Skip to main content

Doctor Vikatan: பீரியட்ஸுக்கு  முன்பே உடலை அதற்குத் தயார்படுத்துவது சாத்தியமா?

Doctor Vikatan: பீரியட்ஸுக்கு சில நாள்கள் முன்பிருந்தே மனநிலையிலும் உடல்நிலையிலும் நிறைய மாற்றங்களை உணர்கிறோம். சில நாள்கள் மிகுந்த உற்சாகமாக உணர்கிறோம். இன்னும் சில நாள்களில் அதீத எரிச்சலாக உணர்கிறோம்.  பீரியட்ஸ் சுழற்சிக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா.... பீரியட்ஸ் நாள்களை சிரமமின்றி எதிர்கொள்ள, முன்கூட்டியே உடலைத் தயார்படுத்துவது என்பது சாத்தியமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

நித்யா ராமச்சந்திரன்

உங்களுக்கு 28 நாள்களுக்கொரு முறை மாதவிடாய் வருகிறது என வைத்துக்கொள்வோம். அதை 4 நிலைகளாகப் பிரிக்கலாம்.  அதன்படி 1 முதல் 7 நாள்கள்வரை  'மென்ஸ்டுரல் ஃபேஸ்', 8 முதல் 13 நாள்கள் வரை 'ஃபாலிக்குலர் ஃபேஸ்', அடுத்த 14-21  நாள்கள்வரை  'ஓவுலேட்டரி ஃபேஸ்' ம், அதற்கடுத்த நாள்களை, 22 முதல் 28 நாள்கள்வரை 'லூட்டியல் ஃபேஸ்' என்றும் சொல்கிறோம்.

மாதத்தின் எல்லா நாள்களிலும் ஒரே மாதிரி உணவுகளைச் சாப்பிடுவது, ஒரே மாதிரியான உடற்பயிற்சிகளைச் செய்வது என்றிருக்காமல், மேற்குறிப்பிட்ட இந்த நான்கு நிலைகளுக்கேற்ப உணவுப்பழக்கத்தையும் உடற்பயிற்சிகளையும் மாற்றிக் கொண்டால், பீரியட்ஸ் சுழற்சியில் ஹார்மோன்களின் ஏற்ற, இறக்கங்களால் உடல், மனநலனில் ஏற்படும் அசௌகர்யங்களை ஓரளவு சமாளிக்கலாம்.

வாக்கிங்

அதன்படி,  1 முதல் 7 நாள்கள் வரை, பீரியட்ஸின் போதான ரத்தப் போக்கு காரணமாக உடலும், மனமும் அமைதியற்று, பலவீனமாக இருக்கும். இந்த நாள்களில் வெதுவெதுப்பான சூப், காய்கறி ஸ்டியூ, இரும்புச்சத்து அதிகமான கீரைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம். உடலை வருத்திச் செய்கிற உடற்பயிற்சிகளைத் தவிர்த்து வாக்கிங் போன்ற மிதமான பயிற்சிகளைச் செய்யலாம்.

8 முதல் 13 நாள்கள் வரையிலான ஃபாலிக்குலர் ஃபேஸ் நடக்கும்போது, ஹார்மோன் அளவுகள் மெள்ள மெள்ள ஏறத் தொடங்கும்.  அதனால் உங்கள் எனர்ஜி லெவலும் அதிகரிக்கும். உற்சாகமாக உணர்வீர்கள். இந்த நாள்களில் காய்கறிகள், பழங்கள், மீன், முட்டை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றைச் சாப்பிடலாம். கடினமான உடற்பயிற்சிகள், நடனம் போன்றவற்றைச் செய்யலாம்.

உடற்பயிற்சி

14 முதல் 22 நாள்கள் வரையிலான ஓவுலேட்டரி ஃபேஸ் நடக்கும்போது, முட்டை விடுவிக்கப்படும் அண்டவிடுப்பு நிகழும். அது சினைக்குழாய் வழியே பயணம் செய்து, உயிரணுவைச் சந்தித்தால் கருத்தரிக்கும். ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமாகும். கற்பனை சக்தியும் அதிகரிக்கும். இந்த நாள்களில் மக்னீசியம் அதிகமுள்ள டார்க் சாக்லேட், கீரை, முட்டை, காலிஃப்ளவர், புரொக்கோலி போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம். கடினமான பயிற்சிகளைக்கூட செய்ய உடல் தயாராக இருக்கும்.

23 முதல் 28 நாள்கள் வரையிலா லூட்டியல் ஃபேஸ் எனப்படும் நிலையில், புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் அளவு அதிகரிக்கும்.  எனர்ஜி குறையும். வெளியே செல்ல விருப்பமின்றி, வீட்டிலேயே இருக்கத் தோன்றும். இந்த நாள்களில், ஸ்ட்ராபெர்ரி, உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றைச் சாப்பிடலாம். ஏரோபிக்ஸ் பயிற்சிகளைச் செய்யலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...