Skip to main content

Doctor Vikatan: 40 வயதைக் கடந்த எல்லோருக்கும் இசிஜியும் டிரெட்மில் டெஸ்ட்டும் அவசியமா?

Doctor Vikatan: 40 வயது தாண்டியவர்கள் எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை ECG செய்வது நல்லது? டிரெட்மில் டெஸ்ட் யாருக்குச் செய்ய வேண்டும்? இந்த இரண்டிலும் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பார்கள்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்...

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

இதயத்தின் எலக்ட்ரிகல் ஆக்டிவிட்டியை பார்க்கப் பயன்படுத்துவதே இசிஜி. ஹார்ட் அட்டாக் ஏற்படும்போது இந்த இசிஜியில் மாற்றங்கள் இருக்கும். ஏற்கெனவே ஹார்ட் அட்டாக் வந்திருக்கிறதா, வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்பதையெல்லாம்கூட இசிஜியில் கண்டுபிடிக்க முடியும்.

மேற்கத்திய மருத்துவ கைடுலைன்படி. முறையாக டிரெட்மில் செய்யச் சொல்லி அறிவுறுத்தப்படுவதில்லை. ஆனால் இந்தியர்களிடையே மாரடைப்பு விகிதம் அதிகம் என்பதால் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, மருத்துவரிடம் பேசி, இசிஜி மற்றும் டிரெட்மில் டெஸ்ட் செய்து பார்ப்பதில் தவறு ஏதும் இல்லை.

30-35 வயதிலேயே இன்று பலரும் உடலியக்கங்களைக் குறைத்துக் கொள்கிறார்கள். 50 வயதில் அடியெடுத்து வைக்கும்போதே தனக்கு வயதாகிவிட்டது, இனிமேல் உடல்ரீதியாக ஆக்டிவ்வாக இருப்பது சாத்தியமில்லை என நினைக்கிறார்கள். சிலருக்கு இதயத்தின் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மெள்ள மெள்ள அதன் தீவிரம் அதிகரிக்கிறது. அந்நிலையில் அவர்களால் உடல்ரீதியாக ஆக்டிவ்வாக இருக்க முடிவதில்லை. அதனாலும் உடலியக்கங்களைக் குறைத்துக் கொள்கிறார்கள். ரத்தக் குழாய் அடைப்பின் காரணமாக இதயத்துக்கு போதுமான ஆக்ஸிஜன் செல்வதில்லை.

டிரெட்மில் டெஸ்ட் செய்யும்போது ஒருவரால் எவ்வளவு தூரம் நடக்க முடிகிறது, வேகமாக நடக்கும்போது ஏதேனும் அசாதாரண அறிகுறிகள் தெரிகின்றனவா என்று தெரியும்.

ECG

இசிஜி டெஸ்ட் எடுக்கிறார்கள்.... நார்மல் என்று ரிசல்ட் வருகிறது. அதனால் இனி எதிர்காலத்தில் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வராது என்று சொல்ல முடியாது. ஏனெனில் இசிஜி என்பது ஏற்கெனவே மாரடைப்பு வந்ததையும், தற்சமயம் அதற்கான ஆபத்து இருக்கிறதா என்பதையும் மட்டும்தான் காட்டும். அதுவே இதயத்தில் 30 சதவிகித அடைப்பு இருந்தால் அது இசிஜியிலோ, டிரெட்மில் டெஸ்ட்டிலோ தெரியாது. நார்மல் என்றே காட்டும்.

எனவே சிலருக்கு கார்டியாக் CT மற்றும் ஆஞ்சியோகிராம் என இரண்டு பிரத்யேக டெஸ்ட்டுகள் மூலம்தான் ரத்தக்குழாய் அடைப்பைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும். அதற்காக எல்லோரும் போய் இந்த இரண்டு டெஸ்ட்டுகளையும் செய்து கொள்ளுங்கள் என்று சொல்வதாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம்.

இதயம்

இதயம் தொடர்பான பிரச்னைகள் வரலாம் என்ற ரிஸ்க் பிரிவில் உள்ளவர்கள் மருத்துவரிடம் பேசி, முன்னெச்சரிக்கையாக இந்த டெஸ்ட்டை செய்து கொள்ளலாம். மற்றபடி 40 வயதுக்கு மேலானவர்கள் இசிஜி மற்றும் டிரெட்மில் டெஸ்ட் செய்து பார்ப்பதில் தவறு கிடையாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...