Doctor Vikatan: படுக்கும்போது ஒரு மாதமாக எனக்கு மூக்கடைப்பு ஏற்பட்டு மூச்சு விட சிரமமாகிறது. சளி, இருமல் இல்லை. எனக்கு புகைப்பழக்கமும் இல்லை. அப்படியானால் இந்தப் பிரச்னைக்கு காரணம் என்ன? தொற்றா... ஒவ்வாமையா... அல்லது வேறு ஏதும் கோளாறாக இருக்குமா?
- Silveraj
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.
மூச்சு விடுதலில் சிரமங்கள் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். உங்களுடைய நாசித் துவாரங்களில் அடைப்பு இருந்தாலும் இப்படி இருக்கலாம்.
`டீவியேட்டடு நேசல் செப்டம்' ( deviated nasal septum) எனும் பாதிப்பும் இதற்கொரு காரணமாக இருக்கலாம். அதாவது மூக்கின் நாசிக்குழியை பாதியாகப் பிரிக்கும் எலும்பு மற்றும் குருத்தெலும்பானது வளைந்து, சுவாசத்தைக் கடினமாக்கும் ஒரு நிலை இது.
'டீவியேட்டடு நேசல் செப்டம்' ( deviated nasal septum) எனும் பாதிப்பும் இதற்கொரு காரணமாக இருக்கலாம். அதாவது மூக்கின் நாசிக்குழியை பாதியாகப் பிரிக்கும் எலும்பு மற்றும் குருத்தெலும்பானது வளைந்து, சுவாசத்தைக் கடினமாக்கும் ஒரு நிலை.
உங்களுடைய வயதைக் குறிப்பிடவில்லை. இதற்கு முன் இந்தப் பிரச்னை இல்லை... இப்போதுதான் புதிதாக வருகிறது, சளி, இருமல் தொந்தரவுகளும் இல்லை என்றால் நீங்கள் மருத்துவரை அணுகுங்கள்.
அவர், இது காது, மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்னையா, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னையா அல்லது நுரையீரல் சம்பந்தப்பட்டதா என்று பார்த்து அதற்கேற்ற மருத்துவரைப் பார்க்கப் பரிந்துரைப்பார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment