Skip to main content

இலவச வேட்டி சேலை திட்டம்: "நெசவாளர்களிடமும் 10% கமிஷன் கேட்பவர்தான் அமைச்சர் காந்தி" - அண்ணாமலை

இலவச வேட்டி சேலை திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ.487.92 கோடியை வெளிமாநிலத்தின் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க திட்டமிட்டிருந்தால், அதை பார்த்துக்கொண்டு தமிழக பா.ஜ.க சும்மா இருக்காது என அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் ஏழை, எளிய மக்கள் புத்தாடைகள் அணிய வேண்டும் என்பதற்காகவும், கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துக்காகவும் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 1983-ம் ஆண்டு கொண்டுவந்தத் திட்டம் தான் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம்.

எம்.ஜி.ஆர்

தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும், இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆட்சிக்கு வந்ததிலிருந்து முந்தைய ஆட்சி காலங்களில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றையும் கிடப்பில் போடும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது தி.மு.க அரசு.

வரும் பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்க நினைத்த தி.மு.க தற்போது இலவச வேட்டி, சேலை திட்டத்தை முடக்கி நெசவாளர்களையும் வஞ்சிக்க நினைக்கிறது. தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நெசவாளர் பெருமக்கள் வசிக்கிறார்கள். ஆயிரத்துக்கும் அதிகமான கைத்தறி நெசவாளர் குடும்பங்கள், இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2021-ம் ஆண்டிலேயே, அதிகமான அளவில் தனியாரிடம் கொள்முதல் செய்து நெசவாளப் பெருமக்கள் வயிற்றில் அடித்த இந்த தி.மு.க அரசு, அடுத்த ஆண்டு இவ்வாறு நடக்காது என்று கூறியிருந்த நிலையில், இந்த ஆண்டும் பெருமளவில் தனியாரிடம் கொள்முதல் செய்வதற்கு திட்டமிட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் விலையில்லா வேட்டி சேலை உற்பத்திக்கான அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்குவது வழக்கம்.

முதல்வர் ஸ்டாலின்

ஆனால், இந்த ஆண்டு மூன்று மாதங்கள் தாமதமாக, அக்டோபர் மாதம் தான் அரசாணை வெளியானது. அத்துடன் அரசு வழங்கிய நூல் தரம் குறைவாக இருந்ததால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர் நெசவாளப் பெருமக்கள்.

வழக்கமாக டிசம்பர் மாத இறுதியில் 80 சதவிகித அளவுக்கு விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தி பணிகள் முடிந்திருக்கும். ஆனால், தற்போது சேலை உற்பத்தி 42 சதவிகிதமும், வேட்டி உற்பத்தி 29 சதவிகிதம் மட்டுமே முடிவடைந்திருப்பதாக கவலை தெரிவித்திருக்கின்றனர். மூன்று மாதங்கள் கால தாமதமாக விலை இல்லா வேட்டி, சேலை உற்பத்திக்கான உத்தரவு வழங்கப்பட்டதாலும், தரமற்ற நூல் வழங்கி உற்பத்தியில் மேலும் தாமதப்படுத்தியதாலும், பொங்கலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், மொத்த உற்பத்தியையும் நிறைவேற்ற முடியாது என்று அச்சப்படுகின்றனர் நெசவாளர்கள்.

மொத்த உற்பத்திக்கான தரமான நூலை, வெறும் 1 மாதம் முன்பாக கடந்த நவம்பர் மாதம் தான் வழங்கி இருக்கிறது தி.மு.க அரசு. ஏழை எளிய மக்களும், நெசவாளர் பெருமக்களும் பலன் பெறும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த விலை இல்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம். தி.மு.க-வுக்கு ஆதரவான தனியார் நிறுவனங்கள் மட்டுமே பயனடையும் படி மடைமாற்றம் செய்யப்படுகிறது என்று எண்ணும்படி நடந்து கொள்கிறது.

கைத்தறிதுறை அமைச்சர் காந்தி

ஒரு சேலை 200 ரூபாயும், ஒரு வேட்டிக்கு 75 ரூபாயும் பெற்றுக் கொண்டு நெசவு செய்யும் தொழிலாளர்களிடமும் 10% கமிஷன் கேட்பவர்தான் தி.மு.க-வின் கைத்தறி அமைச்சர் காந்தி. வேண்டுமென்றே நூல் கொள்முதல் உத்தரவை தாமதப்படுத்தி, தரமற்ற நூல் வழங்கி, அதன் மூலம் உற்பத்தியையும் தாமதப்படுத்தி இறுதியில் இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டதாக அறிவித்த ரூ. 487.92 கோடியை வெளிமாநிலத்தின் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க திட்டமிட்டிருந்தால், அதை பார்த்துக்கொண்டு தமிழக பா.ஜ.க சும்மா இருக்காது என்பதை மிகப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...