சுற்றுலா மாநிலமான புதுச்சேரி வருடம் முழுவதுமே சுற்றுலாப்பயணிகளால் நிறைந்து காணப்படும். பிரெஞ்சு கட்டடக்கலையையும், பிரெஞ்சு ஆளுநர்களின் பெயர்களையும் தாங்கி நிற்கும் வீதிகளைக் காண்பதற்கும், வீதிகள்தோறும் அணிவகுத்து நிற்கும் மதுக்கடைகளில் விதவிதமான மது வகைகளைச் சுவைத்துப் பார்க்கவும் பொதுமக்கள் வார இறுதி நாள்களில் புதுச்சேரியில் தஞ்சமடைந்துவிடுவார்கள்.
சில நாள்களுக்கு முன்பு தனியார் பயண ஏற்பாடு நிறுவனம் இணையத்தில் செய்த கணக்கெடுப்பில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு இந்தியப் பயணிகளால் அதிகம் தேடப்படும் இடங்களில் புதுச்சேரி முதலிடம் பிடித்திருந்தது. அதனால் சுற்றுலாத்துறையும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும்விதமாக இசை, நடன நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டுக்குத் தயாராகிவருகிறது. அதேபோல தனியார் விடுதிகள், தங்கும் அறையுடன்கூடிய பார்களிலும் இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.புதுச்சேரி
இதைப் பயன்படுத்திக்கொண்ட தனியார் விடுதிகள், கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்பிருந்தே, தங்களது அறை வாடகையைப் பல மடங்கு உயர்த்திவிட்டன எனக் கூறப்படுகிறது. மேலும் சில விடுதிகளில், `ஜனவரி 2-ம் தேதி வரை அறைகள் இல்லை' எனச் செயற்கையான தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியிருக்கின்றன எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. நகருக்குள் இருக்கும் சிறிய விடுதிகளில், சாதாரண நாள்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட நான்கு மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக, அண்ணாசாலையில் இருக்கும் சிறிய விடுதிகளில் சாதாரண நாள்களில் 24 மணி நேரத்துக்கு வசூலிக்கப்படும் வாடகை ரூ.2,500. ஆனால், அதே அறை தற்போது ’கிறிஸ்துமஸ் பேக்கேஜ்’ என்ற பெயரில் ரூ.8,000-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
அதேபோல நட்சத்திர அந்தஸ்து பெற்ற விடுதிகளில் இரண்டு முதல் மூன்று மடங்குவரை அறை வாடகை உயர்த்தப்பட்டிருக்கிறது. நகருக்குள் இருக்கும் நட்சத்திர விடுதிகளில் சதாரண நாள்களில் 12 மணி நேரத்துக்கு சுமார் ரூ.7,000 வசூலிக்கப்படும். அது தற்போது சுமார் ரூ.16,000 வரை உயர்த்தப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. விடுதிகளின் புதிய வாடகைப் பட்டியலைப் பார்த்து அதிர்ச்சியடையும் சுற்றுலாப்பயணிகள், புதுச்சேரியை ஒட்டிய தமிழகப் பகுதிகளான கோட்டக்குப்பம், சின்னமுதலியார் சாவடியிலிருக்கும் விடுதிகளை நோக்கிப் படையெடுத்துவருகிறார்கள். "புதுச்சேரி டு யாழ்ப்பாணம் - சொகுசு கப்பலில் ஜாலி டூர் போகலாம்!"- இலங்கை அமைச்சர் தகவல்
http://dlvr.it/Sg7bRV
http://dlvr.it/Sg7bRV
Comments
Post a Comment