மத்திய அரசு, 1967 சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 (மத்திய சட்டம் 37) பிரிவு 3(1) மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (PFI) மற்றும் அதன் கூட்டு மற்றும் துணை அமைப்புகளை சட்ட விரோதமான அமைப்புகள் என அறிவித்தது. இந்த நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கூட்டு அமைப்புகள் சட்ட விரோதமான அமைப்புகள் என்று புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.
இது குறித்து புதுவை தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா வெளியிட்டிருக்கும் உத்தரவில், ``புதுவை மாநிலத்திலும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் தொடர்புடைய ரிஹேப் இந்தியா பவுண்டேஷன், கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, அனைத்திந்திய இமாம்கள் கவுன்சில், மனித உரிமைகள் அமைப்பின் தேசியக் கூட்டமைப்பு ,நேஷனல் பெண்கள் ஃப்ரன்ட், ஜூனியர் ஃப்ரன்ட் , எம்பவர் இந்தியா பவுண்டேஷன் மற்றும் ரீயேப் பவுண்டேஷன் கேரளா ஆகிய அமைப்புகளை மத்திய அரசின் உத்தரவுகளை மேற்கோள்காட்டி சட்டவிரோதமாக அமைப்புகளாக அறிவித்து, தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இதனை அமல்படுத்த புதுச்சேரி மாவட்ட, காரைக்கால் மாவட்ட ஆட்சியர்கள், மாநகர முதுநிலை காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 (மத்திய சட்டம்) பிரிவு 7 மற்றும் 8-ன் கீழ் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்த மாவட்ட ஆட்சியர், காவல்துறைக்கு புதுச்சேரி தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
Comments
Post a Comment