Doctor Vikatan: சிறுநீரகக் கல் ( Kidney stones ) பிரச்னை உள்ளவர்கள், கீரைகள் மற்றும் தக்காளி சாப்பிடக்கூடாது என்று கேள்விப்பட்டேன். அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஸ்ரீமதி வெங்கட்ராமன் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்து, உடலை நீர் வறட்சியின்றி வைத்துக்கொள்ளாவிட்டால், சிறுநீரகக் கல் பிரச்னை மீண்டும், மீண்டும் தொடரும். கிட்னி ஸ்டோன்ஸ் வராமலிருக்க சில வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டியதும் அவசியம். கிட்னி ஸ்டோன்ஸ் என்பவை ஆக்ஸலேட் கற்களைக் குறிக்கும். கீரைகளில் சிறுநீரகக் கற்களை உருவாக்கும் ஆக்ஸலேட் அதிகம். அதாவது 100 கிராம் கீரையில் 755 மில்லிகிராம் அளவுக்கு ஆக்ஸலேட் (Oxalates) இருக்கும். எனவே, கிட்னி ஸ்டோன் பிரச்னை உள்ளவர்கள், கீரை, குறிப்பாக பசலைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்ப்பதே நல்லது. சிறுநீரகக் கல் பாதிப்புள்ளவர்கள், தக்காளி எடுத்துக்கொள்ளலாமா என்ற கேள்வியும் பலருக்கு உண்டு. தக்காளி சாஸில் 17 ம...