனிடம், ‘‘அணை விவகாரத்தில் ஆந்திர அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் நீங்கள் இரட்டை வேடம் போடுவதாக ஓ.பன்னீர்செல்வம் பேசிவருகிறாரே?’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ‘‘நானாவது இரட்டை வேடம் போடுகிறேன் என்கிறார். அவரோ பல வேடங்களைப்...

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு: 5 ஆயிரம் அலுவலர்கள் கொண்ட குழு அமைப்பு!

வடகிழக்கு பருவ மழை தொடங்கவிருப்பதை அடுத்து, அதற்கான முன்னேற்பாடுகள் சார்ந்து வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை ஆகிய துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,  பருவமழைக் காலத்தில் பயிர்கள் சேதமடையாமல் தடுக்க எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? பூச்சித்தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்குத் தேவையான பூச்சிக்கொல்லி மருந்துகளின் கையிருப்பு, உரங்களின் கையிருப்பு, தென்னை மரங்கள் சாயாமல் எப்படி தடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கப்பட்டது.  இந்த ஆலோசனைக்கூட்டம் குறித்துப் பேசிய வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீசெல்வம்... எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ``வடகிழக்கு பருவமழைய எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 5000 அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், பருவமழை காலத்தில் தேவையான பணிகளை செய்தும், கண்காணிப்புப் பணியிலும் ஈ...

25 ஆண்டு கடந்து சாதனை, 8 வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட்கள்: வருமானம் எவ்வளவு தெரியுமா?

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் 8 வரிச் சேமிப்பு திட்டங்கள் 25 ஆண்டுகள் கடந்து சாதனை படைத்துள்ளன. இந்த 25 ஆண்டுகளில் இந்த அனைத்து ஃபண்ட்களும் பணவீக்க விகிதத்தை விட கூடுதல் வருமானத்தைதான் தந்திருக்கின்றன. இந்த ஃபண்ட்கள் ஆண்டுக்கு சராசரியாக 9.5% தொடங்கி 23% வரை வருமானம் கொடுத்திருக்கின்றன. ஆர். வெங்கடேஷ், நிறுவனர், https://ift.tt/6iamDy8 வீழும் பங்குச் சந்தை... வளரும் மியூச்சுவல் ஃபண்ட் துறை... எப்படி சாத்தியமானது? 25 ஆண்டுகள் நிறைவு... இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை, மொத்தம் 37 வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை கொண்டுள்ளன. இதில் 8 ஃபண்ட்கள் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கின்றன. இதில் டாப் ஆறு ஃபண்ட்கள் 15% முதல் 23% வருமானத்தை கொடுத்திருக்கின்றன. கடந்த ஆண்டுகளில் இந்த எட்டு ஃபண்ட்களும் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வந்திருக்கின்றன. இருந்தாலும் அவற்றில் பல நல்ல வருமானத்தை தந்திருக்கின்றன.  முதல் இடத்தில் இருக்கும் ஹெச்.டி.எஃப்.சி டாக்ஸ்சேவர் ஃபண்ட், ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 23.30% வருமானத்தை கொடுத்திருக்கிறது. அடுத்த இடத்திலிருக்கும் ஆதித்ய பிர்லா சன்லைஃப...

ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எதிராக களமிறங்கும் திருமாவளவன் - ஊர்வலத்துக்கு தடை கோருவது ஏன்?

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்தைத் தொடர்ந்து தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவைத் திரும்பப்பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதே அக்டோபர் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் இணைந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தை முன்னெடுக்கவும் முடிவு செய்துள்ளன. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிடர் கழக தலைவர் வீரமணி உள்ளிட்டோர் பேரணிக்கு எதிராகக் கடுமையாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர். இப்படி, தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள், அமைப்புகள் ஓரணியில் நின்று ஆர்.எஸ்.எஸ்ஸின் பேரணியை எதிர்ப்பது ஏன்? ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அந்த மனு மீது முடிவெடுக்கப்படாததால், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி ...

Doctor Vikatan: பொட்டு வைக்கும் இடத்தில் அரிப்பு... நிரந்தர தீர்வு உண்டா?

