உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில், நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் இருளில் தவிப்பதாக உக்ரைன் அதிபர் தெரிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், ஐ.நா-வின் முக்கிய தலைவர் மார்டின் கிரிஃபித்ஸ் (Martin Griffiths), ஆப்கானிஸ்தான் சென்று அங்குள்ள தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. டெஸ்லாவின் பங்குகள் தொடர்ந்து சரிந்த நிலையில் இருப்பதால், அது குறித்து கவலைப்பட வேண்டாம் என ஊழியர்களுக்கு எலான் மஸ்க் அறிவுரை வழங்கியிருக்கிறார். இரானில் மாசா அமினிக்கு ஆதரவாக நடந்துவரும் போராட்டங்களில் கலந்துகொள்பவர்களுக்கு அரசு மரண தண்டனை விதிப்பதை நிறுத்த வேண்டும் என இரான் அரசுக்கு இத்தாலி கண்டனம் தெரிவித்திருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், இன்று காணொளி காட்சி வாயிலாகச் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.பீலே பிரேசில் நாட்டைச் சேர்ந்த, கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார். மூன்று முறை உலகக்கோப்பையை வென்ற பீலே, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை...