Skip to main content

Doctor Vikatan: விரதமிருக்கும்போது ஏற்படுகிற மயக்கம்... தீர்வு உண்டா?

Doctor Vikatan: நான் சமீபகாலமாக விரதம் இருக்க ஆரம்பித்திருக்கிறேன். ஆனால், நான்கைந்து மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்தாலே லேசாக மயக்கம் வருவது எதனால்... இதற்கு என்ன தீர்வு?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

பல மாதங்களாக, வருடங்களாக நீங்கள் விரதம் இருந்திருக்க மாட்டீர்கள். அதனால் திடீரென எதுவும் சாப்பிடாத நிலையில், உங்கள் உடலானது அதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதற்கு நேரம் எடுக்கும்.

சமீப காலமாக பலருடம் இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்ற டயட் முறையைப் பின்பற்றுவதைப் பார்க்கிறோம். உங்கள் விஷயத்திலும் நீங்கள் உங்களுக்குத் தெரிந்த யாரோ அதைப் பின்பற்றுவதைக் கேள்விப்பட்டு நீங்களும் அதைச் செய்ய நினைத்திருக்கலாம். இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் முறையில் 8 மணி நேரம், 10 மணி நேரம், 12 மணி நேரம், 16 மணி நேரம் என அவரவர் விருப்பத்துக்கேற்ப இடைவெளி எடுத்துக்கொள்வார்கள். 

இளநீர்! #TenderCoconut

நீங்களும் பல மணி நேரம் சாப்பிடாமல் இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட நிலையில் உங்களுக்கு உடல் பலவீனமானது போலவோ, வெலவெலத்துப் போனது போலவோதான் இருக்கும். திடமாக எதுவும் சாப்பிடாமல் இருக்கும் இடைவெளியில் வெறும் தண்ணீருக்கு பதில், இளநீர், எலெக்ட்ரால், நீர்மோர் போன்றவற்றைக் குடிக்கலாம். இதெல்லாம் உடல் வெலவெலத்துப் போகாமல் காக்கும். மயக்கமும் வராது.

விரதமிருப்பதற்கு உங்கள் உடலானது பழக வேண்டும். முதலில் குறைந்த மணி நேரத்திலிருந்து தொடங்கவும். இரண்டு, மூன்று முறை அதைப் பின்பற்றினால் உடல் அதற்குப் பழகிவிடும்.  ஆனால், சிறிது நேரம் சாப்பிடாமல் இருந்தாலே உடல் வெலவெலத்துப் போவது போல உணர்ந்தால் நீங்கள் ரத்தச் சர்க்கரை அளவை செக் செய்யுங்கள். உங்களுக்கே தெரியாமல் உங்களுக்கு நீரிழிவு பாதித்திருக்கலாம். 

களைப்பு | மாதிரிப்படம்

எனவே, முதலில் நீரிழிவுக்கான பரிசோதனை மேற்கொண்டு, ஒருவேளை அது உறுதியானால் முறையான சிகிச்சைகளைப் பின்பற்றத் தொடங்குங்கள். உங்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் 'தாழ்சர்க்கரை நிலை' இருக்கிறதா என்றும் பாருங்கள். நீரிழிவு பாதித்தோருக்கு விருந்தும் கூடாது, விரதமும் கூடாது என்று சொல்வோம். அந்தவகையில் ஒருவேளை உங்களுக்கு நீரிழிவு இருந்தால், நீங்கள்  இப்படி பலமணி நேரம் சாப்பிடாமல் இருப்பதை அவசியம் தவிர்க்க வேண்டும். 

மற்றபடி, சாதாரண நபர்களுக்கு விரதமிருக்கத் தொடங்கிய புதிதில் உடல் பழகும்வரை பலவீனமாக இருக்கும். போகப் போகப் பழகிவிடும். சர்க்கரைத் தண்ணீரோ, சர்க்கரை சேர்த்த ஜூஸோ குடிக்காமல், வெறும் பழச்சாறு குடிக்கலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...