Doctor Vikatan: நெற்றியில் பொட்டுவைக்கும் இடத்தில் அரிப்பு வருகிறது. இதற்கான காரணம் என்ன? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? - அ.சந்திரலேகா, மதுரை- 3 . பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த காஸ்மெட்டாலஜி மருத்துவர் ஹேமமாலினி ரஜினிகாந்த். காஸ்மெட்டாலஜி மருத்துவர் ஹேமமாலினி ரஜினிகாந்த் பொட்டு வைக்கும்போது ஏற்படும் அரிப்புக்கு முக்கிய காரணம் ஸ்டிக்கர் பொட்டில் உள்ள கெமிக்கல்கள். வியர்வை அதிகம் உள்ளோருக்கு வியர்வையும், ஸ்டிக்கரில் உள்ள கெமிக்கலும் சேரும்போது அரிப்புக்கு காரணமாகும். பொட்டு வைக்கும் இடத்தில் ஈரப்பதம் இல்லாததாலும், மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் வைப்பதாலும் ஒரு கட்டத்தில் அந்த இடத்தில் அதன் தடம் பதியத் தொடங்கும். பொட்டு வைப்பதால் அரிப்பு ஏற்படுவதாக உணர்பவர்கள், முதலில் ஸ்டிக்கர் பொட்டின் பிராண்டை மாற்றிப் பார்க்கலாம். தரமான பிராண்டின் ஸ்டிக்கர் பொட்டுகளில் பசையானது அலர்ஜியை ஏற்படுத்தாது. ஒருவேளை நீங்கள் குங்குமம், சாந்துப் பொட்டு வைப்பவர் என்றால் அவற்றுக்கும் இது பொருந்தும். எல்லா நேரமும் பொட்டுடன் இருக்க வேண்டும் என நினைக்க வேண்டாம். இரவில் தூங்கச் செல்லும் முன் முகம் கழ...

`சட்டவிரோத செயல்பாடுகள்...’ - பி.எஃப்.ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்த மத்திய அரசு

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் கிளைகளை பரப்பி, சிறுபான்மை சமூகத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அமைப்பாக கருதப்படுகிறது. பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலவரங்களை தூண்டி வருவதாக குற்றம் சாட்டி, அவற்றை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் சோதனை செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை கைது செய்திருக்கின்றனர். இதனை அந்த அமைப்பினர் மட்டுமின்றி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், மதச்சார்பற்ற இயக்கங்களும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட என்.ஐ.ஏ சோதனையை கண்டித்து நாடு முழுவதும் அந்த அமைப்பும் எஸ்.டி.பி.ஐ, இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு, எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. கேரளாவில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பாஜக - அமித் ஷா, மோடி இந்த நிலையில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் ...

ஒன் பை டூ

வினோஜ் பி. செல்வம், மாநிலச் செயலாளர், பா.ஜ.க ``உண்மையைச் சொல்லியிருக்கிறார். கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தியாவிலுள்ள அனைத்துத் துறைகளின் முன்னேற்றத்திலும் பிரதமர் அதிக கவனம் செலுத்திவருகிறார். அதனால்தான் பொருளாதார வளர்ச்சியில் இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா முன்னேறியிருக்கிறது. குறிப்பாக விவசாயிகளின் முன்னேற்றத்துக்காகவும், வேளாண்துறை வளர்ச்சிக்காகவும் பிரதமர் தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டிருக்கிறார். அதன் விளைவாகவே இந்திய விவசாயிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவு அதிகரித்திருக்கிறது. இன்றைய தேதிக்கு விருதுநகரில் உள்ள ஒரு விவசாயி, தான் விளைவித்த பொருள்களை எந்த இடைத்தரகரின் உதவியும் இல்லாமல் சிங்கப்பூருக்கும், துபாய்க்கும் ஏற்றுமதி செய்யமுடியும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. நேரடிச் சந்தை விற்பனை, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளது. கொரோனா காலகட்டத்தில், 13 கோடி விவசாயிகளுக்குத் தவணை முறையில் தலா 6,000 ரூபாய் நேரிடையாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்பட்டது. இதுவே கடந்த ஆட்சியாக இருந்திருந்தால், நிச்சயம் கமிஷன் போக சொற்ப தொகைதான் கிடைத்திருக்கும். விவசாயி...