`48 மணி நேரத்திற்குள் நீரிழிவு நோயைக் குணப்படுத்தக்கூடிய மருந்து உள்ளது' என்று மூத்த நீரிழிவு மருத்துவர் வி மோகன் உத்தரவாதம் அளிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி பலரின் கண்டனங்களைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்டது என மருத்துவர் குற்றம் சாட்டியிருக்கிறார். திருநெல்வேலி இந்திய மருத்துவ சங்கத்தின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், அம்மருத்துவர் ஹிந்தியில் பேசுகிறார். அந்த மருந்து விளம்பரத்தில், மருத்துவர் மோகனின் உண்மையான காணொளியையும் அவரது குரலில் மாற்றப்பட்ட பதிப்பையும் இணைத்துள்ளனர். வல்லுநர்கள் ஏஐ உடன் இணைத்து இந்த வீடியோ (Deepfake videos) உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறியுள்ளனர். இது குறித்து மோகன் நவம்பர் 2023-ல் தமிழ்நாடு காவல்துறை சைபர் செக்யூரிட்டி பிரிவில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த வீடியோவை நீக்கினர். ஆனால், மீண்டும் அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவத்தொடங்கி இருக்கிறது என்கிறார் மருத்துவர். Doctor (Representational Image) Doctor Vikatan: சர்க்கரைநோய் கிடையாது; தினமும் இனிப்பு சாப்ப...