Skip to main content

Happy Teeth: வாய் துர்நாற்றம் நீங்க சூயிங்கம் மெல்வது தீர்வாகுமா?

பற்களை ஆரோக்கியமாகப் பராமரித்தால் பற்களில் பிரச்னை வராமல் தடுக்க முடியும். அந்த வகையில், பல் ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்கள், அதற்கான தீர்வுகள் பற்றி பேசியிருக்கிறார் சென்னையைச் தேர்ந்த பல் மருத்துவர் ஏக்தா:

பல் ஆரோக்கியத்துக்கு உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை இரண்டுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அனைத்து சத்துகளும் அடங்கிய சமச்சீர் உணவாக எடுத்துக்கொள்வது உடல்நலத்துக்கு மட்டுமல்ல பற்களின் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள் போன்ற பழங்கள் இயற்கையாக பற்களை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டவை.

ஃபிரெஷ்ஷான காய்கறிகள், பழங்கள் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பழங்களை ஜூஸாக இல்லாமல் அப்படியே கடித்துச் சாப்பிட வேண்டும். வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள் போன்ற பழங்கள் இயற்கையாக பற்களை சுத்தப்படுத்தும் தன்மை (Cleansers) கொண்டவை. சில நேரங்களில் துர்நாற்றத்தையும் இவை கட்டுப்படுத்தும்.

அதேபோல பூண்டு, வெங்காயம் உள்ளிட்ட சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடும்போது வாய் துர்நாற்றம் வீசும். அதுபோன்ற நேரங்களில் இரவு கட்டாயம் பிரஷ் செய்ய வேண்டும்.

மறுநாள் காலையில் வாயில் துர்நாற்றம் வீசுவதை இது தடுக்கும். அளவுக்கு அதிகமாக காபி, டீ குடிக்கும்போது வயிற்றில் அசிடிட்டி ஏற்படுவதோடு பற்களில் கறையும் ஏற்படும். எனவே, காபி, டீ அளவோடு குடிக்க வேண்டும். காபி, டீ குடித்த உடன் சிறிது தண்ணீர் குடித்தால் பற்களில் கறை படிவது சிறிது தடுக்கப்படும். உணவில் தயிர், மோர் சேர்த்துக்கொள்வது நல்லது. இவற்றில் காணப்படும் நல்ல பாக்டீரியாக்கள் (Probiotics) பற்களை, வாயை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டவை.

Coffee

சூயிங்கம்

துர்நாற்றத்துக்கு தாற்காலிக தீர்வாக சூயிங்கம் மெல்லலாம். அவையும் பற்களை, வாயை சுத்தப்படுத்தி, துர்நாற்றத்தைக் குறைக்கும். ஆனால் அதுவே பழக்கமாக மாறிவிடக்கூடாது. அளவுக்கு அதிகமாக சூயிங்கம் மெல்லும்போது தாடைப்பகுதியிலுள்ள தசைகள் சோர்வடையும். மேலும் ஈறுகளில் எரிச்சலுணர்வு ஏற்படலாம்.

சூயிங்கம்மில் காணப்படும் இனிப்பு மற்றும் சுவை போன பிறகு அது எரிச்சலூட்டும் பொருளாக மாறிவிடும். விளையாட்டு வீரர்கள் களத்தில் நிற்கும்போது சூயிங்கம் மெல்வதைப் பார்த்திருப்போம். மனப்பதற்றத்தைத் தடுப்பதற்காகவும் கவனத்தைக் குவிப்பதற்காகவும் சில வீரர்கள் அதனை மெல்வார்கள். எல்லாரும் அதைப் பின்பற்றுவது சரியான பழக்கம் அல்ல.

பற்களின் ஆரோக்கியத்துக்கு கரும்பு நல்லது

பற்களின் ஆரோக்கியத்துக்கு கரும்பு சாப்பிடுவது நல்லது. கரும்பைப் பற்களால் கடித்துச் சாப்பிட வேண்டும். ஜூஸாக மாற்றி சாப்பிடுவது பற்களின் ஆரோக்கியத்துக்கு பங்களிக்காது. கரும்பை அப்படியே கடித்துச் சாப்பிடுவது கடினமாக இருந்தால் சிறிய துண்டுகளாக வெட்டி அதை மென்று சாப்பிடலாம். கரும்பை அப்படியே கடித்துச் சாப்பிடும்போது முன்பற்களால் அல்லாமல் கடவாய்ப் பற்களைப் பயன்படுத்திக் கடிக்க வேண்டும்.

கார்பனேட்டட் குளிர்பானங்கள் அளவுக்கு அதிகமாகக் குடிக்கும்போது பற்களின் எனாமல் பாதிக்கப்படும். அதிலிருக்கும் அளவுக்கு அதிகமான இனிப்பு பற்களில் சொத்தையை ஏற்படுத்தும். அரிசி, சாக்லேட் உள்ளிட்ட கார்பாஹைட்ரேட் அதிகம் காணப்படும் உணவுகளும் பற்களை பாதிக்கும். அந்த உணவுகள் பற்களில் சென்று சிக்கும்போது, வாயிலிருக்கும் நுண்ணுயிரிகள் அதில் சேரும்போது ஒருவகையான ரசாயனம் உருவாகும்.

பல் மருத்துவர் ஏக்தா

இது பற்களில் கறுப்பு நிறத்தில் சிதைவை (Decay) ஏற்படுத்தும். இது அதிகரிக்க அதிகரிக்க பற்சிதைவு அதிகரித்து பல் சொத்தையாக மாறும். கார்போஹைட்ரேட் உணவுகள் நமது அன்றாட வாழ்க்கையின் அங்கமாகிவிட்டதால் அவற்றை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க முடியாது.

ஆனால் பாதிப்பைத் தவிர்ப்பதற்கு சாப்பிட்ட பிறகு வாய்க் கொப்பளித்தல், இரவு தூங்குவதற்கு முன்பு பிரஷ் செய்வது ஆகியவற்றைச் செய்ய வேண்டும். பற்களில் சிதைவோ, சொத்தையோ தென்பட்டால் அதை நாக்கு வைத்தோ, பிற பொருள்களை வைத்தோ தீண்டிக்கொண்டே இருக்கக்கூடாது. சாக்லேட், சிப்ஸ் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக்கூடாது" என்றார்.

carbonated drinks

பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்கும் Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும்.

பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பல் மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...