உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில், நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் இருளில் தவிப்பதாக உக்ரைன் அதிபர் தெரிவித்திருக்கிறார்.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், ஐ.நா-வின் முக்கிய தலைவர் மார்டின் கிரிஃபித்ஸ் (Martin Griffiths), ஆப்கானிஸ்தான் சென்று அங்குள்ள தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
டெஸ்லாவின் பங்குகள் தொடர்ந்து சரிந்த நிலையில் இருப்பதால், அது குறித்து கவலைப்பட வேண்டாம் என ஊழியர்களுக்கு எலான் மஸ்க் அறிவுரை வழங்கியிருக்கிறார்.
இரானில் மாசா அமினிக்கு ஆதரவாக நடந்துவரும் போராட்டங்களில் கலந்துகொள்பவர்களுக்கு அரசு மரண தண்டனை விதிப்பதை நிறுத்த வேண்டும் என இரான் அரசுக்கு இத்தாலி கண்டனம் தெரிவித்திருக்கிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், இன்று காணொளி காட்சி வாயிலாகச் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.பீலே
பிரேசில் நாட்டைச் சேர்ந்த, கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார். மூன்று முறை உலகக்கோப்பையை வென்ற பீலே, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்போடியா நாட்டில் காசினோ ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர், மேலும் 30 பேர் மாயமாகியிருக்கின்றனர்.
கொரோனா பரவல் எதிரொலியாக அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், தைவான், இத்தாலி, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், இங்கிலாந்து உட்பட உலகின் பல நாடுகளில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
180 மில்லியன் டாலர் மதிப்பிலான பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களை தைவானுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
இங்கிலாந்தின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் வியென்னே வெஸ்ட்வுட் (Vivienne Westwood) 81 வயதில் காலமானார்.
http://dlvr.it/Sg9yNs
http://dlvr.it/Sg9yNs
Comments
Post a Comment