Skip to main content

Doctor Vikatan: Kidney stones இருந்தால் கீரைகளைத் தவிர்க்க வேண்டுமா?

Doctor Vikatan: சிறுநீரகக் கல் ( Kidney stones ) பிரச்னை உள்ளவர்கள், கீரைகள் மற்றும் தக்காளி சாப்பிடக்கூடாது என்று கேள்விப்பட்டேன். அது எந்த அளவுக்கு உண்மை? 

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்து, உடலை நீர் வறட்சியின்றி வைத்துக்கொள்ளாவிட்டால், சிறுநீரகக் கல் பிரச்னை மீண்டும், மீண்டும் தொடரும். கிட்னி ஸ்டோன்ஸ் வராமலிருக்க சில வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டியதும் அவசியம். 

கிட்னி ஸ்டோன்ஸ் என்பவை ஆக்ஸலேட் கற்களைக் குறிக்கும். கீரைகளில் சிறுநீரகக் கற்களை உருவாக்கும் ஆக்ஸலேட் அதிகம். அதாவது  100 கிராம் கீரையில் 755 மில்லிகிராம் அளவுக்கு ஆக்ஸலேட் (Oxalates) இருக்கும். எனவே, கிட்னி ஸ்டோன் பிரச்னை உள்ளவர்கள், கீரை, குறிப்பாக பசலைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்ப்பதே நல்லது. சிறுநீரகக் கல் பாதிப்புள்ளவர்கள், தக்காளி எடுத்துக்கொள்ளலாமா என்ற கேள்வியும் பலருக்கு உண்டு.  தக்காளி சாஸில் 17 மில்லிகிராம் ஆக்ஸலேட் உள்ளது.  எனவே, வாரத்தில் 3 நாள்களுக்கு மட்டும் தக்காளி சேர்த்துக்கொள்ளலாம். தக்காளி சாஸ் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது.

tomato

அரிசித் தவிட்டில் 281 மில்லிகிராம் அளவுக்கு ஆக்ஸலேட் உள்ளதால் அதையும் தவிர்க்கவும். அவகேடோ, பேரீச்சம்பழம், கிவி, ப்ரூன் மற்றும் அத்திப் பழங்களிலும் ஆக்ஸலேட் அளவு அதிகம் என்பதால் இவற்றையும் தவிர்ப்பதே சிறந்தது. இவற்றுக்கு பதில் ஆரஞ்சுப் பழம் சாப்பிடலாம். சிட்ரஸ் பழங்கள் எல்லாமே சாப்பிடலாம்.  பால், யோகர்ட், சீஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். தினசரி கீரை சாப்பிடுவது ஆரோக்கியமானது என்ற எண்ணத்தில் அதை அளவுக்கதிகமாகச் சாப்பிட வேண்டாம். ஆரோக்கியமான உணவு என்றாலும் அளவோடு சாப்பிடுவதுதான் சரியானது. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...