Skip to main content

`கடந்த 29 நாள்களில் 189 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டிருக்கின்றன!' - TRANSTAN தகவல்

தமிழ்நாட்டில் கடந்த 29 நாள்களில் 30 நபர்கள் மூலம், 189 உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் TRANSTAN தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி விபத்து, புற்றுநோய், பிறவிக் குறைபாடு மற்றும் தீக்காயம் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள், அவர்களின் குடும்பத்தினரின் முழு சம்மதத்தோடு, அறுவை சிகிச்சையின் மூலம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வோர் ஆண்டும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு மாற்று உறுப்புகள் தேவைப்படுவதன் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அத்துடன் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விதிகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் நாள்தோறும் ஏராளமான சாலை விபத்துகள் ஏற்படுகிறது. போக்குவரத்துக் காவல்துறையினரின் அறிவிப்புகள், போக்குவரத்து விதிகள் என எவற்றையும் மதியாது சரியான பாதுகாப்பு வசதிகள் இல்லாது (ஹெல்மட், சீட் பெல்ட் போடாமல்), பலர் வாகனங்களில் பயணம் செய்கின்றனர். 

இதனால் பெரிய அளவிலான ஆபத்துகளும், சில நேரங்களில் மூளைச்சாவு ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதையடுத்து, விபத்துகளில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் யாருக்கும் பலனில்லாமல் வீணாய் மண்ணுக்குத்தான் செல்கிறது. உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் இதற்கான முக்கியக் காரணமாக விளங்குகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.

அதன்படி, மூளைச்சாவு அடைந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், உடல் உறுப்பு தானம் அளிக்க ஒப்புதல் அளித்தவுடன்தான், உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் உடல் உறுப்பு தானம் செய்தவரின் இல்லத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கில், மாவட்ட ஆட்சியர் நேரடியாகப் பங்கேற்பதோடு இறந்தவருக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதல்வர் சட்டமன்றத்தில் வெளியிட்ட இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின்  எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவதோடு, உடல் உறுப்பு தானம் குறித்து சாமானிய மக்களுக்கும்  விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும், அதிகப்படியான நபர்கள் தற்போது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 29 நாள்களில், 30 பேர் தங்களின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர் என்று, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN) தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி 2024 ஜனவரி 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 2008 - ஆண்டுக்குப் பிறகு ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.

தற்போதைய நிலவரப்படி, சிறுநீரகம் 48 பேர், கல்லீரல் 27 பேர், இதயம் 10 பேர், நுரையீரல் 13 பேர் என மொத்தம் 30 நபர்களிடமிருந்து 189  உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளதாகவும், இதனால் உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் பலருக்கு இது பயன்படும் எனவும் TRANSTAN தெரிவித்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...