Skip to main content

Doctor Vikatan: சர்க்கரைநோய் கிடையாது; தினமும் இனிப்பு சாப்பிடலாமா..? உடலுக்கு நல்லதா?

Doctor Vikatan: எனக்கு தினமும் ஏதேனும் ஸ்வீட் சாப்பிடும் வழக்கம் உண்டு. சர்க்கரைநோய்  இல்லை. தினமும் ஏதேனும் ஒரு வேளை உணவுடன் இனிப்பு சாப்பிட்டால்தான் உணவு உண்ட முழுமையான உணர்வே கிடைக்கிறது. இதைத் தவிர்க்க முடியவில்லை. என்ன செய்வது?

பதில் சொல்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம் 

டயட்டீஷியன் கற்பகம்

ஒருவருக்கு அடிக்கடி இனிப்பு சாப்பிட வேண்டும் எனத் தோன்ற பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில உடல்ரீதியான காரணங்களாகவும், சில மனரீதியான காரணங்களாகவும் இருக்கலாம்.

பெரும்பாலும் இனிப்புத்தேடல் என்பது ரத்தத்தில் குளுக்கோஸ் சமநிலையின்மையின் அறிகுறியாகவே வெளிப்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது, ஏதேனும் இனிப்பாகச் சாப்பிட வேண்டும் போலத் தோன்றும். அடுத்து இந்த விஷயத்தில் உங்கள் தூக்கமும் கவனிக்கப்பட வேண்டும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

தூக்கம்

ஒரு மனிதருக்கு தினமும் 8 மணி நேரத் தூக்கம் முக்கியம். அந்தத் தூக்கம் கிடைக்காதபோது, காலையில் எழுந்ததும் எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அந்த உணவுத்தேடல், சிலருக்கு இனிப்பு சாப்பிட வேண்டும் போலவும், சிலருக்கு உப்பான உணவுகள் சாப்பிட வேண்டும் போலவும், வேறு சிலருக்கு கார்போஹைட்ரேட் உணவுகள் சாப்பிட வேண்டும் போலவும் தோன்றலாம்.

பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன்பு, உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களின் விளைவாக இனிப்புத் தேடல் இருப்பது இயல்பு. தினமும் மதிய உணவுக்குப் பிறகு இனிப்பு சாப்பிடுவது, இரவு உணவுக்குப் பிறகு இனிப்பு சாப்பிடுவது என பலகாலமாக நீங்கள் பின்பற்றும் பழக்கம், உங்கள் நினைவில் பதிந்து, அதை  தினமும் செய்யவைத்துவிடும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. 

மாதவிடாய்

இனிப்பு உணவுகளின் மீதான அடிக்ஷன் காரணமாகவும் இப்படி தினமும் ஸ்வீட் சாப்பிடும் பழக்கம் தொடரலாம். அதேபோல, மக்னீசியம் குறைபாடு காரணமாகவும்  இனிப்புத் தேடல் ஏற்படலாம்.  உடலுக்கு ஏதோ சத்து தேவைப்படுகிறது, ஆனால் அது குறைவாக இருக்கிறது என்ற நிலையில், அது இப்படி இனிப்புத் தேடலாக வெளிப்படும்.

இந்தப் பழக்கத்தை எளிதாகச் சமாளிக்கலாம். நீங்கள் தினமும் சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட், புரோட்டீன் இருக்க வேண்டும். புரோட்டீன் என்பது பால், முட்டை, நட்ஸ், சீட்ஸ், பருப்பு வகைகள், முளைகட்டிய பயறுகள், அசைவ உணவுகள் என பல வழிகளில் நமக்குக் கிடைக்கும். புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடும்போது நமக்கு வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். அதனால் உணவுத் தேடல் இருக்காது.

புரோட்டீன்

தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கிறீர்களா என்பதும் முக்கியம். உடலில் நீர்ச்சத்து குறையும்போதும்  இனிப்பான உணவுகளைச் சாப்பிடும் உணர்வோ, உப்பான உணவுகளின் மீது ஈர்ப்போ ஏற்படலாம். நட்ஸ், சீட்ஸ், வாழைப்பழம் போன்றவற்றில் மக்னீசியம் உள்ளதால், அதுவும் இந்த வகை இனிப்புத் தேடலைத் தடுக்கும். தினமும் இனிப்பு சாப்பிடுவது என்பது உங்கள் கலோரி அளவுகளை அதிகரித்து, உடல் பருமனுக்கு வழி வகுக்கும். பல் சொத்தைக்கும் காரணமாகும். உடல் பருமன் அதிகரித்தால் நீரிழிவு உள்ளிட்ட பல பிரச்னைகளும் வரும் என்பதால் இந்தப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதுதான் சரியானது. அதையும் மீறி கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் மருத்துவ உதவியை நாடுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...