Skip to main content

Racism: கப்பல் மோதி சரிந்த அமெரிக்க பாலம்... இந்திய பணியாளர்கள் மீது இனவெறி கார்ட்டூன்! - சர்ச்சை

கடந்த சில நாள்களுக்கு முன்பு அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்திலுள்ள பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கை நோக்கி சிங்கப்பூர் கொடியுடன் புறப்பட்ட 300 மீட்டர் நீளம் கொண்ட சரக்கு கப்பல், எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து `பிரான்சிஸ் ஸ்காட் கீ இரும்புப் பாலம் (2.6 கி.மீ நீளம்) மீது மோதியது. இந்த விபத்தில், 47 ஆண்டுகால பழமையான இந்தப் பாலம் இடிந்து விழுந்து நீருக்கு மூழ்கியது.சரக்குக் கப்பல் இரும்புப் பாலம் மீது மோதி விபத்து

இருப்பினும், பாலத்தின்மீது கப்பால் மோதுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, கப்பலிலிருந்த 22 இந்தியர்கள் அடங்கிய பணியாளர் குழு கடைசி நேர அவசர அழைப்பை (Mayday Call) விடுத்ததால் பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. கப்பலிலிருந்தவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

Wild footage of ship losing power twice, crashing into Baltimore’s Francis Scott Key Bridge, causing it to collapse. footage has been sped up pic.twitter.com/IXeiuGCUkG— Carl Zha (@CarlZha) March 26, 2024

இதனால், சரியான நேரத்தில் சமயோஜிதமாகச் செயல்பட்ட இந்தியர்கள் அடங்கிய பணியாளர் குழுவை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டினார். அதோடு, மேரிலேண்ட் மாகாண ஆளுநர் வெஸ் மூர், இந்தியர்கள் அடங்கிய இந்தப் பணியாளர் குழுவினரை ஹீரோக்கள் என்றும் பாராட்டினர்.

இந்த நிலையில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Foxford Comics எனும் வெப்காமிக் நிறுவனம், கப்பல் பாலத்தின் மீது மோதிய சம்பவத்தை சித்தரித்து வெளியிட்டிருக்கும் கார்ட்டூன் வீடியோ பல்வேறு எதிர்ப்பை பெற்றுவருகிறது. காரணம், கப்பலிலிருந்து பணியாளர்கள் இந்தியர்கள் என்பதால் அந்த கார்ட்டூன் வீடியோவில், கப்பலினுள் இருக்கும் இந்தியர்கள் ஒரேயொரு வேஷ்டியை கட்டிக்கொண்டு மேலாடை எதுவும் இல்லாமலிருப்பது போன்றும், பின்னணியில் ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தில் திட்டிக்கொள்வது போன்றும் கார்ட்டூன் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

Last known recording from inside the Dali moments before impact pic.twitter.com/Z1vkc828TY— Foxford Comics (@FoxfordComics) March 26, 2024

இதனால், இனவெறி (Racism) நோக்கத்தில் இந்த கார்ட்டூன் சித்தரிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சத்துவருகின்றனர். அதில் இணையதளவாசி ஒருவர், `இந்த துயர சம்பவத்துக்காக இந்தியக் குழுவினரைக் கேலி செய்வது வெட்கக்கேடானது' என விமர்சத்திருக்குகிறார். அதேபோல் மற்றொரு இணையதளவாசி, `சரக்குக் கப்பல்களில் பெரும்பாலும் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டு பணியாளர்களே அதிகம் இருக்கின்றனர் என்பது இவர்களுக்குத் தெரியுமா... இல்லையென்றால், அவர்கள் இதுபோன்ற இனவெறி கருத்துக்களை வெளியிட மாட்டார்கள்' என்று பதிவிட்டிருக்கிறார். மேலும் இன்னொரு இணையதளவாசி, `இனவெறி அடிப்படையிலான இந்தக் கேலிக்கூத்து மிகவும் மோசமான ரசனையில் இருக்கிறது' என விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWYஇனவெறி: ``இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றுவிடு..." - மிரட்டப்பட்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்!


http://dlvr.it/T4qrFF

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...