Skip to main content

மலேரியாவுக்கு தடுப்பூசி... கொசுவினால் பரவும் நோய்க்கு எதிரான போராட்டத்தில் மைல்கல்..!

மலேரியாவுக்கு எதிரான உலகின் முதல் ரொட்டீன் தடுப்பூசி திட்டம், ஆப்பிரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றும் நடவடிக்கையாக கேமரூனில் தொடங்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி, ஒவ்வோர் ஆண்டும் 6,00,000 பேர் ஆப்பிரிக்காவில் மலேரியாவால் உயிரிழக்கின்றனர். அதில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு 80% உள்ளது. 2021-ம் ஆண்டில், உலகளவில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 95%, மற்றும் மலேரியா பாதித்து உயிரிழந்தவர்களில் 96% ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

மலேரியா தடுப்பு மருந்து

இதைத் தடுக்கும் வகையில் மலேரியாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூனில் உள்ள சுகாதார நிலையத்தில் டேனியலா என்ற பெண் குழந்தைக்கு முதல் மலேரியா தடுப்பூசி வழங்கப்பட்டது.

கேமரூனில், ஆறு மாதத்துக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் இலவசமாக மலேரியா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. மொத்தம் நான்கு தவணைகளாக இந்தத் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு பிற தடுப்பூசிகளுடன் சேர்த்து இதுவும் வழங்கப்படும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலேரியாவுக்குத் தடுப்பூசி

திட்டம் தொடங்குவதற்கு முன்பாக கென்யா, கானா மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் மாதிரித் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. அதில் தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தைகள் மலேரியா பாதித்து இறக்கும் எண்ணிக்கை குறைந்தது தெரியவந்தது. இந்தத் தடுப்பூசியானது மூன்றில் ஓர் உயிரைக் காப்பாற்றக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தில் கொசு வலைகள் மற்றும் மலேரியா மாத்திரைகளுடன் தடுப்பூசியும் முக்கியமான கூடுதல் கருவியாகப் பயன்படும் என்று நம்பப்படுகிறது. இந்த மூன்றையும் ஒன்றாகப் பயன்படுத்தும்போது குழந்தைகளுக்கு மலேரியாவிலிருந்து 90% பாதுகாப்பை அளிக்கும் என்று மற்றோர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Vaccine

மலேரியா தடுப்பூசியை உருவாக்க பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜிஎஸ்கே 30 ஆண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இந்தத் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனமும் ஒப்புதல் அளித்துள்ளது. கொசுக்களால் பரவும் நோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஒரு வரலாற்றுத் தருணம் இது என்று கருதப்படுகிறது.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...