அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் வருகின்ற ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பைத் தொடர் நடைபெற இருக்கிறது.
இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி பங்கேற்பாரா, மாட்டாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தியத் தேர்வுக்குழுவினர், இந்தத் தொடருக்கான அணியில் விராட் கோலி இடம் பெறுவதை விரும்பவில்லை என்ற ஒரு கருத்தும் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
இந்நிலையில் விராட் கோலியும் இதற்குப் பதிலளிக்கும் விதமாக, “டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரைக்கும் உலகின் பல பகுதிகளிலும் அதை விளம்பரப்படுத்தும் பேச்சுகளில் மட்டுமே என் பெயர் அதிகமாக அடிபடுகிறது. ஆனால், என்னிடம் இன்னமும் தீவிரமாக டி20 கிரிக்கெட் ஆடுவதற்கான திறமை இருக்கிறது” என்று கூறியிருந்தார்.விராட் கோலி
தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஆரோன் பின்ச், விராட் கோலிக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். “ஐ.சி.சி தொடர் ஒவ்வொரு முறை வரும்போதும் விராட் கோலியை பற்றி மட்டுமே ஏன் பேசுகிறார்கள்? இந்திய அணியில் அவரது இடத்திற்கு அழுத்தம் கொடுக்கிறார்களா என்று எனக்குப் புரியவில்லை.MI vs SRH: "இப்படி நடக்கும் என்று உண்மையில் நினைக்கவில்லை!" - தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா
நான் பார்த்ததில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவர் ஒரு மிகச்சிறந்த வீரர். விராட் கோலி 140 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடட்டும். இன்னொரு வீரர் 160 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடக் கூடியவராகக் கூட இருக்கட்டும்.ஆரோன் பின்ச்
ஆனால் அவரை அணிக்குத் தேர்வு செய்யும்போது ஒவ்வொரு முறையும் பெரிய போட்டிகளில் ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்கிறார். இப்படி இருக்கும்போது அவர் தேவையா, தேவையில்லையா என்ற பேச்சுகள் எல்லாம் வேடிக்கையாக இருக்கின்றன" என்று கூறியிருக்கிறார்.
http://dlvr.it/T4lTfm

Comments
Post a Comment