இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் 8 வரிச் சேமிப்பு திட்டங்கள் 25 ஆண்டுகள் கடந்து சாதனை படைத்துள்ளன. இந்த 25 ஆண்டுகளில் இந்த அனைத்து ஃபண்ட்களும் பணவீக்க விகிதத்தை விட கூடுதல் வருமானத்தைதான் தந்திருக்கின்றன. இந்த ஃபண்ட்கள் ஆண்டுக்கு சராசரியாக 9.5% தொடங்கி 23% வரை வருமானம் கொடுத்திருக்கின்றன.
25 ஆண்டுகள் நிறைவு...
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை, மொத்தம் 37 வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை கொண்டுள்ளன. இதில் 8 ஃபண்ட்கள் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கின்றன. இதில் டாப் ஆறு ஃபண்ட்கள் 15% முதல் 23% வருமானத்தை கொடுத்திருக்கின்றன.
கடந்த ஆண்டுகளில் இந்த எட்டு ஃபண்ட்களும் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வந்திருக்கின்றன. இருந்தாலும் அவற்றில் பல நல்ல வருமானத்தை தந்திருக்கின்றன.
முதல் இடத்தில் இருக்கும் ஹெச்.டி.எஃப்.சி டாக்ஸ்சேவர் ஃபண்ட், ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 23.30% வருமானத்தை கொடுத்திருக்கிறது. அடுத்த இடத்திலிருக்கும் ஆதித்ய பிர்லா சன்லைஃப் டாக்ஸ் ரிலிஃப் 96 ஃபண்ட் ஆண்டுக்கு சராசரியாக 22% வருமானத்தை கொடுத்திருக்கிறது.
அடுத்த இடங்களில் டாடா இந்தியா டாக்ஸ் சேவிங்ஸ் ஃபண்ட் (18.45%), சுந்தரம் டாக்ஸ் சேவிங்ஸ் ஃபண்ட் (18.20%), எஸ்.பி.ஐ லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் (16.10%) உள்ளன. மீதி ஃபண்ட்கள் கொடுத்திருக்கும் வருமானத்தை அட்டவணையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஃபண்ட்களின் வருமானம்தான் எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, முதலீட்டுக்கு வரிச் சேமிப்பு ஃபண்டை தேர்வு செய்யும் போது, அதன் முதலீட்டுக் கலவையில் இடம் பெற்றிருக்கும். நிறுவனப் பங்குகளை பார்த்து முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். மேலும், வரிச் சேமிப்புக்காக மேற்கொள்ளும் முதலீட்டை ஒரே ஃபண்டில் மேற்கொள்ளாமல் ஒன்றுக்கு மேற்பட்ட பிரித்து மேற்கொள்வது லாபரமாக இருக்கும். இந்த ஃபண்டில் குறைந்தபட்ச மொத்த முதலீடு மற்றும் எஸ்.ஐ.பி முதலீடு ரூ.500 என்பதால், ஒன்றுக்கு மேற்பட்ட ஃபண்ட்களில் தாராளமாக முதலீடு செய்ய முடியும்.
வருமான வரிச் சலுகை மற்றும் வரி அணுகூலம்..!
இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் மொத்தம் ரூ. 1.5 லட்சம் கோடி நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டமான இ.எல்.எஸ். எஸ் ஃபண்ட்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரிச் சலுகை அளிக்கப்படும். இந்த ஃபண்டில் செய்யப்படும் முதலீட்டை மூன்றாண்டுக்கு எடுக்க முடியாது.
இண்டெக்ஸ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்–ஐ பேசிவ் பிரிவில் அறிமுகப்படுத்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு செபி அமைப்பு அண்மையில் அனுமதி வழங்கி இருக்கிறது.
இந்த வரிச் சேமிப்பு ஃபண்டில் கிடைக்கும் டிவிடெண்ட் வருமானத்துக்கு ஒருவர், எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கு ஏற்ப வரிக் கட்ட வேண்டும். நீண்ட கால மூலதன ஆதாயத்தில் நிபந்தனைக்கு உட்பட்டு நிதி ஆண்டில் ரூ. 1 லட்சம் வரை வரி இல்லை. அதற்கு மேற்பட்ட மூலதன ஆதாயத்துக்கு 10% வரி கட்டினால் போதும்.
இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்யும் போதே அவரவரின் வரி வரம்புக்கு ஏற்ப 5%, 20%, 30% (பழைய வரி முறையில்) வரி மிச்சமாகி கூடவே பணவீக்க விகித்தை விட் நல்ல வருமானம் என்கிற போது இ.எல்.எஸ்.எஸ். ஃபண்ட் முதலீட்டை மிகச் சிறந்த முதலீடு என்றுதான் சொல்ல வேண்டும்.
Comments
Post a Comment