தமிழ்நாட்டில் கடந்த 29 நாள்களில் 30 நபர்கள் மூலம், 189 உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் TRANSTAN தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி விபத்து, புற்றுநோய், பிறவிக் குறைபாடு மற்றும் தீக்காயம் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள், அவர்களின் குடும்பத்தினரின் முழு சம்மதத்தோடு, அறுவை சிகிச்சையின் மூலம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வோர் ஆண்டும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு மாற்று உறுப்புகள் தேவைப்படுவதன் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அத்துடன் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விதிகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் நாள்தோறும் ஏராளமான சாலை விபத்துகள் ஏற்படுகிறது. போக்குவரத்துக் காவல்துறையினரின் அறிவிப்புகள், போக்குவரத்து விதிகள் என எவற்றையும் மதியாது சரியான பாதுகாப்பு வசதிகள் இல்லாது (ஹெல்மட், சீட் பெல்ட் போடாமல்), பலர் வாகனங்களில் பயணம் செய்கின்றனர். இதனால் பெரிய அளவிலான ஆபத்துகளும், சில நேரங்களில் மூளைச்சாவு ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதையடுத்து...